என் சந்தேகத்தை தீர்த்து வைங்க ப்ளீஸ்

என் பையனுக்கு 3 வயது ஆகிரது. அவனுக்கு 3 நாட்களாக fever இப்பொ பரவாஇல்லை. கொஞ்சம் குறைந்து இருக்கு.இந்த paracemetalsyrup and ibubrufin syrup மருந்து எப்படி தரனும். detail ஆ சொல்லுங்க ப்ளீஸ். high feverஆ இருந்தா brufin தர சொல்ராங்க(>38.5)doctor. அப்புறம் இரண்டு மருந்தையும் மாத்தி மாத்தி தர சொல்றாங்க. குறைஞ்சு போச்சுனா மறுபடி paracemetal 6 மணிக்கு ஒரு முறை தரனுமா. நான் கேட்பது வேடிக்கையாக இருக்கும். ஆனா என் சந்தேகத்தை தீர்த்து வைங்க பா. இப்பொ என் பையன்க்கு கண் எல்லாம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு. அப்படி தான் இருகுமா ப.juice, soup குடிக்க மாட்டென்ரான்.

ஜெயா ibubrufin syrup இந்த சிரப் மருத்துவரிடம் ஒருமுறைக்கு ரெண்டு முறை கேட்டுட்டு கொடுங்க. முடிந்த வரை இதை தவிர்ப்பது நலம். சைட் எஃபெக்ட்ஸ் ஜாஸ்தி. டாக்டர்ஸ் தெரியாம சொல்லியிருக்க மாட்டாங்க. இருந்தாலும் இந்த மருந்தை பெரியவர்களையே அவாய்ட் பண்ண சொல்றாங்க. அதனால் கேட்டு உறுதிப் படுத்திக்கோங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா சொன்ன மாதிரி இந்த மருந்து எதுக்கு???

இது பொதுவா அடிபட்டா ஆண்டீன்ஃப்ளமேட்டரின்னு கொடுக்க சொல்வாங்க. காம்பினேஷன் மருந்து... உடல் வலிக்கும், காய்ச்சலுக்கும். குழந்தைக்கு பாராசிடமால் போதுமே... நீங்க டாக்டர் கேட்டே கொடுங்க ஜெயா... குழந்தைகள் விஷயத்தில் வீட்டு வைத்தியம் தவிற மற்ற எதுவும் நாமா செய்வது சரி வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

jaya paracetemal 6 mani nerathuku oru murai kodunga fever high iruntha kuraiyalana mafatal-p konjama kodunga fever pattunu kuraiyum. fever iruntha kan appadithan irukum ,so dont worry

என் பையனுக்கும் 2ம் குடுத்தாங்க .நீங்க paracetamol குடுத்து 3 or 4 hoursல இ-ப்ருபின் குடுங்க.இது குடுத்தா பிவேர் குறையும்.மறுபடி 4 hoursல பரசெடமோல் குடுங்க.fever நல்ல குறைய ஆரம்பிச்சவுடனே brufen நிறுத்திருங்க.பரசெடமோல் மட்டும் 6 ஹௌர்ச்க்கு ஒரு தடவை எப்பவும் போல குடுங்க.

2 நாள் முன்னாடி டாக்டர் கிட்ட போனொம். அப்பொ high fever அவர் சொன்னபடி paracetamol, i brufon 3hrs 3ml மாற்றி மாற்றி தந்தென். நேற்று காலையில் lowfeverஆ இருந்தது. paracetamol 6 hrs தந்தென். ஆனால் fever குறையல இரவு மறுபடி fever அதிகம் ஆகிவிட்டது. இருமல் வேற, சரியாக சாப்பிடவும் இல்ல. எனக்கு அழுகை அழுகையா வருது பா. fever குறையவெ இல்லை.

jaya

ஜெயா,

அதிகப்படியான காய்ச்சல் paracetamolமற்றும் i brufen ல் இறங்கி விடும்,குறையவில்லையென்றால்chest infection இருக்கிறதா என்று பாருங்கள். chest infectionஇருந்தால் ஆன்டிபயாட்டிக் மூலம் தான் குறைக்க முடியும்,மறுபடியும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

Ibrufen என்பது analgesia (வலி),anti-pyretic(காய்ச்சல்) ,மற்றும் anti-inflammation (வலியுடம் கூடிய வீக்கம்) போன்றவற்றின் கலவை.

மேலும் சில பதிவுகள்