தேதி: November 26, 2012
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கறிவேப்பிலை - 15 கொத்து
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
சுக்கு - அரை அங்குல துண்டு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறிய குண்டுமணி அளவு
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். சுக்கை தோலை நீக்கி விட்டு ஒரு முறை தட்டி வைத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தை போட்டு 30 நொடி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

தனியா, சுக்கு இரண்டையும் போட்டு வறுப்பட்டவுடன் எடுத்து விடவும்.

கடைசியில் கறிவேப்பிலையை போட்டு 30 நொடி வதக்கி அடுப்பை நிறுத்தி விட்டு அடுப்பிலேயே வைத்திருக்கவும்.

வறுத்தவற்றை எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.

பிறகு மிக்ஸியில் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, உப்பு போட்டு பொடி செய்து கொள்ளவும்.

கறிவேப்பிலை பொடி தயார்.

Comments
செண்பகா
சூப்பரா மனக்குது பொடி... :) இது இட்லி தோசைக்கு பெஸ்ட்டா? இல்ல சாதத்துக்கு பெஸ்ட்டா? இட்லிக்கு பொடி பண்ணனும், இது ஜோடி எப்படி இருக்கும்னு சொல்லுங்க, நான் செய்துடறேன் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
செண்பகா கறிவேப்பிலை பொடி
செண்பகா,
கறிவேப்பிலை பொடில சுக்கு சேர்த்து வித்தியாசம செய்து இருக்கிறீங்க, பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்குது
மணிமேகலைராம்குமார்
என்றும் அன்புடன்,
மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே
செண்பகா அண்ணி
கறிவேப்பிலை பொடி சூப்பர். என் மாமியாரும் இதே போலத்தான் சுக்கு தவிர மற்ற எல்லா பொருளும் அப்படியே சேர்த்து பொடி செய்வாங்க. தோசை, இட்லி கூட சாப்பிட நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.
அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.
செண்பகா
நல்லதொரு குறிப்பு வாழ்த்துக்கள் தோழி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
hai
கறிவேப்பிலை பொடி சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
செண்பகா
செண்பகா.
கறிவேப்பிலை பொடி நல்லா செய்துருக்கீங்க நானும் இப்படி தான் செய்வேன் சுக்கு மட்டும் சேர்க்கமாட்டேன்.அடுத்த தடவ பண்ணும் போது சுக்கு சேர்த்து செஞ்சி பாக்குறேன்.
பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)
செண்பகா,
செண்பகா,
சுக்கு சேர்த்து புதுமையா இருக்கு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கறிவேப்பிலை பொடி
நல்ல குறிப்பு ஷெண்பகா..இது எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும்.என் மகளுக்கு சாதத்தில் வைத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்
கறிவேப்பிலை பொடி
செண்பகா,
கறிவேப்பிலை பொடி, சிம்பிள் & பெஸ்ட் மெத்தெட்ல, அருமையா மணக்குது! :) சுக்கு சேர்ப்பது புதுசு. நெக்ஸ்ட் டைம் இதேப்போல செய்துப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுஸ்ரீ