மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை

அன்பு தோழிகளே,

Today's Dinamalar New'S ,

தமிழகத்தில், 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில், குறுவை சம்பா பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூரில் அணையில், 15 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. இதில், 5 டி.எம்.சி., தண்ணீர், குடிநீருக்கு தேவைப்படுகிறது. சகதி நீர் போக, மீதி, 6.32 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. இது, ஆறு நாள் விவசாய பாசனத்துக்கு மட்டுமே உதவும். இன்னும் குறுவை சம்பாவுக்கு, 65 நாள் தண்ணீர் தேவைப்படுகிறது. கர்நாடகா, தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், சம்பா பயிர் கருகி விடும்.

மழைக்காக காத்திருக்கும் நமது விவசாயா நண்பர்களுக்காக .. நாம் பிரார்த்தனை செய்வொம்..வாருங்கள் தோழிகளே...

mazai peithu payir sezithu valara vivasayigal magiza tamilnadu sezika ivai anaithirkum mazai nangu vara vendum andavanai vendukiren valga tamilagam

கவலைப்படாதீங்க விவசாயத்தோழர்களே! வருகிற 3ம் தேதி முதல் தென்தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்று நேற்று செய்தியில் வானிலை பற்றிய பகுதியில் கூறினார்கள். கண்டிப்பாக நல்ல மழை பெய்து தமிழகம் செழிப்படைய ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. காலையில் அப்பா கூட , நாமெல்லாம் இங்க சப்பாடுல கை வைக்றோம்ன்னா, அவீங்க அங்க சேத்துல கை வைப்பதுனால் தான்னு சொன்னாங்க. ஆனால் விவசாயிகள் படும் கஷ்டம் ரொம்ப அதிகம்.

ஒரு சொட்டு தண்ணிர் கூட தர மாட்டோம்ன்னு கர்நாடக அரசு சொல்லி விட்டதாக பேப்பரில் படித்தேன். நம்மால் நம் மாநிலத்தில் என்ன செய்தால் இந்த பிரச்னை தீரும் என்று அரசு ஆராய்ந்து, அதற்கு ஏற்ற மாதிரி வழிமுறைகளை கையாண்டு, நம்ம விவசாயி மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மேட்டூர் அணை பகுதியில் மழை வரவும், கர்நாடக அரசும் மனசு மாறி மனிதாபிபமான அடிப்படையிலாவது தண்ணிர் திறந்து விட வேண்டும் என்று நாம் கடவுளை பிராத்தனை செய்வோம்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மேலும் நமது தோழி Sudha கூரியது போல ,கர்நாடக அரசும் மனசு மாறி மனிதாபிபமான அடிப்படையிலாவது தண்ணிர் திறந்து விட வேண்டும் என்று நாம் கடவுளை பிராத்தனை செய்வோம்...

வாருங்கள் தோழிகளே...

Suganthy

கூட்டு பிராத்தனைக்கு என்றும் நல்ல பலன் உண்டு...

இறைவன் அருளால் நல்ல மழை பெய்து விவசாய நிலங்களும், விவசாயிகளின் மனங்களும்

குளிரட்டும் என்று பிராத்திக்கிறேன்...

அந்த வருண பகவான் மனம் இறங்கி இந்த பருவ மழை பொய்த்துப் போன நம் தமிழக நிலத்துக்கு மழை தர எல்லோரும் ஒரு சேர சேர்ந்து வேண்டுவோம் .கண்டிப்பாக இறைவன் மனம் இறங்குவான் ,நமது விவசாயிகளுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாகவும் மழை வர வேண்டும் .கண்டிப்பாக தொடர்ந்து வரும் நாட்களில் கனமழை வர வேண்டும் ,நம் பூமியும் ,நமது மனங்களும் அதனால் குளிர வேண்டும் .கடவுள் அதற்க்கு மனம் வைக்க வேண்டும் .கண்டிப்பாக வைப்பான் .தோழிகளே அனைவரும் வந்து பிராத்தனை செய்யுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நான் இந்த வருடம் மழை பெய்யாததை நினைத்து கவலைப்படாத நாளே இல்லை.எங்கள் ஊர் குளத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் அதற்குள் வற்றி விட்டது அந்த பக்கம் போகும் போதெல்லாம் அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கும்:(

மழை இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு பிழைப்பு இல்லை. விசாயிகள் இல்லை என்றால் நம் எல்லோருக்கும் பிழைப்பு(உணவு) இல்லை.எனவே நாமேல்லோருடைய வாழ்வுக்கும் முக்கிய காரணம் மழை தான்.அதை தர ஆண்டவன் மனது வைத்தால் மட்டுமே நடக்கும்.மழையை நமக்கு தேவையான அளவு தருமாறு அந்த ஆண்டவனிடம் நானும் வேண்டிகொள்கிறேன்....

SSaifudeen:)

விவசாய தோழர்களே போதும் போதுமென்னும் அளவிற்கு மழை பெய்து உங்கள் மனமும், பூமியும் சீக்கிரமே குளிர கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மழை வேண்டி தோழிகளின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி.
மழை தெய்வமே பூமித்தாயை குளிர்வித்து விவசாயத்தை செழிக்க வைப்பாயாக.
உன் ஒவ்வொரு துளி மழையும் ஒவ்வொரு உயிர்க்கும் இன்றியமையாததாகும். உன்னை எதிர்பார்த்து காத்திருக்கும் எங்களை வாழ்வாங்கு வாழவைப்பாயாக.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்