" போக்கெட் மணி " ஒரு அலசல்

இன்று என் தோழி சொல்லி விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சியில் பாக்கெட் மணி பற்றிய நிகழ்ச்சியை கண்டேன்..சத்தியமா சொல்றேன் மனசில் என்னவோ வருத்தம்..இன்றைய தலைமுறையினர் இப்படி என்று வியப்பாக இருக்கு..வெறும் காசு பணம் தவிற பெற்றோரை கூட மதிக்காத பிள்ளைகளாக தெரிகிறார்கள்..பெற்றோர்கள் சிரித்துக் கொண்டே அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஷாக் தான்.
வாரம் 1000 ரூபாய் பாக்கெட் மணி தேவைப்படுகிறது என்று தான் பிள்ளைகள் சொல்கிறார்கள்..
சத்தியமா சொல்றேன் 10 வருஷம் முன்பாகவே இருந்தாலும் பள்ளியில் படிக்கும்பொழுது எனக்கு அம்மா தந்தது இரண்டு ரூபாய் அதான் பாக்கெட் மணி..அதுவும் அம்மாவிடம் கெஞ்சி பரிதாபப்பட்டு தரணும்..அப்பாவிடம் கேட்டதாக சரித்திரமே இல்லை..ஒரு சுற்றுலா எனும்போதும் அப்பா இறக்கப்பட்டு அனுப்பினால் உண்டு நானா காசு கேட்டதே இல்லை...அதுவே கல்லூரிக்கு வந்தபின் வாரம் 10 அல்லது 20 ரூபாய் அதில் மூன்று ரூபாய் சிப்ஸ் பாக்கெட் வாரா வாரம் வாங்கி சாப்பிடுவதோடு சரி..அது தவிற பிள்ளைகளுக்கு ஒரு அன்பளிப்புக்காக மீறி மீறி 20 ரூபாய் வாங்குவேன் அதுவே என் மனசுக்குள் உறுத்தும் .அப்படியிருக்க இந்த பத்து வருஷத்தில் தான் இந்த பழக்கம் மாறுச்சா?இல்ல நான் தான் இன்னும் பழமைவாதியாவே இருக்கேனா.
பாக்கெட் மணி பற்றி தோழிகளின் பக்கமுள்ள வாதம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசை

நீங்க சொன்ன நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கலை.

நாம் வளர்ந்த காலம் வேறு. அன்னிக்கு அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. (நாம் வளரும்போதும் நம்ப அப்பா அம்மாவும் இதையேத்தான் சொன்னாங்க )

இன்னிக்கு பிள்ளைகளும் ரொம்பவே டிமான்ட் பண்றாங்க. நாம் படிக்கும் போது மிஞ்சிப்போனால் நீங்க சொன்ன சிப்ஸ் பாக்கெட் இல்லைன்னா பெப்சி இதுதான். இப்போ பீட்சா, பர்கர்னு சாப்பாடும் மாறிப்போச்சு செலவும் கூடிப்போச்சு.

இருங்க நிகழ்ச்சியை நல்லா பார்த்துட்டு வந்து பதிவு போடறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹிஹிஹீ. நானும் இந்த ப்ரோக்ராம் பார்க்கல... இப்ப நான் எந்த ப்ரோக்ராமும் பார்க்க முடியாது, ஏன்னா எங்க ஊட்டுல இப்போ கேபிள் டிவி கஃட்டு :)

ஆனா பொதுவா இதை பற்றி பேசணும்னா நான் நிறையவே பேசுவேன் ;) நீங்க என்ன எனக்கு ஜூனியரா??? 10 வருஷம் தான் ஆச்சுன்னு சொல்றீங்க ;)

நான் பள்ளி முடித்தது 1997ல. அதுவரை பாக்கெட் மணி என்று ஒன்று இல்லை. எப்பவாது ஸ்கூல் கேண்டீனில் இந்த மிட்டாய் இருக்கு, அந்த மிட்டாய் இருக்குன்னு கேட்டிருந்தா அப்பா வாங்கி சாப்பிட அனுமதிப்பார். ஆனா பணம் யாரும் தந்து நான் வாங்கியதில்லை... அப்போ எல்லாம் எங்க வீட்டில் வீட்டு செலவுக்கு வைக்கும் பணம் யார் எடுத்தாலும் அப்பா கணக்கு கேட்க மாட்டார். அப்படி வளர்ந்ததாலோ என்னவோ, அந்த பணத்தை செலவு செய்யும் போது மனம் ரொம்பவே யோசிக்கும். குடும்ப சூழ்னிலை தெரிந்து வளர்ந்தோம்.

1997 - 2003 காலேஜ் படிச்சப்போ அப்பா எப்பவாது தான் வர முடியும்... அதனால் வரும் போது ஹாஸ்டல் ஃபீஸ் அது இதுன்னு எல்லாம் என்னிடம் தான் கொடுத்துட்டு போவார். என் செல்வுக்குன்னு மாசம் 1000 தருவார். ஆனா அதை நான் செலவு பண்ணதே இல்லை. அவரே சொல்வார்... ஹாஸ்டல் சாப்பாடு சரி இல்லன்னு சாப்பிடாம இருக்காத, கேண்டீன்ல சாப்பிடுடான்னு... எனக்கு பிடிச்ச கோக், பெப்ஸீ எல்லாம் வீட்டுக்கு அதிக செலவு வைக்க கூடாதுன்னே விட்டேன். என்னை எங்க அப்பாவே திட்டுவார் சாப்பாட்டுக்குலாமா கணக்கு பார்ப்பாங்க... எதுக்கு சம்பாதிக்கிறேன், நல்லா சாப்பிடுங்கன்னு. ஆனா மனம் வராது எனக்கு.

எல்லாத்துக்கும் சேர்த்து வேலைக்கு போய் சம்பாதிச்சப்போ செலவு பண்ணேன். :) மாச சம்பளமே போதாத அளவுக்கு. ஹிஹிஹீ.

இப்போ தான் இந்த புது ட்ரெண்ட்... கை செலவுக்கு காசு... மே பீ... இப்போ உலகம் மாறிகிட்டே போகுது... குட்டீஸ் முன்ன மாதிரி ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு இருப்பதில்லை. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கேட்கவே வேண்டாம்... சினிமா லொட்டு லொசுக்குன்னு 1000 செலவு... பெற்றோரும் நம்ம பெற்றோரை விட நல்லா சம்பாதிக்கிறாங்களோ என்னவோ... விலைவாசி கூடி போச்சு, நாம 1 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இப்போ 5 ரூபாய்க்கு விற்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் அந்த நிகழ்ர்ச்சியை பார்த்தேன். பிள்ளைகளுக்கு தேவைப்படும் தொகை, அதற்கான காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அவர்கள் பெறும் முறையும் அது கிடைக்காவிடில் அதை எடுத்துக்கொள்ளும் (திருடி) முறையும் மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சி, அதை அறிந்தும் அந்த பெற்றோர் எந்த அதிர்ச்சியும் அடையாதது. மொத்தத்தில் அந்த நிகழிச்சியைப் பார்த்து மிகவும் பயந்து போயுள்ளேன். நான் B.E. படித்துக்கொண்டிருக்கும் இரு பையன்களின் அம்மா.

கவி நிகழ்ச்சியை பார்த்துட்டு வாங்க பிறகு நொந்து போயிடுவீங்க

வனி ஒரு குத்துமதிப்பா சொன்னேன் 10 வருஷம் முன்புன்னு:)...நான் பள்ளி முடிச்சது 2001 இல்.
ஆமாங்க எனக்கு எங்க பாட்டி தான் வருஷம் இருமுறை பெருநாள் காசாக 100 ரூபாய் தருவாங்க..ஆனால் அதை செலவு செய்யாம எடுத்து எடுத்து வச்சு அடிக்கடி திறந்து திறந்து பார்ப்பதோட சரி கடைசியில் கேவலமா எங்கம்மாட்ட சொல்வேன் அம்மா இந்த காசில் என்ன செய்றதுன்னே தெரியல இப்ப நான் என்ன செய்யலாம்னு..அந்த காலம் மலையேறிப் போச்சாசரி விலை வாசி ஏறிப் போனது கூட சரி ஆனால் அப்பா அம்மா என்ற மதிப்பு போய் பணம் பறிக்கும் ஒரு உபகரனமாகவும் கேவலமாகவும் பார்ப்பது மிகுந்த வேதனை தந்தது

ஜெயா வின்சென்ட் நியாமான கவலை தான் உங்களுடையது..ஆமாங்க அன்றும் என் பள்ளி தோழிகள் நான் ரெண்டு ரூபாய் ரேஞ்சில் இருந்த போதும் 100 ரூபாய் கொண்டு வரும் பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் அப்பா ஊருக்கு போறப்ப தந்துட்டு போனார் என்று சந்தோஷப்படுவாங்க தவிற பணத்தை பறிச்சுட்டு வந்ததாகவோ செலவு செய்தே ஆக வேண்டுமென்று வெறியாக இருந்ததாகவோ நியாபகமில்லை..ஆனால் அந்த பிள்ளைகள் சொன்ன முறை ஒவ்வொன்றும் இன்று என் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.
தோழிகளுக்கு பெரிய அன்பளிப்பாக வாங்கி கொடுத்து பெரிமைப்படுவதும்.எல்லோரையும் விட மெச்சி நடக்க செலவு செய்வதும் ,காசு தராவிட்டால் உங்களுக்கு பிறந்ததே வேஸ்ட் என்று சொல்வதும்,தோழனுக்கு தண்ணி அன்பளிப்பா வாங்கி கொடுத்ததும் எதிரணியில் பெற்றோர் பெருமையுடன் அதையெல்லாம் கேட்டு ரசித்ததும் சுத்தமா ஜீரணிக்க முடியவே இல்லை..இங்கு உள்ள நாமாவது சற்றி சிந்தித்து பிள்ளைகளிடம் மரியாதையை இழக்குமளவுக்கு அவர்களுக்கு குனிந்து கொடுக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வோம்..
தேவைப்பட்டதை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது வேறு ,அதட்டி பிடுங்கிக் கொண்டு போவது வேறு..இன்றைய பிள்ளைகளின் அடங்காபிடாறிதனத்தை பெற்றோர் சாதனையாக கருதி ரசிப்பதை கைவிட்டாலே பிள்ளைகள் நல்லபடியாக இருக்கும்

நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.. பார்த்துட்டு அன்னிக்கு பூரா நான் என் கணவர்கிட்ட இதபத்தி தான் பேசிட்டு இருந்தேன்... அந்த பசங்க பேசினது ரொம்ப அதிர்ச்சி... ஒரு நல்ல வளரும் தலைமுறை இப்படி இருந்தா என்ன ஆகறதுன்னு பயம் வருது.. பசங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியாமலே போகுதோன்னு கவலையா இருக்கு.. நம்மல்லாம் PG படிக்கும்போது கூட ஒரு 50 ரூபாய் வாங்கறதுக்கு எப்படில்லாம் தயங்கி தயங்கி கேட்டிருக்கோம்.. இவ்ளோ அசால்டா இவங்கல்லாம் பேசறாங்களேன்னு கஷ்டமா இருக்கு.. 1000 ரூபாய் எவ்ளோ சாதாரணமா இருக்கு இப்பலாம்.. அதுலயும் ஒரு பொண்ணு கேட்டுச்சே அட்லீஸ்ட் 50000 மாசம் செலவுக்கு வேணும்ன்னு.. எனக்கு மயக்கமே வந்திருச்சு போங்க.. பெற்றோர்கள் என்ன பண்ணுவாங்க தளி.. அதுவும் ஒரு பப்ளிக் ஷோவில்.. அங்கேயே அவங்கள திட்டவும் அறையவுமா முடியும்... வேற வழி இல்லைல... ஆனா கண்டிப்பா ரெண்டு தரப்பிலும் தவறு இருக்கத்தான் செய்யுது... அதிலும் அந்த பசங்க பெற்றோர்களை இமிட்டேட் செய்து காமிச்சாங்களே.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. எப்பவுமே பிள்ளைகளை நம்ம வீட்டு சூழல் தெரியவெச்சு வளர்க்கவேணும்... அது இன்னைக்கு நிறைய பெற்றோர் செய்ய மாட்டேங்கறாங்க...
ஆனா சீப் கெஸ்ட் ரெண்டு பேருமே நல்ல சில கருத்துகளை சொன்னங்க... அவங்க சொன்னதை கேட்டாவது கொஞ்சம் மாற முயற்சி பண்ணலாம் பசங்க, பெற்றோர் ரெண்டு தரப்புமே...

வித்யா பிரவீன்குமார்... :)

நம் நாட்டில் தான் நம் பக்கத்து ஊரில் கல்லுரி மானவிகள் எல்லாம் நல்ல நல்ல வீட்டு குழந்தைகள் பாக்கெட் மணிக்காக கல்லூரி கட் அடிச்சுட்டு வெளிய பைக்கில் வந்திறங்கி 1000 ,2000ரத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு ஒண்ணுமே தெரியாதது போல மாலை வீடு திரும்புவது வழக்கமான ஒன்றாம்...இதை கேட்கையில் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கு..இந்தளவுக்கு காசுக்கு பிள்ளைகள் அடிமையாகிப் போகக் காரணம் என்ன

அதுவும் சரி தான் ஒரு பொது நிகழ்ச்சியில் எதுவும் செய்ய முடியும் ஆனால் அட்லீஸ்ட் ஒரு அதிர்ச்சியான ஒரு முகபாவம் கூட இல்லாதது எனக்கு பேரதிர்ச்சி ..என் பெற்றோரை முன்னில் இருத்தி பார்த்தே அங்கயே என்னை தரதரன்னு இழுத்து வச்சு சாத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்

நமக்கு நம்மை சுற்றி ஒரு கட்டுப்பாடு இருந்துச்சு... தடுக்கறதுக்கு யாருமே இல்லன்னா கூட நாமாகவே பல விஷயங்களை செய்ய மாட்டோம்... அந்த சுய கட்டுப்பாடு இப்ப இல்லையோன்னு தோணுது... வெளிநாட்டில் எல்லாம் வந்து இருந்தா கூட நம்மோட கல்ச்சர் எப்பவும் நம்ம கூட இருக்கு... இப்பலாம் நம்ம ஊர்ல சில இடங்களுக்கு போகும்போது வெளிநாட்டில் இருக்கறது மாதிரி தோணுது.. சில சமயம் பார்க்கவே கண்ணெல்லாம் கூசுது.. நம்ம பிள்ளைகளை நாமே தப்பா சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா இது தானே நடக்குது... இதுக்கு பெரிய ஊரு சின்ன ஊருன்னு வித்தியாசம் எல்லாம் இல்லை.. எதுவுமே தப்பில்லைன்னு ஒரு லெவல் வரைக்கும் போய்ட்டாங்க.. ஆனா அவங்கள இப்படி தப்பா கைட் பண்ணற பல விஷயங்கள் தான் அவங்கள சுத்தியும் சமூகத்துல நடக்குது.. அத அவங்களும் சரின்னு நினைச்சுக்கறாங்க.. பேரண்ட்ஸ் ரொம்ப சிரத்தை எடுத்து பிள்ளைகளை கவனிக்கலேன்னா கஷ்டம் தான்...

வித்யா பிரவீன்குமார்... :)

மேலும் சில பதிவுகள்