கரண்ட் இருக்கும் வரை கதையடிக்கலாம் வாங்க;)

தோழீஸ் முந்தைய இழை 20 பக்கங்கள் ஆகி விட்டது. இங்க வந்து பேசுங்க வாங்க வாங்க... ஷம்னாஸ்க்கு மட்டுமே தமிங்கிலத்திற்கு அனுமதி மற்ற தோழிகள் தயவுசெய்து தமிழில் மட்டும் பதிவிடவும்:)
(ஷமீஹா சந்தோஷமா?)

யாரெல்லாம் இருக்கீங்க? நான் சாப்பிட்டு திருப்பி வரதுக்குள்ள எல்லாம் வந்துருங்க!!!

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

காலைவணக்கம் கார்த்தி. நான் வந்துட்டேன்... நானும் ஹர்ஷியும் நல்லா இருக்கோம். காலை டிபனுக்கு தோசை புதினா சட்னியோட சாப்பிட்டாச்சு. இப்ப ஹர்ஷி தூங்கினபிறகு நான் கீரை க்ளீன் பண்ண போய்டுவேன். மதியம் உங்க அண்ணா லன்ச்க்கு வந்திருவாங்க. சிறுகீரை குழம்பும் கேரட் பொரியலும் செய்யப்போறேன். நீங்களும் சொல்லுங்க கார்த்தி.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

good girl... அப்படி தான் கூப்பிட்டதும் வரணும்.... நான் தோசை கார சட்டினி சாப்பிட்டேன்... லஞ்ச் என்ன செய்யன்னு தெரியலை ... ஒண்ணும் முடிவெடுக்கலை... பண்ணிக்கலாம்... எல்லாம் எனக்கு தானே ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நிஷாக்கா எப்படி இருக்கீங்க அக்கா? அக்கா, நான் அண்ணாவை தப்பா நினைச்சு எதுவும் சொல்லல. ஆனா அவர் முன்னாடி உங்களால ஏதோ சங்கடமான வெளிய சொல்ல முடியாத பிரச்சனைன்னு மட்டும் புரியுது. சரி அக்கா நீங்க சீக்கிரம் நிம்மதியாகி ஷமீஹா ஷாதிகாகிட்ட பேசுங்க. என்னாலதான் பேச முடியாத மாதிரி சூழ்நிலை. நான் ஷமீஹாகிட்ட எதுவானாலும் உங்களுக்கு தகவல் தரேன். டேக்கேர் அக்கா. பை.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கார்த்தி இப்படி தனியா சமைச்சு தனியா சாப்பிடுறது செம்ம கடுப்படிக்கும் இல்ல?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கார்த்தி மதுரைக்கு போனப்போ வேற எங்கெல்லாம் போனீங்க? ஆமா நேத்து மதுரைலயிருந்து என்ன வாங்கிகிட்டு போனீங்கன்னு கேட்டா மிளகாய்தூள் தனியாதூள் அந்த தூள் இந்த தூள்னு சொல்றீங்க?;) ஷாப்பிங் எங்கயும் போய் எதுவும் வாங்கலையா? பர்த்டே பேபிய அண்ணா எங்கயும் கூட்டிப்போய் எதுவும் வாங்கித்தரலையா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கார்த்திகா ,நித்யா இருவரும் நலமா ?கரண்ட் இருக்கும் வரை அதாவது நான் பன்னிரண்டு மணி வரை இங்கே கதை அடிக்கலாம் என நினைக்கிறன் .எதை பற்றி கதை அடிக்கலாம் .சொல்லுங்கள் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

ரொம்ப கடுப்பு தான் நித்தி... என்ன பண்ண?? பட்டி நடுவர் ஆக போறீங்க போல.. தலைப்பு ரெடி யா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நான் மதிய சமையலையும் சேர்த்து இப்போதே செய்து விட்டேன் ,கத்தரி ,காராமணி காரக்குழம்பு ,பீட்ரூட் பொரியல் .அதனால் எனக்கு சமையல் வேலைகள் இல்லை .

கார்த்திகா நீங்கள் மதியம் என்ன சமையல் செய்ய போகிறீர்கள் ?

நித்யா சிறுகீரை குழம்பு ,கேரட் பொரியல் எனக்கு மிகவும் பிடித்தது .என்னை நினைத்துக் கொண்டே சாப்பிடுங்கள் .அப்புறம் நித்யா நீங்கள் எந்த ஊர் ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

நல்ல முடிவு தான்... நீங்களே எதை பத்தி னு சொல்லிட்டா அதை பத்தியே பேசலாம் பா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

மேலும் சில பதிவுகள்