பட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா? சொந்தபந்தங்களா?

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்களே! அனைவருக்கும் வணக்கம். முதன்முதலாக பட்டிக்கு நடுவர் பொறுப்பு ஏற்றிருக்கும் என்னை நீங்கள் அனைவரும் பட்டியில் கலந்து கொண்டு ஊக்குவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த பட்டியின் தலைப்பு திரு. ஷேக் முகைதீன் அவர்களுடையது. நன்றி ஷேக் அண்ணா. பொதுவான பட்டி விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும். தலைப்பு அனைவருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். வாங்க தோழிகளே வந்து உங்கள் வாதங்களால் நடுவரை தலையை பிச்சுக்க வைங்க:)

தோழிகளே பட்டிமன்றம் 79 இனிதே துவங்கிவிட்டது.
அனைவரும் வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
வாதாடி ஆதரவு தாரீர்! தாரீர்!! தாரீர்!!!

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பட்டிமன்ற நடுவரும் என் அருமை சகோதரியுமான நித்யாவுக்கு முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்னைப்போல் என் தங்கையை எல்லோரும் ஊக்கப்படுத்தி ஆதரவு தருமாரு எனது சார்பில் கேட்டுக்கொள்கிரேன்

புது நடுவருக்கு எனது வாழ்த்துக்கள்... (இந்தாங்க மலர்க் கொத்து)
இன்றையக் காலத்திற்க்கு ஏற்றத் தலைப்பு தான்..
அனைவரும் வருவோம்!!! ஆதரவும் தருவோம்!!!

மீண்டும் வாதத்துடன் வருகிறேன்....

ஹசீன்

புது நடுவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களே என்பது எனது கருத்து....விரிவான வாதங்களுடன் பிறகு வருகிறேன்....

ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் சொந்தங்களா நன்பர்களா... இந்த கேள்விக்கு என் அனுபவத்தை எனது பதிலாக கூருகிறேன் என்னை பொருத்தவரை ஆபத்துன்னா முதலில் உதவுவது நன்பர்கள்தான் ஏன்னா சொந்தக்காரங்க பலபேர் என்னைபொருத்தவரை நமக்கு ஏதும் ப்ரச்னைன்னா சந்தோஷப்படும் சொந்தக்காரங்கதான் அதிகம் அதுப்போல் நமக்கு ஏதும் பிரச்னைன்னா சொந்தக்காரங்க கிட்ட சொல்லமுடியாத சேதியக்கூட நன்பர்கள் கிட்ட பகிர்ந்துக்கலாம் நமக்கு நமது நன்பர்கள் நமக்கு தோல் கொடுத்து ஆருதலும் உதவியும் செய்வார்கள் சொந்த்க்காரங்க நம்ம ப்ரச்னை முடியும்வரை மரைந்து பார்த்து ரசிச்சுட்டு நம்மை திரும்பியே பார்க்கமாட்டாங்க நம்ம ப்ரச்னை முடிந்ததும் நம்மிடம் வந்து எதுவுமே தெரியாதமாதிரி விசாரிச்சு நம்ம சொல்லிகாட்டும் கஷ்டத்தை ரசிக்கும் சொந்தக்காரங்கதான் எனக்கு அதிகம் அதனால் ஆபத்துக்கு உதவுவது நன்பர்கள்தான் என்று கூரி எனது உரையை முடித்துக்கொள்கிறேன் வனக்கம்

நிஷாக்கா உங்கள் அன்பிற்க்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா. ம்ம்ம் நீங்க நண்பர்களே அணியா? சூப்பர். ஆபத்தான நேரங்களில் உதவுறவங்க நண்பர்கள்தான். சில சொந்தக்காரங்க நம்முடைய பிரச்சனைக்கு உதவலன்னாலும் மறைஞ்சிருந்து அதாவது பின்னாடியிருந்து பார்த்து ரசிக்கத்தான் செய்வாங்கன்னு சொல்றாங்க. எதிரணி தோழிகளே வாங்க வந்து நிஷாக்கா வாதத்திற்கு பதில் சொல்லுங்க. நிஷாக்கா ம்ம்ம்... பட்டைய கிளப்புங்க:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹசீன் வாங்க வாங்க... வாழ்த்துக்களுக்கும் மலர்க்கொத்திற்கும் நன்றி. நீங்க எந்த அணின்னு தேர்வு செய்துட்டு வாங்க. வந்து தூள் கிளப்புங்க.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷமீலா. நீங்களும் நண்பர்களே அணியா? வெரிகுட். ம்ம்ம் நடுவர் காத்திருக்கேன் சீக்கிரமா எல்லாரும் வந்து திக்குமுக்காட வைங்க பார்க்கலாம்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

naduvar avargalay intha kalathula mattum illa yentha kalathilaiyum namaku oru prachanaina munnadi vanthu nikkirathu nanbargal mattumay periya summava sonnainga uyir kodupan thozhannu

நீங்கள் அறுசுவையின் புதிய உறுப்பினர் என்பதை உங்கள் ப்ரொஃபைல் பார்த்து தெரிந்துகொண்டேன். நீங்கள் புதியவர் என்பதால் பட்டிவிதிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பட்டிமன்ற விதிமுறைப்படி பட்டிமன்றத்தில் தமிழ்ப்பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த பக்கத்திற்கு கீழே வலதுபக்கம் தமிழ் எழுத்துதவி லின்க் உள்ளது அதை பயன்படுத்தி பட்டியில் தொடர்ந்து பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்