அறுசுவை கெட் டு கெதர்

அறுசுவை தோழிகளுடன் ஒரு கெட் டு கெதர்...

அறுசுவையின் ஒரு விவிஐபி இன்னும் ஓரிரு மாதங்கள் சென்னையில் வசிப்பதால் முடிந்தவரை நம் அறுசுவை நட்புகளை கண்டு மகிழ்வடைய விரும்புகிறார்...
அது யாருன்னு யோசிக்கிறீங்களா? வேர யாருமில்ல நானே தான்... (அட்மின் அண்ணா அடிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்)

அதனால் நாம் மினி கெட் டு கெதர் போட்டா என்ன???

எங்கு, எப்பொழுது, யார் யார் என்பது உங்களின் விருப்பம்...

இது பற்றிய கருத்துக்களை வரவேற்க்கிறேன்...

ஹாய் பிரேம்ஸ் எப்படி இருக்கீங்க? அறுசுவை கெட் டுகெதர்னு படிச்சதும் சரி நம்ம பாபு அண்ணாதான் ஏற்பாடு பண்ணியிருக்கார்போலன்னு வந்தேன் ஆனா உங்கள சத்தியமா எதிர்பார்க்கல. ம்ம்ம் எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு பா நாம சென்னையில இருக்கிறவங்க எல்லாரும் மீட் பண்ணனும்னு. சென்னை தோழீஸ் வாங்க வந்து எப்போ எங்கேன்னு சொல்லுங்கப்பா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஏன் பிரேம்ஸ் அப்பறம் ஊருக்கு கிளம்புறீங்களா.. என்னைக்கு எப்போ எங்கேன்னு எல்லோரும் சேர்ந்து முடிவெடிங்க.. எங்கே இருந்தாலும் எனக்கு ஒகே.. ஜோரா ஒரு கெட் டூ கெதர் போட்டுடலாம்.. ஜனவரி வரைக்கும் இருப்பீங்கலா.. கல்ப்ஸ் ஜனவரி தான் சென்னை வராங்க.. அதான்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

------

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ப்ரேமா அக்கா சூப்பர் அக்கா நித்து அக்கா நீங்க எப்போ நூ டேட் பிக்ஸ் பன்னியாசா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இங்க ஒரு டிக்கெட் ரெடியா இருக்கு. சேர்த்துக்கோங்க.. :-)

ஒரே ஏரியாவில் இருந்துட்டு என்னை பார்க்க நேரமில்லையாமா... அங்க இருந்து டிக்கட் போட்டு வராராமா... நான் ஒத்துக்கவே மாட்டேனாக்கும் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இது அட்மின் அண்ணா ஏற்பாடுன்னு நினைச்சு பார்த்தா!!!

//இங்க ஒரு டிக்கெட் ரெடியா இருக்கு. சேர்த்துக்கோங்க.. :-)// ஹிஹிஹி

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நித்யா : ரொம்ப சந்தோஷம் பா... இன்னும் யார் யார் வராங்கன்னு பார்ப்போம்...

ரேவதி : ஆமா பா.. அனேகமாய் ஜனவரி கடைசி இல்லை பிப்ரவரி துவக்கத்தில் கிளம்பிடுவேன்... அதுக்கப்பறம் திரும்ப சென்னை வர 1 வருஷமோ அல்லது 2 ரெண்டு வருஷமோ ஆகும்... அதுக்ககுள்ள் அறுசுவை தோழிகளை பார்த்த்டனும்னு ஆவல்...

கனி : தேதி இன்னும் முடிவு பன்னலைப்பா... முதலில் யார் யாருக்கு விருப்பம் இருக்குனு தெரிஞ்சுகிட்டு எல்லாருக்கு தோது படுற மாதிரி கலந்து பேசி ஒரு தேதி முடிவு பன்னிப்போம்...

அட்மின் அண்ணா : நீங்க ஒகே சொன்னது ரெட்டிப்பு மகிழ்ச்சி...

வனி : இந்த ஜனவரிக்குள்ள நீங்களூம் சென்னை வந்தால் எங்க கூட ஜாய்ன் பன்னலாமே...

கல்ப்ஸ் : உங்க அப்பவுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டோம்... அதனால் எல்லாம் கொஞ்சம் நார்மல் ஆனாதும் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்...

ஸ்வர்னா : இது என் நீண்ட நாள் ஆசை ஸ்வர்னா... அப்பற்ம் நீங்க கும்பகோனம் ஆச்சே ஸோ உங்களால் கலந்துக்க முடியுமான்னு சொல்லுங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

இதுவரை விருப்பம் தெரிவித்தவர்கள் பட்டியல் இதோ...

பிரேமா, நித்யா, ரேவதி, கனிமொழி, அட்மின் அண்ணா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

ஹிஹிஹீ... நீங்க நடத்துங்கோ... நான் இப்போ சென்னை வருவதே சிரமம்... அதுவும் ஜனவரியில்... வாய்ப்பே இல்லை. :) எனக்கு பதிலா என் அண்ணாவை அனுப்பி வைக்கிறேன். அவர் கொஞ்சம் பயந்த சுபாவம்... பார்த்து பத்திரமா அனுப்பி வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்