தலையில் காயம்

என்னுடைய 2 வயது 7 மாதம் மகளுக்கு 2 நாட்கள் முன்னர் தான் முடி வெட்டினோம். இப்பொழுது தலையை சுவரில் இடித்து விட்டாள். தலையில் சிறிய நெல்லிக்காய் அளவு வீங்கி உள்ளது. இரத்தம் வரவில்லை .என்ன செய்ய? தலையை தொட விட மாட்டேங்கிறாள்.வலிக்கிறது என்று சொல்லுகிறாள். எப்படி ஒத்தடம் கொடுக்கிறது?

வீங்கினால் உடனே அழுதாலும் புடிச்சு வச்சு ஐஸ் ஒத்தடம் கொடுக்கணும்

பயம் வேண்டாம். குழந்தைக்கு வீக்கம் கெட்டியாக இருக்கா, அல்லது சாஃப்ட்டாக இருக்கா? குழந்தை அடிபட்டது அழுதாளா? மயக்கம், வாந்தி ஏதும் இல்லை தானே? அப்படி இல்லைன்னா பயம் வேண்டாம். தன்னாலே வீக்கம் 1 நாளில் வத்திடும். என் பிள்ளைகள் அடிக்கடி தலையில் அடி பட்டுவிடும். நம்ம ஊரில் டாக்டர்ஸ் ஒன்னும் பண்ணாதீங்கன்னு தான் சொல்வாங்க. முக்கியமா தேய்க்க கூடாது.

விரும்பினா லேசா மஞ்சள் கரைச்சு பூசி விடுங்க வீக்கம் சீக்கிரம் குறையும்.

இங்கே எனக்கு நம்ம ஊர் டாக்டர் ஒருவர் அண்டி-இன்ஃப்லமேட்ரி மெடிசின் கொடுத்தார். அடி பட்டால் 2 நாளுக்கு கொடுத்துடுங்க, சேஃப்ட்டிக்குன்னு. நீங்க வேணும்னா உங்க குழந்தையின் மருத்துவரை கேட்டு வாங்கி கொள்ளுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா,வனிதா பதில் தந்ததற்க்கு மிகவும் நன்றி.
இங்கு(uk) ரொம்ப குளிர் அதனால் ice ஒத்தடம் கொடுக்கவில்லை.
என்னிடம் காயத்திருமேனி தைலம் இருந்த்தது அதை தடவினேன்.

அடிபட்டதும் வீக்கம் கொஞ்சம் softஆ தான் இருந்த்து. இப்போ வீக்கம் 3/4த் கம்மி ஆயிடுச்சி. இன்னும் வீக்கம் கொஞ்சம் பார்த்தால் தெரிகிற மாதிரி இருக்கிறது. அடிபட்டதும் ரொம்ப அழுதாள் கொஞ்ச நேரத்தில் normal ஆகிவிட்டாள். தொட்டால் வலிக்குதுனு சொன்னாள். வாந்தி எதுவும் இல்லை. இப்போ மறுபடியும் முன் தலையை dinning table ல் இடித்து விட்டாள். எண்ணை வேண்டாம்னு அழ ஆரம்பித்து விட்டாள். மஞ்சள் try பண்ணி பார்க்கிறேன்.
உங்கள் பதில்களை பார்த்த பிறகு மிகவும் ஆறுதலாக உள்ளது. இருவருக்கும் மிகவும் நன்றி.

தலையில் அடிபட்டால் மஞ்சள் தேய்க்க கூடாது முடி வளராதுன்னு சொல்லுவாங்க.அதுவும் இப்போ மொட்டை போட்டிருக்குறதா வேற சொல்லுறீங்க.இது நான் கேள்வி பட்டது தான்...
ஒரு வேலை யாராவது ட்ரை பண்ணி பார்த்து ஒன்னும் ஆகலைன்னா யூஸ் பண்ணுங்க.

SSaifudeen:)

மிகவும் நன்றி shameha

பயமே வேணாம்... மஞ்சள் போட்டா முடி வளராது என்பது தொடர்ந்து பயன்படுத்தும் போது தான். அதுவுமே உண்மைன்னு நான் நம்பல. :) எனக்கு கைகளில் நிறைய முடி உண்டு... மஞ்சள் பூசி குளிச்சா கொட்டிடும்னு சொன்னாங்க. சின்ன வயதில் அம்மா ரெகுலரா செய்தாங்க... நோ யூஸ்... என் கை இன்னும் கரடி மாதிரி தான் இருக்கு ;)

இப்படி காயத்துக்கு மஞ்சள் போடுவது தப்பே இல்லை. நான் வீட்டில் குழந்தைகளுக்கு அடிபட்டால் இதை தான் முதலில் செய்வேன். மருத்துவர்களிடமும் சொல்லி இருக்கேன், இதை தான் செய்தேன் என்று... அவர்களும் தப்பில்லைன்னு தான் சொன்னாங்க. என் மகன் மார்பில் கல்லில் இடிச்சு நெற்றியை ஒட்டி மண்டையில் கொழுக்கட்டை போல் வீக்கம்... மருத்துவரை பார்க்கும் முன் வீக்கம் காணாம போச்சு. :) மஞ்சள் வீக்கத்தை குறைக்கும். ஆனா திறந்த காயத்தில் போடாம இருப்பது நல்லது. ஏன்னா இப்போ நாம வாங்கும் மஞ்சள் எல்லாம் சுத்தமான மஞ்சள் இல்லையே. அதனால்.

மஞ்சள் இன்னும் நிறைய விஷயத்துக்கு நல்ல பலன் தரும்.

குழந்தைகளுக்கு வரும் வேர்குருக்கு லேக்டோ காலமைன் போட்டா சில பிள்ளைகளுக்கு அலர்ஜி ஆகி தும்முவாங்க. அவங்களுக்கு மஞ்சள் போட்ட அரிப்பு இல்லாம நல்லா இருக்கும். சிக்கிரம் குணமாகவும் செய்யும்.

டயப்பர் ரேஷஸ்... ரொம்ப புண்ணாகாத நிலையில் சிவந்து போய் மட்டுமே இருக்கும் போது கொஞ்ச நேரம் வெறும் காட்டன் ஜட்டி போட்டு விட்டு மஞ்சள் பூசி விட்டால் சீக்கிரம் சரியாகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காயத்திருமேனியே போதுமானது. மஞ்சளும் தேய்க்கலாம்.

நீங்கள் நாகர்கோவிலா?

மேலும் சில பதிவுகள்