சங்கீதா ரெஸ்டரான்ட் கேசரி

சங்கீதா ரெஸ்டாரண்ட்டில் தரும் கேசரி ரெசிபி யாருக்காவது தெரியுமா?நெய் மணமுமில்லாமல் ஏலக்காய் மணமுமில்லாமல் வேர ஃப்லேவரும் அதிகம் இல்லாமல் ஆனால் அருமையாக இருக்கும்..எந்த முறையில் ட்ரை பண்ணியும் அது மாதிரி வருவதில்லையே

அன்பு தளிகா,

ரவை அரை கப்

சீனி - 1 கப்

தண்ணீர் 1 கப்

நெய் அரை கப்

முந்திரி பருப்பு - 4 -5

முந்திரியை 1 ஸ்பூன் நெய்யில் வறுத்து, தனியாக வச்சுடுங்க.

மிச்ச நெய்யில் முக்கால் வாசி எடுத்து, அதில் ரவையை நல்லா, பொரியற மாதிரி வறுத்து எடுத்து வச்சிடுங்க.

தண்ணீர்(1/2 கப் ரவைக்கு 1 கப்) கொதிச்சதும், அதில் ரவையைக் கொட்டி, (நான் ஸ்டிக் தவாவில்) நல்லா கிளறுங்க. உப்புமா மாதிரி கெட்டியானதும், சீனியை, கொஞ்சம் கொஞ்சமாக, தூவி, கிளறுங்க. சீனி போடப் போட, கொஞ்சம் நெகிழ்த்தியாகும். மிதமான தீயில், கெட்டியாகும் வரை, கிளறுங்க. மிச்ச நெய்யையும் அதில் சேர்க்கலாம்.(தேவையான அளவு)

சீனியை போடுவதற்கு முன்னால், கேசரி பவுடர் கொஞ்சமாக சேர்த்துக்கோங்க.

ரவை, சீனி வாசமே போதும். வேற ஃப்ளேவர் தேவைப்படாது. கடைசியில் வறுத்த முந்திரியை சேர்த்துக்கோங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆகா... ஆகா... இதை 2 நாள் முன்னாடி கொடுத்திருந்தா நானா கிண்டின கேசரிக்கு பதில் இதை செய்திருப்பேன். :)

ஆனாலும் சீதா வருவதே இனிப்பான விஷயம்... அதுவும் இனிப்பான குறிப்போடன்னா... அட அட அடா.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா, எங்கே வருவீங்க? எப்படி வருவீங்கன்னே தெரியல.. ஆனாலும் இப்படியெல்லாம் எதிர்பாராத நேரத்துல திடீர் திடீர்னு (இன்ப) அதிர்ச்சி தந்து மயங்க வைக்க கூடாது.. நீங்க செய்த இந்த கேசரியையே உங்களுக்கு தர்றேன்.. தைரியமா எடுத்துக்கோங்க :) உங்க புண்ணியத்துலயும், தளிகாவின் கேசரி ஆர்வத்திலயும் ஒரு நல்ல கேசரி செய்ய கத்துகிட்ட சந்தோஷத்தோட செய்து பார்த்து பேஸ்புக்ல போடுறேன். வேப்பிலைக்கு ஆர்டர் கொடுத்துடுங்க ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதா அவர்களுக்கு வணக்கம், அடிக்கடி உங்க பேரை மேற்காணும் எனது தோழிகள் அடிக்கடி விளிப்பது வழக்கம். ஆனால் நான் முதன்முறையாக உங்களின் பதிவிற்கு பதிவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. அதுவும் இனிப்பான இழையில். தளிகா இழை ஆரம்பித்த உங்களுக்கு மிக்க நன்றி.
நானும் இந்த கேசரியை உண்டு இல்லையென சமைத்து பார்த்துவிட்டு பதிலிடுகிறேன். அடிக்கடி வந்து என்னை போன்ற புதியவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் தளிகாவிற்கும், உங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு வனி,

எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா, எப்படியாவது, எப்பவாவது வருவேன்,ஹும், என்ன பண்றது.

அன்பு கல்பனா,

கேசரி செய்தீங்களா, பேச்சு மூச்சையே காணோமே, ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே, அப்டேட் பண்ணுங்கப்பா, பயம்ம்மா இருக்கு.

அன்பு அருட்செல்வி,

முதல் தடவையா உங்ககிட்ட பேசறேன், ரொம்ப சந்தோஷம். நான் பதில் போட தாமதமாகிட்டுது, ரொம்ப சாரிங்க. இன்னிக்கு கேசரி வெரைட்டி தேடிப் பாத்துட்டு இருந்தப்ப இந்த இழையை திரும்பவும் பார்த்தேன்.

அடிக்கடி வரணும்னுதான் எனக்கும் ஆசை, முடிந்தவரைக்கும் வர்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

kesari simply su.............perb. i try it very nice.

அன்பு சீதாம்மா மன்னிக்கவும் கவனிக்கவில்லை...சில நாள் கழித்து பதில் வந்திருப்பதால் பதில் இல்லை போலிருக்கு அதான் மேலே போயிடுச்சுனு இருந்துட்டேன்...இதுவரை கடைசியா நெய் விட்டு செய்ததில்லை முதலில் வறுக்கும்போதே நெய் அதிகமா விட்டு செய்றது வழக்கம்..இப்படி கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நான் அடிக்கடி விரும்பி செய்யும் இனிப்பு இது.
பாத்தீங்களா உங்க பதில் வந்ததும் ஆள் ஆளுக்கு வரவேற்கிறாங்க..இனி உங்க கேசரி இன்னைக்கே செய்திடப் போறேன்

மேலும் சில பதிவுகள்