தேதி: November 21, 2012
க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ்
க்வில்லிங் டூல்
கம்
அட்டை ஃப்ரேம்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு அடி நீளமுள்ள ஸ்ட்ரிப்பை இரண்டு இன்ச் அளவில் தொடர்ந்து மடித்துக் கொள்ளவும்.

பின் அவற்றை எடுத்து ஒன்றாக பிடித்து ஒரு புறம் மட்டும், தனியான தனியான ஸ்ட்ரிப்ஸ் கிடைக்கும்படி வெட்டிக் கொள்ளவும்.

பின் ஒவ்வொரூ ஸ்ட்ரிப்பாக படத்தில் காட்டியப்படி, உட்புறம் நோக்கி க்வில் செய்யவும்.

அவ்வாறு செய்தால் படத்தில் காட்டியபடி டிசைன் கிடைக்கும். முதல் இரண்டு வெளிப்புற ஸ்ட்ரிப்களை உட்புறமாக க்வில் செய்து, அடுத்த ஜோடி ஸ்ட்ரிப்களை வெளிப்புறமாகக் கூட க்வில் செய்யலாம். நம் விருப்பபடி க்வில் செய்ய வேண்டிய திசைகளை மாற்றியும் செய்யலாம். நான் 8 தனி தனி 2 இன்ச் ஸ்ட்ரிப்களை பயன்படுத்தி உள்ளேன். ஸ்ட்ரிப்களின் எண்ணிக்கையையும், நீளத்தையும் அதிகரித்தும் கொள்ளலாம்.

அதன் வெளிப்புறம் வேறொரு வண்ண ஸ்ட்ரிப் கொண்டு ஒட்டியுள்ளேன்.

இதை போலவே செய்து கீழே கம் கொண்டு ஒட்டிவிடவும்.

இதே முறையில் மற்றொரு நிறத்தில் செய்த பூ.

பேசிக்கான வடிவங்களை கொண்டு உருவாக்கிய பட்டாம்பூச்சி. கோல்டன் க்ளு கொண்டு ஆங்காங்கே தீட்டியுள்ளேன்.

இந்த குறிப்பில் செய்து காட்டப்பட்ட பூவின் முழு வடிவம். பூவை ஃப்ரேமில் ஒட்டியுள்ளேன்

இது ஃப்ரேமின் இன்னொரு முனையில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

இதில் உள்ள மற்ற டிசைன்கள் ஏற்கனவே செய்து காட்டப்பட்டவை. நம் விருப்பபடி ஆங்காங்கே பல வண்ண பூக்கள், இலைகள் வைத்து கொடி போல செய்துள்ளேன். அழகான க்வில்ட் ஃப்ரேம் ரெடி.

Comments
ரம்யா
வாவ்... நல்ல சின்ன சின்ன வேலைகளோட, நல்ல கலர்ஸ்... அழகா இருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
நன்றி
எனது குறிப்பை அழகா மாற்றி வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி
வனி
ரொம்ப நன்றி ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா மேடம்
க்வில்ட் ஃபிரேம் ரொம்ப எளிதாகவும் மிக அழகுடன் அருமையாக இருக்குங்க :-) வாழ்த்துக்கள்
நட்புடன்
குணா
Hi Ramya,
அருமையா இருக்கு ramya... எப்படி இப்படி perfect ஆ செய்றீங்க.... நானும் try பண்ணியிருக்கேன் but இந்தமாதிரி வரமாட்டேங்குது..... anyway all the best ramya. எனக்கு ஒரு doubt நீங்க எந்த மாதிரி paper use பண்றீங்க.......
ovvoru nodiyaiyum rasithu val
நன்றி
குணா
மிக்க நன்றி ;)
வினோப்ரியா
நன்றிங்க..அப்படி எல்லாம் இல்லை.. ரொம்பவும் நீட்டா செய்றவங்க இருக்காங்க.. நான் கார்ட் ஸ்டாக் பேப்பரை 3 mm க்கு வெட்டி பயன்படுத்துகிறேன். க்வில்லிங் ஸ்ட்ரிப்ஸ் கொஞ்சம் காஸ்ட்லி. ஆனா அதில் செய்தால் இன்னும் பர்ஃபெக்டா வரும். :)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ரம்யா
ரொம்ப அழகா பர்ஃபெக்டா இருக்கு ரம்யா. வாழ்த்துக்கள் க்வில்லிங்கில் அசத்துறீங்க
ரம்யா அக்கா,மிகமிக அருமையாக
ரம்யா அக்கா,
மிகமிக அருமையாக தலைமுடிப்பிச்சனையை தடுக்க வழி சொன்னிங்க மிக்க நன்றி.ஆனால் தேங்காய் பால் தேய்த அன்று இரவும், மறுநாள் தொண்டை காய்த்துவிடுகிறது. அதற்கு ஏதாவது வழி இருத்தால் சொல்லுங்க பா.................
நான் சௌதியில் இருக்கிறோன் இங்க குளிர் ஆரமிக்குது குளிர்காலத்துல தேங்காய் பால் போடலாமா?விட்டா மீண்டும் முடி கொட்டுமா?
பூக்கள் மிகமிக அருமை.................இந்த காகிதம் எங்கு கிடைக்கும்.............
by,
AnuGopi,
Be happy and Make others happy........
அன்பு ரம்யா,
கண்ணைக்கவருது உங்கள் கைவண்ணம்.அழகு.
Jayanthi
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
valuthukal
really so nice ramya.enaku romba asai ana inga antha tool enga kidaikumnu theriyala.pls enga kidaikumu sollunga yaravathu plsssssssssssssssssssssssssssssssssss
Nadpathellam nalluthuke
valuthukal
really so nice ramya.enaku romba asai ana inga antha tool enga kidaikumnu theriyala.pls enga kidaikumu sollunga yaravathu plsssssssssssssssssssssssssssssssssss
Nadpathellam nalluthuke
ரம்யா
ரொம்ப அழகா,நீட்டா இருக்கு ரம்யா..வாழ்த்துக்கள்
Kalai
Nalla irruku
Nalla irruku
க்வில்லிங்
வெகு அழகாக, அருமையாக இருக்கிறது ரம்யா.
- இமா க்றிஸ்
Sivamathi
Sivamathi u can buy quilling tools from amazon.com or ebay.com
Kalai
reply
romba thanks kala.ennaku neenga than first reply pannirukreenga i am so happy.na landipa vangren.thank u so much.
Nadpathellam nalluthuke
ரம்யா...
க்வில்ட் ஃப்ரேம் ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க... வித விதமாக க்வில்லிங் செஞ்சு அசத்துறீங்க.. வாழ்த்துக்கள் ரம்யா...
கலை
ரம்யா,
ரம்யா,
"Quill queen"
வாழ்த்துக்கள்..
என்றும் அன்புடன்,
கவிதா
rafikayusoof
very nice frame work
too good
nice work
keep it up:)