சப்பாத்திக்கு டிஸ்

தோழிகளே,
எனக்கு சப்பாத்திக்கு சிவப்பு கீரைய வைத்து என்ன டிஸ் செய்யலாம் என யாராவது ஐடியா குடுங்கள் பிளீஸ்

நீங்க சொல்ட்றது சிகப்பு முளக்கீரையா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முளைக்கீரை தான் சிவப்புகீரையா? முளைக்கீரைத்தண்டை குர்மா வைத்தால் சப்பாத்திக்கு நல்லா இருக்கும்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

சிக்கப்பு கீரை தொக்கு

தேவையான பொருட்கள் :
கீரை – 2 கப் உருவியது
வெங்காயம் : 2 ( பொடியாக நறுக்கவும் )
தக்காளி பெரியது - 1 ( பொடியாக நறுக்கவும் )
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பல் தட்டி கொள்ளவும்
சிகப்பு மிளகாய் – 10
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – ருசிக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
தேங்காஇ துவல் _ 1/4 கப் ( விருப்பட்டால் )

செய்முறை :

கீரையை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
சிறிது நல்லெண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு,புளி, மூன்றையும் சிறிது வறுத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
மறுபடியும் கடாயை காய வைது எண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் , கருவேபிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து நன்ட்றாக வதக்கவும் , பின் தக்க்காளி சேர்து வதிங்கியதும் சிகப்பு கீரை சேர்து இதுக்கு தேவயான உப்பு செர்து எண்னயிலே வதவும் பின் கொன்ஞ்ஜம் தண்ணீர் தெளித்து மூடி இறக்கும் முன் தேங்காய் துறுவல் சேர்த்து இரண்டு நிமிடம் கிளரி இறக்கவும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனிமொழி,
விளக்கமாக பதில் அளித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி,உங்க பொன்னான நேரத்தை எனக்காக செலவளித்ததற்கும் ரொம்ப நன்றி,நான் நீங்க சொன்ன குறிப்பை கண்டிப்பாக செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்கிறேன்,

ஹாய் அனு,
முளைகீரை மாதிரி சிவப்பு கலரில் இருக்கும்

நன்றிலாம் வேண்டாம் சமைது பார்துடு சொலுங்க அக்கா சொல்ல மரந்துடென் கடைசில வருத பொடி தேங்காய் துருவல் சேர்து இரக்கனும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

yenaku ithu thaan muthal thadava sappathiku yena dis pannalaam sollunga plz yenaku english varathu yenaku thamila keyboard yeduka theriyale athu therinja yaravathu sollunga plz

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்