ஹெர்பிஸ். மாற்று மருத்துவ முறை இருக்கிறதா?

தோழீஸ் எனக்கு தோலில் சிறிய பிரச்சினை. லேசான ஜலதோஷம் போல் ஆரம்பித்து பின் சிறிய கொசு கடித்தது பொல் ஆரம்பித்து இரண்டு நாட்களில் அதில் நீர் கோர்த்துக் கொண்டு கொப்புளமாகி பின்னர் தானாகவே காய்ந்து விடும். காயும் வரை வலியும் சிறிது வீக்கமும் இருக்கும். மருத்துவரிடம் காண்பித்த போது இது அக்கி நோய் உருவாக்கும் வைரஸ் போல ஒரு வைரஸினால் வரும் பிரச்சினைன்னு சொல்லி ஸ்ட்ராங் டோஸ் ஆன்டி பயாட்டிக் ம் கொடுத்தாங்க. இதை மீண்டும் வராமல் முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் மீண்டும் வராமல் இருக்க லைஃப் ஸ்டைல் மாற்றம் தேவைன்னு சொல்லி சில அட்வைஸ்கள் சொன்னார்.

எட்டு மணிநேர தூக்கம் கட்டாயம். மன அழுத்தம் கோபம் இதெல்லாம் வராமல் பார்த்துக்கோங்க (நடக்கற காரியமா). முக்கியமா உடல் பலவீனமாகாமல் நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்க. அப்படீங்கறார். நானும் முடிந்த வரை இதெல்லாம் ஃபாலோ பண்றேன். அவர் சொன்ன மாதிரியே நடந்துகிட்டா பிரச்சினை இல்லைதான். ஆனால் ஒரு நாள் சரியா தூங்கலைன்னாலும் இது வந்திடுது :(. ஞாயிற்று கிழமை இரவு 3மணிநேரம்தான் தூங்கினேன். நேற்று மதியம் தும்மலில் ஆரம்பித்து இரவே கொசு கடிச்ச மாதிரி வந்து இன்னிக்கு கொஞ்சம் பெரிசாயிடுச்சு.
ஹோமியோ மருந்து எடுத்தேன்., அவரும் மருந்து கொடுத்திட்டு பழைய டாக்டர் சொன்ன மாதிரியேதான் சொன்னார். ஒரு வருடம் பிரச்சினை இல்லை. இப்போ மீண்டும் ஆரம்பிச்சாச்சு.

இது மாதிரி யாருக்காவது இருந்திருக்கா? ஏதேனும் வைத்திய முறையில் குனமாயிருக்கா? சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்.
ரொம்ப பெரிய பிரச்சினை இல்லைன்னாலும் இப்படி வாழ்நாள் முழுக்க மன அழுத்தம் கோபம் இதெல்லாம் இல்லாம எட்டு மணிநேரம் தூங்கி மகான் போல இருக்க முடியுமா? :(

//இப்படி வாழ்நாள் முழுக்க மன அழுத்தம் கோபம் இதெல்லாம் இல்லாம எட்டு மணிநேரம் தூங்கி மகான் போல இருக்க முடியுமா? :(// - ;( என்னால முடியவே முடியாது. வந்த கொசு கடி மாதிரி இருக்குறதையும் ஆத்திரத்தில் பிடிச்சு பிச்சு வெச்சுடுவேன்.

இது எனக்கு புதுசா இருக்கு... நீங்க ஏற்கனவே எங்கோ சொன்ன நினைவும் இருக்கு. நான் யாரிடமாவது கேட்டு பார்க்கிறேன். இதுக்கு என்ன செய்யலாம்னு. 23 ஆம் தேதி இங்கு சில மருத்துவர்களை சந்திப்பேன், யாரிடமாவது விசாரிக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமா வனி முன்னாடியே அக்கி பற்றிய பதிவில் இந்த பிரச்சினை பற்றி சொல்லியிருந்தேன். ஆனால் அக்கி மாதிரி இது நிறைய வராது. தூங்கலேன்னா ஒன்னு வரும். மனசு வருத்தப்பட்டு அழுதால் ரெண்டு மூணு வரும் :(. எப்படீல்லாம் கவனிச்சு வச்சிருக்கேன் பாருங்க :). கிட்டத்தட்ட ஒரு 7 வருஷமா எனக்கு இந்த பிரச்சினை இருக்கு.
வந்துட்டு ஒரு வாரம் இருந்துட்டு போயிடுச்சுன்னா கூட பிரச்சினை இல்லை. ஆனால் அப்படியே அந்த இடத்தில் ஸ்கின் கருப்பாகிடுது. இந்த கருமை மாற ரெண்டு மூணு வருஷம் ஆகுது :(. சின்னதா ஒரு மனக்குழப்பம் வந்தாலும் வேலையை காமிச்சிடுது. நான் என்ன பண்ண?

மருத்துவர்களை பார்க்கும் போது கேட்டு சொல்லுங்க வனி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

" தோலில் சிறிய பிரச்சினை. லேசான ஜலதோஷம் போல் ஆரம்பித்து பின் சிறிய கொசு கடித்தது பொல் ஆரம்பித்து" எனக்கு இதன் அர்த்தம் சரியாக தெரியவில்லை. ஜலதோஷம் என்றால் "cold" தானே. இதற்கும் தோலுக்கும் என்ன சம்பந்தம்.

எனக்கு ஒரு முறை ஒரு பிரச்னை வந்தது. முதுகெலும்பு முடியும் இடத்தில் ஐந்து அல்லது ஆறு வேர்க்குரு சேர்ந்து வந்ததுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தாங்க முடியாத கடுமையான வலி. நான் அக்கியாக இருக்குமோ என்று நினைத்தேன். மருத்துவமனைக்கு சென்றதில் இது ஹெர்பிஸ் என்று சொன்னார்கள். மருந்து கொடுத்தார்கள். மேலும் வலி கடுமையாக அதிகரிக்கும். பயப்ப்படாதீர்கள். மூன்று நாட்களில் சரியாகி விடும் என்றார்கள். அதேபோல் சரியாகிவிட்டது.

நீங்கள் சொல்வது எனக்கு சரியாக புரியவில்லை. அதுதான் ஒரு ஆர்வத்தில் கேட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

கவி..

ஆர்கானிக் அன்பில்டர் ஆப்பிள் சிடர் வினிகர் வாங்கி 1 ஈஸ்ட் 3 ரேஷ்யோவில் நீரில் கலந்து அந்த இடத்தில் தடவி பாருங்களேன். ஃபங்கஸ், இன்பக்ஷன்,வைரல் போன்ற பல பிரச்சனைக்கு நல்ல ஒரு ஆண்டிபயாடிக் மருந்து. சும்மாவே அடிக்கடி ஸ்கின் ஹெல்த்துக்காக பயன்படுத்தும் ஒன்று. நான் எப்பவும் பயன்படுத்துவேன். நல்ல பிராண்ட் வாங்குங்க. Bragg நல்ல பிராண்ட். எல்லாருக்கும் இதை தான் நான் வலியுருத்துறேன். நல்ல பலன் கிடைத்ததா சொல்றாங்க. குறிப்பா உங்களின் பிரச்சனைக்கு இல்லை என்றாலும், பொதுவான ஸ்கின் டிசிஸ்க்கு நல்லா கேட்கும். .. மருத்துவரை வேண்டுமானாலும் ஒரு முறை கேட்டு செய்ங்க. கொஞ்சம் கொஞ்சமா பயன்படுத்த ஆரம்பிங்க. எனக்கு தெரிஞ்சி தாராளம் நீங்க முயற்சி செய்யலாம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஜெயா மன்னிப்பெல்லாம் எதற்கு? நானும் முதலில் டாக்டரிடம் போனதும் தும்மல், ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, லேசான காய்ச்சல் ஏதாவது இருந்துதான்னுதான் கேட்டார். என்னடா இது ஸ்கின் பிரச்சினைக்கு போனா இவர் வேற எல்லாம் கேட்கறாரேன்னு நானும் நினைச்சேன். அவர்கிட்டயே கேட்டுட்டேன் :)

இந்த வைரஸ் தோலில் வேலையை காட்டும் முன் இது போல அறிகுறிகளை முதலில் காட்டுமாம். அடுத்தாப்புல கொசு கடி மாதிரி தடிக்கும். அப்புறம் வரிசையா எல்லாம் வரும் :). இந்த வைரஸ் ஸ்டெப் பை ஸ்டப்பா வேலையை ஆரம்பிப்பாங்க போல :)

இந்தவாட்டி ஜலதோஷம் ஆரம்பிச்சு தும்மல் போட்டு எல்லாம் வந்தாச்சு :(.

ஜெயா நீங்க எங்கு ட்ரீட்மென்ட் எடுத்தீங்க? எனக்கு மீண்டும் மீண்டும் வருவதுதன் இம்சையா இருக்கு. நான் பார்த்தவங்க எல்லாம் இது இப்படித்தான் வரும். உடல் பலவீனமாகாம பார்த்துக்கோங்கன்னுதான் சொல்றாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரம்யா. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
ஒரு நாள் தூங்காம இருந்ததுக்கு இந்தவாட்டி வைரஸ் நல்லாவே வேலையை காட்டறார். காய்ச்சலும் சேர்ந்திடுச்சு :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்