பாதம் எரிச்சல்

என் கணவருக்கு வெகு நாட்களாக பாதம் எரிச்சலாக உள்ளது. ஏதாவது தீர்வு சொல்லுங்கள் தோழிகளே please.

தேங்காய் எண்ணெய் தேய்த்துவர பாத எரிச்சல் குறையும்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இரவு படுக்கும்முன் சோற்றுக்கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

தோழி இரவு படுக்கும் முன்பு சுடுதண்ணீரில் உப்பு சிறிதளவு போட்டு கால்களை ஊறவைத்து, சோப்பு கொண்டு நல்லா சுத்தமாக்கிவிட்டு, ஈரம் போக துடைத்துவிட்டு,வாஸ்லின் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுங்க,எப்போதும் காலில் செருப்பு போடச்சொல்லுங்க,எப்பொதுமே கால் வறண்டு போகாம இருக்கனும், ட்ரைப் பண்ணி பாருங்க,

மணிமேகலைராம்குமார்

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

தோழிகளுக்கு நன்றி. முயற்சி செய்து பார்த்துவிட்டு பதிலலிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்