கவிசிவாவுடன் கதைக்க வாங்கோ :)

என்னடா என்னிக்கும் இல்லாத திருநாளா கவி வந்திருக்காளேன்னு பார்க்கறீங்களா? ரொம்ப நாளாச்சு நானும் அரட்டை இழை ஆரம்பிச்சு அதான் :)
எல்லோரும் இங்கே வரலாம் கதைக்கலாம் ஆனால் தமிழில் மட்டும் :)
நலமா? என்ன சாப்பிட்டீங்க மாதிரி ஸ்டீரியோ டைப் அரட்டையும் வேண்டாம் :)

கவிசிவா... இம்புட்டு நேரம் போரடிசு பார்த்துட்டு இருந்தேன், நம்ம மக்கள் யாரையுமே காணோமேன்னு :) வந்துட்டீங்களா? சிக்கிகிட்டீங்க என்கிட்ட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாருக்கும் காலை / இரவு வணக்கம் :) அக்கா ஸ்டைல்ல நான் சொல்றேன்.

லலி, பிந்து அக்கா, சுஸ்ரீ... இருக்கீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க வாங்க நானும்தான் :). வனி இன்னிக்கு எதைப் பற்றி பேசலாம்னு சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எதைப்பற்றி வேணும்னாலும் :) நாம சந்தித்த முதல் அறுசுவை நட்பு பற்றி?? பலர் சந்தித்தே இருக்க மாட்டாங்களோ?? அல்லது முதல் அறுசுவை நட்பு பற்றி? மெயில் / கால் / சந்திப்பு...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் வணக்கம்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ம்ம்ம் நானே ஆரம்பிக்கறேன்

நான் முதன் முதலில் மெயில் பண்ணி பேசிய நட்புன்னு சொன்னால் அது தளிகாவும், ஹர்ஷினியும். ஹர்ஷினியை இப்போ காணோம் :(. தளிகாவின் நட்பு இன்னும் தொடர்கிறது.

அடுத்து ஃபோனில் பேசியது செல்விம்மாகிட்ட. அவங்களையும் இப்போ காணோம் :(

அடுத்து நேரில் சந்தித்தது RMVK ன்னு முன்னாடி ஒருத்தவங்க வருவாங்க. அவங்களைதான் முதன் முதலில் சந்திதேன் அப்புரம் ராதாஹரியும் ஹேமாவும். இப்போ ரென்டு பேரையும் கானலேன்னாலும் எப்பவாவது பேசுவது உண்டு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் காலை/இரவு வணக்கங்கள் :)

அன்புடன்,
லலிதா

நாளைக்கு இன்னும் ஒரு சர்ப்ரைஸ் நடக்கலாம். நடந்தால் சொல்கிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அடப்பாவி மக்கா எல்லாரும் அட்டென்டன்ஸ் போட்டுட்டு எஸ்கேப்பா? சீக்கிரம் வாங்கோ. கவி பாவம்ல காத்துகிட்டு இருக்கேன்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் முதல் முதலில் அறுசுவையில்(மெயில்,தொலைபேசி,சந்தித்தது) பேசியது வனியிடம்.. :) ஆனா அது முதல் அறிமுகம் இல்லை.. ;) அதனால அடுத்தபடிய இருக்குறது நம்ம ஷமீஹாவும் ஷமீலாவும் தான்... அவங்களிடம்.. தான் அரட்டைய தொடங்கினேன்...

பிறகு பிந்துவும் நானும் அரட்டையில யாரும் இல்லாத நேரம் நாங்க மட்டும் பேசுவோம்... அவங்கள நான் இதுவரைக்கும் பெயர் சொல்லிதான் கூப்பிட்டு இருக்கேன்... அதனால அவங்க என்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்கனு நினைக்கிரேன்... :) இது வரை யாரையும் அக்கானு கூப்பிட்டு பழக்கமில்லை அதான்... எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ... இதில் தவறு ஏதும் இல்லையே.. ரொம்ப நாளா இத பத்தி கேட்கனும் தோனுச்சு அதான்... கேட்டேன்...

அடுத்தது நம்ம அரட்டை அரசி நித்யா நித்யா... ;) அப்ப அப்ப பேசிக்கிட்டாலும் ரொம்ப நாள் பழகிய தோழி போல் இருக்கும்...
பிறகு நம்ம சமைத்து அசத்தலாம் பகுதியால் பல தோழிகளிடம் அறுமுகம் கிடைத்தது... இதற்க்கு வாய்ப்பு கொடுத்த பிந்துவுக்கும், அதை எடுத்து நடத்த சொல்லி ஊக்கப் பட்டுத்தியா வனிக்கும் நன்றி...

-------

எல்லாரும் எங்க பா..?? சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... முடிச்சுபுட்டு வாரேன்...

அன்புடன்,
லலிதா

மேலும் சில பதிவுகள்