என் கை விரல் நகங்கள் இரண்டு நிறங்களாக காணப்படுகின்றன்.மேல்ப்பகுதி வெள்ளை நிறமாகவும் கீழ்ப்பகுதி இளஞ்சிவப்பு நிறமாகவும் உள்ளது.இது ஒரு நோய் நிலமையா?
என் கை விரல் நகங்கள் இரண்டு நிறங்களாக காணப்படுகின்றன்.மேல்ப்பகுதி வெள்ளை நிறமாகவும் கீழ்ப்பகுதி இளஞ்சிவப்பு நிறமாகவும் உள்ளது.இது ஒரு நோய் நிலமையா?
நகம்
//கீழ்ப்பகுதி இளஞ்சிவப்பு// அப்படி இருந்தால் ஆரோக்கியமான நகம். அதனால் மேற்பகுதி - விரல்களைத் தாண்டி வளர்ந்திருக்கும் நகம்தானே! வெள்ளை நிறமாக இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால்... முன்பு இப்படி இல்லாமலிருந்து இப்போ நிறம் மாறி இருந்தால் வைத்திய ஆலோசனையைப் பெறுவது நல்லது. ஃபங்கல் இன்ஃபெக்ஷனாக இருக்கலாம். சில சமயங்களில் மருந்தில்லாமலே மாறி விடும்.
ஈரமான வேலைகள் செய்யும் போது கையுறை அணிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளுங்கள்.
நகப்பூச்சு பயன்படுத்துபவராக இருந்தால், பூச்சுக்கள் தரமானவையாக இருக்கட்டும். நகம் சரியாகும் வரை பூச்சுக்களைத் தவிர்க்கலாம். அல்லாது போனால் நிற மாற்றத்தை அவதானிப்பது சிரமம். அவசியமானால், 'நெய்ல் ஸ்ட்ரெத்னர் அல்லது 'க்ளியர் கோட்' மட்டும் கொடுக்கலாம்.
- இமா க்றிஸ்
நன்றி இமா
நீங்கள் கூறியது சரி.இது இன்பெக்சன் என்று என் மருத்துவ நண்பர் ஓருவர் சொன்னார்.இதற்கு இயற்கை மருத்துவம் சிறந்தது என்கிறார்.யாருக்காவது இதற்கான மருந்து தெரியுமா?
நகம்
இயற்கை வைத்தியம் பற்றித் தெரியவில்லை.
ஈர வேலை செய்யும் போது கையுறை அணிந்து கொள்வதும் மாய்ஸ்ஷரைசிங் லோஷன் பயன்படுத்துவதும் காலாவட்டத்தில் இதனை இல்லாது போக்கிவிடும். கவனமில்லாமல் இருந்தால் மீண்டும் வரலாம். அந்த நண்பர் மருந்து எதுவும் சொல்லவில்லையா? கேட்டுப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
இமா
மருந்து எதுவும் சொலலவில்லை.கையுறை பயன்படுதுவது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் முயற்சி பண்ணவேண்டும்.