கல்கண்டு பொங்கல்

தேதி: December 1, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
பால் - 2 கப்
நீர் - 2 கப்
முந்திரி, திராட்சை - தேவைக்கு
நெய் - 3 மேசைக்கரண்டி
கல்கண்டு - 100 - 150 கிராம் (ஒரு கப்பிற்கு சற்று கூடுதல்)
ஏலக்காய் - 2


 

பச்சரிசியை நன்றாகக் கழுவி 2 கப் நீர் மற்றும் 2 கப் பால் விட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
கல்கண்டுடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
பொடித்ததை வேக வைத்துள்ள பொங்கலில் சேர்த்து சிறுதீயில் அடுப்பில் வைத்து கிளறவும்.
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சை வறுக்கவும்.
வறுத்த முந்திரி, திராட்சை மீதம் உள்ள நெய் அனைத்தையும் பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.

கல்கண்டு சாதம் / கல்கண்டு பொங்கல் இரண்டுமே ஒன்று தான். அதிகமாக நீர் சேர்த்தால் பொங்கல். அவ்வளவு தான் வித்தியாசம். நெய் அளவு கூடினால் இன்னும் சுவையாக இருக்கும். இது திகட்டாமல் இனிப்பு சற்று குறைவாகவே இருக்கும். இனிப்பு சுவை அதிகம் விரும்புபவர்கள் கல்கண்டை அதிகமாக சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா அக்கா கல்கண்டு பொங்கல் ரொம்ப ஈஸியா இருக்கு. வீட்ல எல்லாமே இருக்கு செஞ்சுட்டு சொல்றேன். வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கல்கண்டு பொங்கல் குறித்த உங்களுடைய குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் முயற்சி செய்து பார்க்க இருக்கிறேன். நன்றி.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

வனி இதுவும் நீங்கதான்னு முகப்புலயே கண்டுபிடிச்சுட்டேன் ;-)

சூப்பர் பொங்கல் வாழ்த்துக்கள்.:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்லதொரு இனிப்பு குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கல்கண்டு பொங்கல் செய்முறை எளிமையாக் இருக்கு,வனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி ,
சூப்பர் நெய்வேத்யம் .
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பொங்கல் பார்க்கவே இபோவே சாப்டனும் போல இருக்கு வனி அக்கா நைஸ் கல்கண்டு பொங்கல் செஇயகூட ரொம்ப நேரம் ஆகாதுனு நினைகிரேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இப்பவும் கண்டு பிடிச்சுட்டீங்களா??!!! கறிவேப்பிலை இல்ல, குண்டா வேற... சாய்ச்சு வைக்கல... எப்படிய்யா எப்படி??!?!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு குட்டீஸ்க்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ரொம்ப ஈசி கனி, அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா