ஸ்கைப் பற்றிய சந்தேகம்...

தோழிகளே இங்கு அறுசுவைத்தோழிகள் பலரும் ஸ்கைப் (Skype) என்ற தொலைத்தொடர்பு வசதியை பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். அந்த சேவையை மொபைல் மூலம் எவ்வாறு பெறுவதென்று தெரிந்தவர்கள் தயவுசெய்து உதவுங்கள்.

நித்யா நீங்க என்ன ஃபோன் வச்சிருக்கீங்கன்னு தெரியலை. app store, play store இப்படி இருப்பதில் போய் skype னு தேடுங்க. அதை க்ளிக் பண்ணி அதில் சொல்லியிருப்பது போல் ரெஜிஸ்டர் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.

ஃபோன் ஸ்கைப் அப்ப்ளிகேஷனில் இருந்து லாப்டாப் ஸ்கைப் அப்ளிகேஷனுக்கு கால் பண்ணுவது கஷ்டம். ஆனால் ஃபோன் டூ ஃபோன் ரொம்ப நல்லா இருக்கு.

உங்களுக்கு நல்லா புரியற மாதிரி எனக்கு விளக்கம் கொடுக்க தெரியலை. உங்க ஃபோன் மாடல் சொல்லுங்க ட்ரை பண்றேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா, உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி. நான் நோக்கியா மேக் ஆஷா 202 மாடல் மொபைல்தான் உபயோகிக்கிறேன். இதில் எப்படி கனெக்ட் செய்யலாம் என்று தெரிந்தால் சொல்லுங்க கவி. மத்தபடி எனக்கு ஸ்கைப் பத்தி எதுவும் தெரியாது நான் 0 அதில்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா ...உங்கள் மொபைல் மெயின் மெனுவில் இன்ஸ்ட்டாலேசன் என்று ஏதும் உள்ளதா?அப்படி இருந்தால் அதில் ஓவியாவில் சென்று ஸ்கைப் செர்ச் பண்ணி டவுன்லோட் செய்யுங்கள்.
அல்லது கூகுளில் போய் getjar.com என்று search பண்ணி டாப் அப்ளிகேசனில் ஸ்கைப் என்று இருக்கும் அதை டவுன்லோட் செய்து பாருங்கள்.பின்பு உங்கள் மொபைல் கேம்ஸில் சென்று பாருங்கள் ஸ்கைப் என்று வந்துள்ளா என்று.

மேலும் விவரம் தெரிந்தால் சொல்லுறேன்...:)

SSaifudeen:)

ஷமீஹா ட்ரை பண்ணிட்டு சொல்றேன் மா. நன்றி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஷமீஹா getjar.com என் மொபைலில் சப்போர்ட் ஆகவில்லை பா. மெயின் மெனுவில் இன்ஸ்டல்லேஷன் என்ற ஆப்ஷனும் இல்லை ஆனால் ஸ்டோர் என்ற ஆப்ஷன் இருக்கு ட்ரை பண்றேன். நன்றிமா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

தோழிகளே யாரும் எனக்கு பதிலளிக்க முன் வர மாட்டீங்களா? தெரிஞ்சவங்க இருந்தா கொஞ்சம் எப்படி ஸ்கைப் கனெக்ட் பண்றதுன்னு சொல்லுங்கள் ப்ளீஸ். எப்படியும் அறுசுவைத்தோழிகள் பலரும் வெளிநாடுகளில் இருப்பதால் ஸ்கைப்பை பயன் படுத்தி கொண்டிருப்பீர்கள் அதனால் எனக்கு யோசனை சொல்லுங்க தோழீஸ்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா நீங்கgoogleplaystorela இருக்கானு பாருங்க ,இல்லனாgooglesearch குடுங்க ,நாம மொபைல் இல்லயா ,அந்த deviceஇருக்கா இல்லாயானு அதுவே வரும்,ஆனா விடியோ சாட் வராது ,வாய்ச் சாட் வரும் கண்டிப்பா டிரை பண்ணி பாருங்க,நானும் மொபைல் தான் என்னோடது எல்ஜி ,ஸ்கைப் வருது ......

Be simple be sample

நித்தி என்னாச்சுப்பா யாருமே பதிலளிக்க முன்வரமாட்டீங்களானு கேக்கறீங்க? எனக்கு கணிணீலதான் தெரியும் பயன்படுத்தி இருக்கேன். மொபைல்ல தெரியாது நித்தி, தெரிஞ்ச தோழிகள் கண்டிப்பா சொல்லிருவாங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவா எப்படி இருக்கீங்க? ரொம்ப நன்றி ரேவா தகவலுக்கு. கவிசிவா FBல ஒரு லின்க் குடுத்திருக்காங்க அதுல ட்ரை பண்ணி பார்க்கனும் நீங்க சொன்ன மாதிரி ப்ளே ஸ்டோர்லயும் பார்க்கிறேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

அருட்செல்வி தகவலுக்கு நன்றிப்பா. நான் வெய்ட் பண்றேன் தோழிகள் வந்து உதவும்வரை. நன்றி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்