காலில் முள் எடுக்க உதவுங்க

என் காலில் முள் அல்லது கிளாஸ் ஏரியிருக்கு எனக்கு எடுக்கமுடியல என் வீட்டுக்காரருக்கும் என் மகளுக்கும் எடுக்கதெரியல என்ன செய்யறது எப்படி எடுப்பது வழி சொல்லுங்கள் ப்லீஸ்

எருக்கம்பாலோ என்னமோ விட்ட்டா முள் தானா வெளிவரும்னு சொல்வாங்க..நீங்க பக்கத்துல எதாவது பாட்டிங்கள்ட கேளுங்க சொல்லுவாங்க

தடவிப் பார்க்கும்போது light-ஆ தெரிந்தால், fevicol தடவி காய்ந்ததும் உரித்தால் வந்துவிடும். சிறிய வயதில் என் மகனுக்கு (காட்ட மாட்டான்) நான் இப்படித்தான் செய்வேன்.

தளிகா விஜயா பதிலுக்கு நன்றிம்மா எருக்கம்பாலுக்கு நான் எங்க போவேன் நான் துபாயில் இருக்கேன் இங்கு ஏதாவது வ்ழி சொல்லுங்கம்மா

நிஷாக்கா அச்சச்சோ என்னக்கா எப்படி முள் குத்திக்கிட்டீங்க? அந்த கதையை அப்பறம் பேசலாம். நான் விஷயத்துக்கு வரேன். அங்க கெரசின் கிடைக்குமா? சொல்லுங்க. முள் குத்தின இடத்தில கெரசின் அடிக்கடி தொட்டு வைங்க. காலைல வலியும் போய்டும், காலில் இருந்து முள்ளும் தனியா வந்திரும் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஓமத்தை வெல்லத்துடன் அரைத்துக் கட்டினால் சிறிய கண்ணாடித்துண்டும் வெளியே வந்துவிடும்.

நித்யா மன்னென்னெய் இங்க கிடைக்காதும்மா என்ன செய்ய கிளாஸ் உடைச்சு சரியா அல்லாம விட்டுருக்கு அதுல கால் வச்சிட்டேன்பா ஹர்ஷி எப்படிய்ருக்கு என்ன சமையல் இன்னைக்கு

நிஷாக்கா அங்க மண்ணெண்ணெய் கிடைக்காதா? அப்போ நம்ம தோழிகள் சொன்னதில ஏதாவது ஒன்ன ட்ரை பண்ணி பாருங்கக்கா. அதுக்கு முன்னாடி கண்ணாடித்துண்டுன்னு கன்ஃபார்மா தெரியும்னா ஹாஸ்பிடல் போய் ஒரு டி.டி. இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க அக்கா. செப்டிக் ஆகாம இருக்கும் அதனாலதான் சொல்றேன். ஹர்ஷி நல்லா இருக்கா. இன்னைக்கு வெண்டை சாம்பார் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்