தேதி: November 23, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பரோட்டா - 5
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தழை - ஒரு கொத்து
முட்டை - 2
கீமா - 25 கிராம்
எலுமிச்சைசாறு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாகவும், பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கீமாவில் அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

பரோட்டாவை கைகளால் சிறு சிறு துண்டுகளாக்கி அதை கூரான விளிம்புள்ள டம்ளரால் நன்கு கொத்தி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் கொத்தி வைத்த பரோட்டாவை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். அதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கிளறவும்.

முட்டையை கொத்தி ப்ரோட்டா கலவையில் சேர்த்து பிரட்டி விட்டு, வேக வைத்த கீமாவையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். மல்லிதழை போட்டு 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.

சுவையான கொத்து பரோட்டா தயார்.

Comments
ஹலிலா
நல்ல குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
பார்க்கும்போதே
பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறது. கண்டிப்பாக இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை cங்கள் வீட்டில் கொத்துபுரோட்டா தான்.சூப்பர் ரெசிப்பி கொடுத்ததற்க்கு நன்றி.வாழ்த்துக்கள்.
shanthichinnusami
ஹலிலா
கொத்துபுரோட்டா நாங்களும் அது போல் தான் செய்வோம் ஹலிலா,படங்கள் அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அஸ்ஸலாம் அலைக்கும் ஹலிலா
அஸ்ஸலாம் அலைக்கும் ஹலிலா கொத்துபரோட்டா நாங்களும் இப்படிதான் செய்வோம் எனக்கு வீட்டில் செய்வதைவிட நாகூர் வந்தா கொத்துபரோட்டா ரபீக் ஸ்வீட்ல குலாப்ஜாமுன் பால்கோவா வாங்காமல் வரமாட்டேன் எங்கள் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் உங்க பதிவு பார்க்கும்போதெல்லாம் எனக்கு அதுதான் ஞாபகம் வரும்
நன்றி.
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
அருட்செல்வி
அருட்செல்வி வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
சாந்தி.
சாந்தி அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க. வாழ்த்திற்க்கு ரொம்ப நன்றிமா.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
முஹ்சினா.
முஹ்சினா நீங்களும் இப்படிதான் செய்வீங்களா... ரொம்ப சந்தோஷம் பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா
வஅலைக்கும் முஸ்ஸலாம் நிஷா நீங்களும் இப்படிதான் செய்வீங்களா...ரொம்ப சந்தோஷம் பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
படிப்பதற்கே அருமையாக உள்ளது
படிப்பதற்கே அருமையாக உள்ளது நாளையே செய்து பார்க்கிறேன்.
ஹலிலா, கொத்துபரோட்டா அருமையோ
ஹலிலா, கொத்துபரோட்டா அருமையோ அருமை. உங்க குறிப்புகளை பார்க்கும் போதெல்லாம் உங்களைமாதிரி யாராவது ஒருத்தர் கையால சமைச்சுதர சொல்லி சாப்பிடனும்னு ஆசையா இருக்குப்பா. வாழ்த்துக்கள் ஹலிலா.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
takkar
Your kotthu parotta receipe summa takkara irukku
kotthu parotava parta udane
kotthu parotava parta udane sapidanum thonudhu padangal arumai
maha
சரவணன்
டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க நன்றி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
நித்யா
உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றி நித்யா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
noornilo
noornilo பதிவுக்கு ரொம்ப நன்றி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி பதிவுக்கு ரொம்ப நன்றி
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
haleela
Assalamu alaikum Haleela..edho briyani panra maadiri supera parottava panni irkeenga ma..kandipa try panraen insha allah..thodarndhu recipy kudunga vazhthukkal.!
"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"
ஹலீலா
இந்த பரோட்டா... அந்த சால்னா... சம காம்பினேஷன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
nice
nice
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷம்னாஸ்
வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷம்னாஸ் டேஸ்டும் அருமையா இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பாருங்கள். வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
வனிதா.
வனிதா பதிவிற்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ரஜேஸ்வரி
ராஜேஸ்வரி வருகைக்கும்,பதிவிற்கும் ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
ஹளிலா,
ஹளிலா,
பரோட்டா செய்ய வராது.கண்ணாலே சாப்பிட்டுகிறேன்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவிதா.
கவிதா செய்து பாருங்க,ஈஸிதான். வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
halila
சூப்பர்... செய்துட்டனே இன்னைக்கு. நேற்று டின்னர்க்கு செய்த பரோட்டா இருந்தது, கீமா தான் இல்லை. வெறும் முட்டை மட்டுமே கூட ஒன்னு சேர்த்து செய்துட்டேன். ரொம்ப அருமையா இருக்கு. எப்பவாது கீமா கிடைச்சா சேர்த்து செய்து பார்க்கிறேன். சுவையான ரெசிபி. நன்றி ஹலீலா. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா.
சாரி வனிதா,உங்க பதிவை இப்பொ தான் நான் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம் செய்து பார்த்து சொன்னதற்க்கு. ரொம்ப நன்றிமா
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
kotthu parotta
sister what happend to u...y no postings in recent days..i was keenly waiting for ur forthcoming recipe's..oops! forgot 2 say.. ya, tried ur kotthu parotta it was awesome...insha allah make ur future delightful...