என் சந்தேகத்தை போக்குகள்

அபார்சன் ஆகி 1 மாதத்தில் உடனே கரு தரித்தல் பிரச்சனை ஆகுமா. உடலுக்கு பாதிப்பு உண்டா. தோழிகளே பதில் சொல்லுங்கள்.

அபார்ஷன் கு அப்புறம் குறைந்த பட்சம் 3 மாதம் அடுத்த குழந்தைக்கு இடைவெளி இருக்கணும் னு டாக்டர் சொன்னாங்க ... ஒரு மாதத்துலே கரு உண்டான பிரச்சனையாகுமானு தெரியலை பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அபார்ஷன் ஆனா எவ்வளவு நாளில் கரு நிக்கலாம் என்பது எப்படி ஆனது என்பதை பொறுத்தது. உங்க உடல் நிலையை பார்த்து டாக்டர் தான் அதை முடிவு பண்ணனும். பொதுவா 6 மாசம் கேப் சொல்வாங்க. கர்ப்பப்பை இன்னொரு குழந்தையை சுமக்க தெம்பாக. ஆனா சீக்கிரமே தானா அபார்ட் ஆகி இருந்தா 3 மாத இடைவெளியே கூட போதும். ஒரு மாதத்தில் ஆனா பிரெச்சனையா இல்லையான்னு அவங்க் அவங்க கருப்பையின் நிலை மற்றும், உடல் ஆரோக்கியத்தை பார்த்து டாக்டர் தான் சொல்ல முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு முதல் குழந்தை கருத்தரித்து abortion ஆனது. எனக்கு d & c செய்தார்கள்.அப்போது டாக்டர் 3 மாதம் இடைவெளி விட சொன்னாங்க. நானும் 3 மாதங்களுக்கு பின் concieve ஆகி இப்போது எனக்கு 1.7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எனக்கு தெரிந்து minimum 3 மாதம் gap விடணும். அப்போதான் அடுத்த குழந்தை நல்ல ஆரோக்கியமுடன் பிறக்கும். abortion ஆல் கருப்பை பலவீனமாக இருக்கும். அது திரும்பவும் வலுவடைய தான் இந்த இடைவெளி.

நொம்ப நன்றி ரஞ்சனி. எதிர்பாராமல் அபார்சன் ஆகி விட்டது அதை தாங்க முடியாமல் இருக்கிறேன்

கவலைபடாதீங்க. எனக்கும் அப்படி தான் இருந்தது. மனச ரிலாக்ஸ் ஆ வச்சுக்கோங்க. நல்லா healthy foods சாப்டுங்க. எனக்கு போலிக் அசிட் tablet குடுத்தாங்க டாக்டர். உங்களுக்கும் குடுத்துருந்தா எடுத்துகோங்க. 3 மாசம் கழிச்சு ட்ரை பண்ணுங்க கண்டிப்பா success ஆகும். பட் இந்த வாட்டி கொஞ்சம் careful ஆ இருங்க. All the best :)

மீண்டும் கருத்தரிப்பது அவரவர் உடல் நிலையைப் பொருத்தது.ஒரு கர்ப்பம் கலைந்ததும் அடுத்த கர்ப்பம் உருவாக மனமும் உடலும் தயாராக வேண்டும்.மற்றது உருவாகும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமெனில் 3 மாத இடைவெளி வேண்டும் என்பது டாக்டர் சொல்லும் அறிவுரை.எனக்கு அபார்சன் ஆகி 1 வருடம் முடிகிரது.இருந்தும் இன்னும் குழந்தைப் பேறில்லை.

மேலும் சில பதிவுகள்