மீன் பிரியாணி

தேதி: November 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

அரிசி - முக்கால் கிலோ
மீன் - முக்கால் கிலோ
வெங்காயம் பெரியது - 4
தக்காளி பெரியது - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
புதினா, மல்லித் தழை - தலா 5 கொத்து
எண்ணெய் - 100 மில்லி
தயிர் - அரை கப்
பன்னீர், ரோஸ் வாட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
முட்டை - ஒன்று

மீனை சுத்தம் செய்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், முட்டை, உப்பு சேர்த்து முறுகாமல் அரைபாகம் வேகுமளவு பொரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்து வைக்கவும்.
அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு துண்டு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியில் தண்ணீரை வடிகட்டி அதில் போட்டு வேக வைத்துக் வடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, புதினா சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, அவற்றோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தூள் வகைகள், தயிர், தக்காளி சாஸ், உப்பு, பன்னீர், எலுமிச்சைச் சாறு, அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்த பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு மீனை தனியாக எடுத்து விடவும்.
வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் போட்டு நன்கு கிளறி விட்டு சாதத்தின் மேல் மீன் துண்டுகளை வைத்து மூடி போட்டு, மேலே கனமான பொருளை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் தம்மில் வைக்கவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான மீன் பிரியாணி ரெடி. விரும்பினால் முந்திரியையும், வெங்காயத்தையும் நெய்யில் வறுத்து அதில் தூவி விடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹலிலா... மீன் பிரியாணி அசத்தலா இருக்குங்க. நீங்க என்ன மீன் போட்டிருக்கீங்க? என்னென்ன மீன் வெச்சு செய்யலாம் ஹலிலா? குறிப்பிற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அஸ்ஸலாம் அலைக்கும் ஹலிலா மீன் பிரியானி சூப்பர் இதே முறையில்தான் நாங்களும் செய்வோம் அருமை

நித்யா எப்படியிருக்கு உடம்பு பரவாயில்லையா மீன் பிரியானிக்கு என்ன மீன் போடலாம்னு ஹலிலாகிட்ட கேட்டிங்கள கொடுவா காக்கை வஞ்சலை இந்த மீன்ல எல்லாம் பிரியானி செய்யலாம் ஹலிலா உங்க கிட்ட கேள்வி கேட்டதுக்கு நான் சொல்லியிருக்கேன் கோவிச்சிக்காதிங்கம்மா

மீன் பிரியாணி அசத்தலா இருக்கு... நிச்சயம் உங்க முறையில் செய்து பார்க்கிறேன் . வாழ்த்துக்கள் !

ஹலிலா சம மீன் பிரியாணி,அசத்தல்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருமையான ரெசிபி. டேஸ்டும் நல்லா இருக்கும்போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஹலீமா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நான் கொடுவா மீனில் செய்து இருக்கிறேன். கொடுவா மீன், போத்தல் மீன் காக்கை மீன், வஞ்சிர மீன், இந்த மீன்ல எல்லாம் பிரியாணி செய்யலாம். வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா. நீங்களும் இப்படிதான் செய்வீங்களா...ரொம்ப சந்தோஷம் பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஜெபி வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் முஹ்சினா பதிவிற்கு ரொம்ப நன்றிமா. இன்ஷாஅல்லாஹ் சுவையும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலீமா டேஸ்டும் நன்றாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ரொம்ப அழகா இருக்கு.கண்டிப்பா சுவையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.நான் முடிவு பண்ணிட்டேன் வர்ற வெள்ளி கிழமை இதான் எங்க வீட்டில்:)யாரு யாருக்கெல்லாம் ஹலீலாவுடைய மீன் பிரியாணியை டேஸ்ட் பார்க்க ஆசையோ எங்க வீட்டுக்கு வாங்க:)ஹலீலா நீங்களும் தான்....

SSaifudeen:)

மீன் பிரியானி சூப்பர்

மீன் பிரியாணி... சூப்பர்!!! அப்படியே தட்டோட எடுத்துக்கவா??? :) ஒரு பார்ட்டிக்கு ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீஹா. சுவையும் நன்றாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றிமா..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

தர்ஷினி பதிவிற்கு ரொம்ப நன்றிமா..

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா உங்களுக்கு இல்லாததா அப்படியே எடுத்துக்குங்க அவசியம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். பதிவிற்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலி உங்களோட மீன் பிரியாணி பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு, வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருட்செல்வி சுவையும் நன்றாகவே இருக்கும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா...
மீன் பிரியாணி சூப்பர்....
நல்லா செஞ்சு இருக்கிங்க.........

ஹலீலா மீன் ப்ரியாணீ பாக்க ஸூப்பர் டேஸ்ட் ட்ரை பண்ணீட்டு சொல்கிறேன் ஃபர்ஸ்ட் டைம் உங்ககிட்ட பேசுறேன்

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா. பதிவிற்கு ரொம்ப நன்றிமா இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

jhansi உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,
சுவையான மீன் பிரியாணி
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

thanx for sharing... insha allah i vl try soon...

v.slm oru doubt