எனக்காக ஆன்டவனை கையேந்துன்ங்கள்

தோழிகளே என் உடன்பிறவா சகோதரிகளே நான் நிம்மதியிழந்து வெளியே சொல்லமுடியாத பிரச்னையில் மிகுந்த மன வேதனனையில் கண்களில் கண்ணிருடன் இந்த பதிவு போடுகிறேன் என்னுடைய பிரச்னைதீர்ந்து நான் நிம்மதியா சந்தோஷமா உங்க எல்லாரிடமும் பேசவேன்டும் என எனக்காக என் குடும்பத்திற்காக ஆன்டவனை வேன்டுங்கள் எனக்காக ஆன்டவனை கையேந்துங்கள் ப்லீஸ்

anbulla nisa en ippadi verupudanum vedanaiyudanum irukireergal ella prachinaigalaiyum dairiyamaga edhirthu nillungal thukkam ungalai parthu thoora odividum ungal prachinai sariyaga naan andavanai vendukiren

சகோதரிகளே எனக்காக இறைவனை கையேந்தி எனக்கு ஆதரவும் ஆறுதலும் தந்த சமிஹா சாதிகா லலிதா ரூபி நித்யா வனிதா சாகிராபானு சுபாராம் வினோப்ரியா பரிதாபானு மேகலை கனிமொழி ஜனனிசிவா சுதாலாவன்யா மனிமேகலை பூமிராஜ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி அருசுவையினால் இத்தனை சொந்தங்கள் கிடைக்கசெய்த அட்மின் அன்னாவுக்கு என் முதல் நன்றி முகம் தெரியாத நம் குடும்பத்தில் நானும் ஒருத்தியாயிருந்து உங்களுக்கு என்மேல் இருக்கும் பாசத்தை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பதிவ பார்த்ததுமே என் மனசு லேசாயிடுச்சு நீங்க எல்லாரும் என்னோட புள்ளைங்க அக்கா தங்கச்சிங்க என்னோட ப்ரச்னையை உங்ககிட்ட சொல்ல என்க்கு தயக்கம் ஒன்னுமில்லை அன்னன் வீட்டிலேயே இருப்பதால் என்னால் உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியல அதான். நானாவது உங்ககிட்ட எங்கம்மா கிட்ட பேசி ஆருதல் பன்னிக்கிறேன் அன்னனை நினைத்துதான் அவர் படும் வேதனையதான் என்னால் தாங்கமுடியலம்மா இறைவனுக்கு அடுத்து அவரை நான் பார்க்கிரேன் மிகவும் நேசிக்கிறேன் அவர் கஷ்டபடும்போது நான் எப்படி நிம்மதியா இருக்கமுடியும் சொள்ளுங்க கிளிபோல் பொன்டாட்டியிருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வச்ச்சிப்பாங்க சிலபேர்னு. வயசானவங்க சொல்வாங்கல்ல அதுக்கு உதாரனம் என்னை பொருத்தவரை என் கனவர்தான்னு சொல்வேன் என்னையும் வச்சு வாழ்ந்துட்டு இருக்கிற என் கனவருக்கு நான் எப்படி நன்றி சொல்லபோறேன்னு தெரியல எதுக்கு நான் சொல்ரேன்னு என்னை நேரில் பார்த்தாதான் உங்களுக்கு புரியும் என் செல்லம் சமிஹாவும் சாதிகாவும் என்னை முதலில் மன்னிக்கவும் நீங்க போன் போடும்போதெல்லாம் அன்னன் வீட்டில் இருப்பதால் நான் ஏதாவது உங்ககிட்ட பேசும்போது உனர்ச்சிவசப்பட்டு அழுதுவிடுவேன்ங்கிர பயத்தில்தான் பேசல அம்மாவ மன்னிச்சிக்கோங்க சீக்கிரம் இன்ஷா அல்லாஹ் உங்ககிட்ட பேசுவேன் அஸ்ஸலாம் அலைக்கும்

நித்யா சாரி நீ நான் எழுதினத தப்பா புரிஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன் என் கனவரை பத்தி தப்பா நினைத்தாலே மகா பாவம் அவர் ரொம்ப நல்லவர் மகா புருஷர் உத்தம புருஷர்னு உங்க இதிகாசத்துல சொல்றமாதிரி எனக்கு அமைஞ்சவர் அவர் எனக்கு எந்த குறையும் செய்யலம்மா ப்ரச்னை அவர்கிட்ட இல்லை அவர் தொழிலில்தான் ப்ரச்னை நல்ல வேளை என்னை தேடின உங்களிடம் விரைவில் பேச இறைவனைத்தான் வேன்டுகிறேன் என்னை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையுடன் தொழுவபோகிறேன்

தோழி நிஷா ஏதோ கவலையில் இருக்கீங்க என்று புரியுது.. அது என்னவென்று எனக்கு தெரியாது. இருந்தாலும் நிச்சயம் உங்களுக்காக நாங்கள் அனைவரும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.. நிச்சயம் உங்கள் கவலைகள் மாறும்.. தொடக்கம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அதற்கு முடிவு என்று ஒன்று உள்ளது.. உங்கள் பிரச்சனைக்கும் முடிவு இருக்கும்.. அது சுமுகமாகவே முடியும்.. நீங்கள் கவலைப்படும்போது ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. இதுவும் கடந்து போகும்.. இது போல தான் உங்கள் பிரச்சனையும் கடந்து போய்விடும்.. கவலைவேண்டாம் அன்பு சகோதரி. ஆண்டவன் உங்களுக்கு நிச்சயம் நன்மை செய்வார்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நிஷா அக்கா கவலை படாதீங்க எல்லா பிரச்சனைகளும் சிக்கிரத்தில் சரியாகிவிடும்.கடவுள் துணையாக இருப்பார்.

அன்பு தோழி நிஷா, உங்க பிரச்சனை என்னனு சொன்னாலே பாதி தீர்ந்துட்ட மாதிரி தான். யார் கிட்டவாவது சொல்லுங்க... கட்வுள் உங்களுக்கு துணை இருப்பார். கவலைப்பட வேண்டாம்.

அஸ்ஸாலாமு அலைக்கும் நிஷா அக்கா என்ன ஆச்சு என் கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு......உங்களுக்கு என்ன பிரச்சனைனு எனக்கு சரியா தெரியல....உங்க மனம் நிம்மதி ஆன பிறகு எங்களுக்கு cal பண்ணி பேசுங்கக்கா.....

அருமை தோழிகள் ரேவதி லேகா தீபகலா உங்கள் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றிம்மா நீங்கள் யாவரும் கோரும் வேன்டுதளை இறைவன் நிரைவேற்றுவானாக

வ அலைக்கும் வஸ்ஸலாம் சாதிகா நிச்சயம் பேசுறேன் துவா செய்மா

நிஷா அக்கா உங்களுடைய கவலைகளும் பிரச்சனைகளும் சீக்கிரமே உங்களைவிட்டு ஓடிப்போக நான் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் சில பதிவுகள்