பாகற்காய் குழம்பு

தேதி: November 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

பாகற்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - ஒரு கப் + தாளிக்க 3
வர மிளகாய் - 3
தனியா - 3 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - 3
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
பட்டை - மிகச் சிறிய துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தக்காளி - ஒன்று
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பொன்னிறமானதும் சின்ன வெங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தனியா, சீரகம், மிளகு போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றோடு பட்டை, சோம்பு, கிராம்பு, தேங்காய், பொட்டுக் கடலை, புளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள்வும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, நறுக்கிய பாகற்காயை போட்டு அரைவேக்காடு வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். குக்கரில் வைத்தால் 2 விசில் வரும் வரை வைக்கவும். சுவையான பாகற்காய் குழம்பு ரெடி. இட்லி,தோசை,சாதம், சப்பாத்திக்கு ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமை அருட்செல்வி பாகற்காய் குழம்பு இதுவரை நான் கேள்விப்படாத வித்யாசமான முறையில் செய்து காட்டியிருக்கீங்க. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன். வாழ்த்துக்கள் செல்வி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முதல் பதிவிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிங்க நித்தி ரொம்ப நன்றிப்பா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க அருட்செல்வி. பாகற்காய் குழம்பு நானும் இப்போதான் முதல் முறை கேள்விபடுறேன்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நிஜமாவே புது வகை மசாலா வோட குழம்பு... இதுக்காகவே ட்ரை பண்ணனும். சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாகற்காய் குழம்பு மசாலா புதுமை+அருமை,செல்வி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்க பதிவிற்கு மிக்க நன்றி ஹலி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நிஜமாலுமே யாருமே வெச்சதில்லயாப்பா? இது பாட்டி காலத்திலிருந்து இருக்குப்பா! புளி சேர்க்கிறதுனால 2ஆனாலும் கெட்டுப்போகாது.
பதிவிற்கு மிக்க நன்றி வனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாராட்டிற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி முசி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் இது போல் அரைச்சு வைப்பேன்... ஆனா கொஞ்சம் வித்தியாசமா... உங்க மசாலா வித்தியாசமா இருக்கு, நல்லாவும் இருக்கு :) என் ரெசிபி உங்களுக்கு அப்பறமா லின்க் தரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள், நிறைய அயிட்டம் சேர்த்து வறுத்து அரைச்சு வச்சிருக்கீங்க. வறுத்த அரைச்ச குழம்புனாலே ஒரு இது தான் நமக்கு. நெக்ஸ்ட் டைம் பாகற்காய் சமைக்கும் போது இந்த குழம்பை ட்ரை பண்றேன். ஒரே ஒரு டவுட் குழம்பு கசக்குமா? ;)) ஆரோக்கியமான, ருசியான குறிப்பிற்கு நன்றிகள் அருள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்பூ உங்க பதிவிற்கு மிக்க நன்றி(:-
குழம்பில கசப்பு சுவை இருக்காது, காய் எப்பவும் போலத்தான் இருக்கும். மேல 2நாள்னு போடாம விட்டுட்டேன். ஃபிர்ட்ஜ்ல வெக்காமயே 2 நாள் ஆனாலும் கெடாதுன்னா பார்த்துக்கோங்களேன்.
நல்லா கொதிக்க விட்டுடணும். அதுக்காக 2நாளக்கி ஒருதடவதான் குழம்பு வெக்கிறீங்களானு கேட்கக்கூடாது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அப்படியாப்பா! கண்டிப்பா கொடுங்க, இதுல பட்ட சோம்பு கிராம்பு போடாமலும் வெக்கலாம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல குறிப்பு.அம்மாவும் இதே மாதிரிதான் செய்வாங்க. ஆனா மல்லி சீரகத்தை தனியே வறுத்து எடுப்பாங்க.மிக்ஸியில் போட விடமாட்டாங்க. ஆட்டுக்கல்லில் அரைச்சு வைத்தாதான் ருசின்னு அரைச்சு வைப்பாங்க.ம்....ம் வரட்டும் வரட்டும் இன்னும் நிறைய குறிப்புகள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

அருட்செல்வி... இதே போல தான் அம்மாவும் செய்வாங்க... எனக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்கும்.. இதே காயை வெல்லம், புளி சேர்த்தும் செய்வாங்க.. இப்படி மசாலா அரைச்சும் செய்வாங்க அம்மா.. ரெண்டுமே சூப்பரா இருக்கும்... கண்டிப்பா நான் செய்து பார்க்கறேன்..

வித்யா பிரவீன்குமார்... :)

செயந்திக்கண்ணு நானும் ஆட்டுக்கல் அடுத்த வாரத்திற்குள் வாங்கிடுவேன், பொள்ளாச்சில வாங்கலாம்னு பார்த்தேன் ஆனா வாங்கல, இங்க சிவானந்த காலனில வாங்கலாம்னு இருக்கேன். ஏற்கனவே குட்டியூண்டு அம்மிக்கல் வெச்சிருக்கேன், அதுலதான் தினமும் ரசத்திற்கு பூண்டு,சீரகம்,மிளகு பொடித்து போடுவேன்(:-
பதிவிற்கு மிக்க நன்றி தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஆமாம்பா நிறையப்பேர் வெல்லம் போட்டு வெப்பாங்க. தோழிகள் கல்லூரிக்கு கொண்டு வரும்பொழுது சாப்ட்டிருக்கேன். அதுவும் நல்லா இருக்கும். நாட்டு பாகற்காயா இருந்தா கசப்பு அதிகமா இருக்கும். ஹைபிரட்னாலே இப்படி வெச்சாலும் கசப்பு தெரியாது.
மிக்க நன்றி தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள்,
வித்தியாசமான குழம்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பதிவிற்கும், வாழ்த்திற்கும்,மிக்க நன்றி கவி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.