பட்டிமன்றம்- 78 "மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்?"

அன்பு தோழிகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகும் மீண்டும் நடுவராக வருவதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது :)

என்ன தலைப்பு எடுக்கலாம்னு தலைப்புகள் இழையை சுத்தி சுத்தி வந்தேன். நிறைய சுவாரசியமான தலைப்புகள் தோழிகள் கொடுத்திருக்காங்க. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஆனால் நடுவருக்குத்தான் கொஞ்சம் திண்டாட்டம் ஆயிடுச்சு :(. அதுக்காக நாம அசந்துடுவோமா என்ன :)

இப்போ எந்த மாணவன் கிட்ட பேசினாலும் ஸ்ட்ரெஸ் ங்கறாங்க. சிலர் ஒருபடி மேலே போய் கத்தியும் தூக்கிடறாங்க. இப்படி மாணவர்களிடையே ஏன் இந்த மன அழுத்தம் வருதுன்னு நாம கொஞ்சம் பேசலாம்னு தோணுச்சுது.
அதுக்கு நம்ப தோழி ஆனந்தப்ரியாஅரசு வும் நல்ல தலைப்பை கொடுத்திருக்காங்க.

******* படிக்கும் பிள்ளைகளின் பெருகிவரும் மன அழுத்தத்திற்கு காரணம் பெற்றோர்களின் அதீத எதிர் பார்ப்பா........? பள்ளிகளின் அணுகுமுறையா.........?*******
இதுதான் நாம் இந்தவாரம் விவாதிக்கப் போகும் தலைப்பு.

தலைப்பை கொடுத்து உதவிய தோழி ஆனந்த ப்ரியாவுக்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும்.

எல்லா தோழிகளும் தோழர்களும் வந்து அவங்க தரப்பு வாதங்களை எடுத்து வைங்க. அப்பதானே நடுவருக்கு நல்லா புரியும்.

வாதங்களை வைக்கும் போது சில விதிமுறைகளும் இருக்கு. அதை நான் சொல்லலேன்னாலும் நம்ப தோழிகள் சரியா கடைபிடிப்பாங்கன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் புதியவர்களுக்காக விதிமுறைகள் இதோ.....

பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது. இவற்றை சார்ந்த தலைப்புகளும் தேர்வு செய்ய கூடாது.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யலாம், வாதங்கள் கூடாது.
பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.
அரட்டை... நிச்சயம் கூடாது. நலம் விசாரித்தவர், பதில் சொன்னவர் இருவருமே குற்றம் செய்தவரே.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

அன்புடன்
கவிசிவா

தோழீஸ் பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு. வந்து ஆரம்பியுங்க உங்கள் வாதத்தை. நடுவர் தெளிந்து தெளிந்து அடிவாங்க ரெடியா இருக்கார். சீக்கிரம் வாங்கோ :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் சீட்டுல கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அன்பு தோழியே... வணக்கம். நல்ல காலத்துக்கு ஏற்ற தலைப்பு. அருமையான தலைப்பை தந்த ஆனந்தபிரியா அரசுக்கு பாராட்டுக்கள்.

என்ன நடுவரே சந்தேகம்... பெற்றோரின் அதீத எதிர் பார்ப்பு தான்!!!

சீட்டு போட்டாச்சு... இந்தா வாரேன்... ரொம்ப நாளா லட்ச லட்சமா பணம் கட்டி நர்சரி சேர்ப்பவர்களை எல்லாம் ஒரு பிடி பிடிக்க ஆசை... இன்னைக்கு சிக்கினாய்ங்கைய்யா...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் ஒரு மாணவனோ அல்லது மாணவியோ வீட்டைக் காட்டிலும் அதிக நேரம் செலவிடுவது பள்ளியிலோ, கல்லூரியிலோதான் அதனால் அவர்களுக்கு அங்கிருந்துதான் ட்ரெஸ் வருது.

நடுவருக்கு வணக்கம்!! வாழ்த்துக்கள்!! பட்டி சிறப்பாக நடக்கவும், சிறப்பான தீர்ப்பை வழங்கவும் வாழ்த்துக்கள் !!!

மிகவும் அருமையான தலைப்பு. இக்காலத்திற்கு ஏற்ற தலைப்பும் கூட.... தலைப்பை கொடுத்த ஆனந்தபிரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

பட்டியில் ஏதாவது ஒரு பக்கம்தான் வாதாடணும். தலைப்பில் எந்த பக்கத்தில் வாதிடலாம் என்ற குழப்பத்திலேயே இவ்வளவு நேரம் கழிந்து விட்டது. யோசித்து ஒரு முடிவு எடுத்தாயிற்று. மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம், நிச்சயமாக பெற்றோர்களின் அதீத எதிர் பார்ப்பாகத்தான் இருக்க முடியும் என்று வாதிட விரும்புகிறேன். ஒரு வழியாக அணியை தேர்வு செய்தாகி விட்டது. இனி எங்கள் தரப்பு வாதங்களுடன் மீண்டும் வருகிறேன்.

(பட்டியில் அவ்வளவாக வாதிட்டது இல்லை . தவறு ஏதும் இருப்பின் மன்னிக்கவும் :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

அன்பு நடுவருக்கு என் முதற்கண் வணக்கங்கள். நல்ல தலைப்பை தந்த தோழிக்கும் நன்றிகள். நடுவர் அவர்களே மாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணம் பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பே என்ற அணிக்காக வாதிட வந்திருக்கிறேன். வாதங்களுடன் வருகிறேன். நான் வாதிடும் முதல் பட்டி என்பதால் தவறேதும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டுங்கள் தோழிகளே. நன்றி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நடுவரே... இந்த காலத்து பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு முக்கிய முழுமுதற்காரணம் பெற்றோரே பெற்றோரே! ஏனென்றால் ஒரு குழந்தை கருவில் உருவானதும் அது ஆணோ பெண்ணோ என்று கூட தெரியாது ஆனால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் இன்சினியராகத்தான் ஆக வேண்டும், பெண் குழந்தை என்றால் டாக்டராகத்தான் ஆக வேண்டும் என்று பல பெற்றோர் முடிவெடுக்கிறார்கள் இதனால் தங்கள் எண்ணத்தை சிறு வயதிலிருந்தே அந்த குழந்தையின் மேல் திணிக்கிறார்கள். விவரம் அறியாத வயதில் பெற்றோர் சொல் கேட்கும் பிள்ளை விவரம் தெரிந்தபின் அதன் வழியில் போக முடியாமல் மன அழுத்தம் உண்டாகிறது.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்புத்தோழி நடுவராக அரியாசணத்தில் அமர்ந்து அழகாகக் காலாட்டிக் கொண்டிருப்பது பார்க்கவே கொள்ளை அழகாக இருக்குறது.இப்பட்டியின் தீர்ப்பு நாள் வரை இதே போல் தெளிவாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!
நல்லதொரு தலைப்பை வழங்கிய அன்புத்தோழி ஆனந்தப்ரியா அரசுவிற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.

பெற்றோர்களே காரணம் என்னும் அணியில் வாதாட வந்துள்ளேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவரே ஆரம்பக்கல்வியிலேயே பெற்றோரின் ஆதிக்கம் குழந்தை மேல் திணிக்கப்படுகிறது என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நன்றாக படிக்கக்கூடிய பிள்ளை எந்த பள்ளியில் படித்தாலும் நன்றாகவே படிக்கும். அது அரசுப்பள்ளியோ லட்ச லட்சமாக கொட்டிக்கொடுத்து சேர்க்கும் தனியார் பள்ளியோ அது அந்த பிஞ்சுக்கு தெரியப்போவதில்லை. எல்லாம் பெற்றோர்கள் அனுப்பி வைப்பதுதான்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அன்பு நடுவருக்கு என் வணங்களும், வாழ்த்துக்களும் :) பட்டியில் கலந்து பின்னி பெடல் எடுக்கவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

நடுவர் அவர்களே மாதா,பிதா,குரு என்ற ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான அந்தஸ்தை பெற வேண்டிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் இன்று அந்த நிலைக்கு தகுதியற்றவராக மாறி வரும் நிலையில் மாணவர்களை படிக்க சொல்லி தூண்டி அந்த அளவுக்கு மன அழுத்தத்தை கொண்டு வருவார்களா என்பது சந்தேகமே.. ஆகையால் ஆசிரியர்களால் படிப்பு ரீதியாக மாணவர்களுக்கு மன அழுத்தம் என்பது குறைவே. தன் பிள்ளைகள் நன்கு படித்து எதிர்காலத்தில் இப்படி வரவேண்டும், அப்படி வரவேண்டும் என மாணவனின் போதிய ஆற்றலுக்கும் மேலே ஆசைப்பட்டு அவர்களை சிறுவயதிலேயே மன அழுத்தத்தில் தள்ளி எதிர்காலத்தை கேள்விக்குறியாகுவதில் பெரும்பங்கு பெற்றோர்களுக்கே.. என சொல்லி என் அணியை தேர்ந்தெடுக்கிறேன்..சிறு இடைவெளிக்கு பிறகு வாதங்களுடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே மேலே எதிரணித்தோழி சொல்லி இருக்கும் காரணம் மிகவும் வேடிக்கைக்குரியது. பள்ளியில் கல்லூரியில் போய்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறார்களா? பள்ளி கல்லூரி நேரம் போக மீதி நேரம் அதிக நேரம் வீட்டில்தான் இருக்கிறார்கள். அதை தோழி தலைகீழாக சொல்லியிருப்பதே தவறான விஷயம். அப்படியே டியூஷன் போறாங்கன்னாலும் அது யாரால போறாங்க யார் அனுப்பி போறாங்க? அவ்வளவும் பெற்றோரின் வற்புறுத்தால் மட்டுமே மட்டுமே மட்டுமே...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்