கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது

தோழிகளே எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகுது.எனக்கு குழந்தை இல்லை என்கிற கவலை வரவர அதிகமாகிட்டே இருக்கு.நானும் treatment எடுத்துட்டு தான் இருக்கேன்1 வருடமாக.ஒவ்வொரு மாதமும் எதிர் பார்த்து பார்த்து என் மனசு ரொம்ப வெறுத்து போய்ட்டு..இங்க நானும் என் husband இருக்கோம்.எல்லாரும் அத பற்றி நினைக்காம இருக்கனும்னு சொல்லுராங்க.ஆனா என்னால நினைக்காமா இருக்க முடியல. பார்க் போன அங்க குழந்தைகளை பார்க்கும் போது, ஹாஸ்பிட்டல் போனா அங்க conceive ஆகி இருப்பவங்கள பார்த்தா எனக்கு குழந்தை ஆசையும் ஏக்கமும் ரொம்ப அதிகமாகுது.எதோ நம்ம பாவம் பண்ணியிருக்கோம் அதான் குழந்தை பிறக்க லேட் ஆகுது என்ற எண்ணம் என் மனசுல அடிக்கடி வருது.நான் படிக்கும் காலத்துல ரொம்ப ஜாலியா சிரிச்சிட்டே இருப்பேன்.ஆனா இப்ப என்னால அப்படி இருக்கவே முடியல. எனக்கு 2 நாளா ரொம்ப அழுகையா வருது அழுதுட்டே தான் இருக்கேன். ரொம்ப கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது.எல்லா தோழிகளும் எனக்காக இறைவனை வேண்டுங்கள்..

அக்கா கவலபடாதீங்க சீக்ரமாவெ உங்கலுக்கு ஒரு குட்டி தம்பியோ இல்ல குட்டி பாப்பாவோ கடவுள் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிரேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்களோட வலி என்னன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. கவலைபடாதீங்க. 3 வருஷம்தானேம்மா ஆகுது? அண்ணனோட லைஃப் நல்லா என்ஜாய் பண்ணுங்க. அந்த கடவுள் உங்களுக்கு சீக்கிரமே மழலைச்செல்வத்தை தருவான். நானும் உங்களுக்காக ப்ரார்த்திக்கிறேன் ஷாதிகா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சாதிகா என்ன இது சின்னபுள்ளமாதிரி தைரியமா அல்லாஹ் கொடுப்பான்னு உறுதியாயிரும்மா நம்பிக்கையை மட்டும் எப்பவும் இழக்காமல் இருக்கும் நீ தாயாக அல்லாஹ் சீக்கிரம் அருள் புரிவானாக ஆமின் நாங்க எல்லாரும் துவா செய்கிரோம் நீ வீட்டில் இருந்து கவலபட்டா தம்பி வெளியே வேளைக்கு போய் நிம்மதியா இருக்கமுடியுமா அல்லாஹ் உனக்கு நல்ல கனவனக்கொடுத்தமாதிரி நல்ல சாலிஹான மழலையும் கொடுப்பான் கவலப்படாமல் இரும்மா

சாதிகா உங்கள மாதிரி தான் நானும் கன்டிப்பா நம்மளுக்கு அந்த் ஆன்டவன் கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்த தருவார் கவலை படாதீங்க நான் உங்க நிலையில் தான் கல்லூரி வாழ்க்கையில் நான் அழுது என் நன்பர்கள் யாரும் பார்தது இல்லை நானும் இருக்கிரென் நான் தினமும் வேதனை பட்டு ஆன்டவனை பார்த்து நாங்கள் என்ன பாவம் பன்னினொம் என் எங்கலை சொதிகிராய் என்ட்ரு கண்ணீர் விடுகிரென் கவலை படாதீர் சகோதிரி கன்டிப்பா நம்மலை கடவுள் கை விட மாட்டார்

அஸ்ஸலாமு அலைக்கும் ஷாதிகா. ஏன்மா மனச போட்டு குழப்பிக்கிறீங்க? அல்லாஹ்விற்கு நமக்கு எப்போது என்ன தரவேண்டும் என்று தெரியும். நிச்சயம் அல்லாஹ் சாலிஹான குழந்தையை நாடுவான். கவலை வேண்டாம். எத்தனையோ பேருக்கு 10 வருடங்களுக்கு பிறகு கூட அல்லாவின் நாட்டம் கிடைத்திருக்கிறது. வீணாக நீங்களும் கஷ்டபட்டு பையாவையும் கஷ்டபடுத்த வேண்டாமே ப்ளீஸ். நீங்கள் சந்தோஷமாக இருந்து அவருக்கும் சந்தோஷத்தை தரவும். நிச்சயம் நல்லது நடக்கும் ஆமீன். அடுத்த மாதம் இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும். கவலையை விட்டு நிம்மதியை நாடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை தாயாக்குவான்.

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

அஸ்ஸலாமுஅலைக்கும்.............சாதி கவலைபடாதிங்க அல்லாஹ் கூடிய சீக்கிரம் இன்ஷாஅல்லாஹ் உங்களுக்கும் நம் மற்ற தோழிகளுக்கும் மழலை செல்வத்தை தருவான் நாங்க துவா செய்றோம்...............நீங்க நம்பிக்கையோட தைரியமா இருங்க..........

வலைக்கும் முஸ்ஸலாம் எனக்காக துஆ செய்த அனைத்து தோழிகளுக்கும் ரொம்ப நன்றி......குழந்தைக்காக ஏங்கும் அனைத்து தோழிகளுக்கும் அல்லா சீக்கிரம் குழந்தை பாக்கியத்தை தருவான்....ஆமின்....

அன்புதோழி ஷாதிகா,நீங்கள் கவலைபட்டு மனதை நோகடித்துக்கொள்ளாதீர்கள்.ஆண்டவன் மிக விரைவிலேயே உங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுப்பான் என்று நம்புங்கள். உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஷாதிகா கவலை படாதீர்கள்,கண்டிப்பா இறைவன் உங்கலுக்கு அழகிய குழந்தையை பரிசாக தந்து உங்கள் வாழ்க்கையை மிக்க மகிழ்ச்சி உள்ளதாக மாற்றுவான் ,அந்த நாள் விரைவில் நடக்கும்ன்னு மனதில் நம்பிக்கையோடு இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்,நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிரேன்..............

அஸ்ஸலாமு அலைக்கும் சாதிகா,
கவலைப்படாதீங்க மா,அல்லாஹ் உங்களுக்கு கண்டிப்பா குழந்தையை தருவான்....நீங்க குழந்தைக்காக காத்திருக்கிற இந்த மாதிரி நேரத்துல கவலைப்படுறது கூடாது..மனசை சந்தோஷமா வச்சுக்கோங்கா...கூடிய சீக்கிரம் நல்ல சேதி சொல்ல போறீங்க பாருங்க... நானும் உங்களுக்காக அல்லாஹ் கிட்ட துவா செய்றேன்....ஆமீன்...

மேலும் சில பதிவுகள்