ட்வின் கர்ப்பம்

தோழிகளே எனக்கு உதவி செய்யுங்கள்

நான் கர்ப்பமாகி 7 வாரம் முடிந்துள்ளது டாக்டர் ஸ்கேன் செய்து ட்வின்ஸ் என்று சொன்னாங்க ஆனா ஒரு குழந்தைக்கு தான் ஹார்ட்பீட் உள்ளது 8 வாரம் சென்றபின் பார்க்கலாம். ஹார்ட்பீட் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது வரலனாலும் ப்ராப்லம் இல்ல ஒரு குழந்தை நன்றாக இருக்கும் என சொல்கிறார்கள்
ஆனால் எனக்கும் கடவுள் நல்லபடியா த்ருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு தெரிந்த ஒருவர் ஒன்று ஹார்ட்பீட் இல்லாமல் இருப்பதால் மற்ற் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்கிறார் இது பற்றி யாருக்காவது தெரிந்தால் அனுபவம இருந்தால் தயவு செய்து எனக்கு உதவி செய்ங்க தோழிகளே

கெளரி, தாயான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :)எனக்கும் ட்வின்ஸ் தான். நான் கன்சீவான போது தொடக்கத்தில் ஒரு குழந்தைக்கு தான் ஹார்ட்பீட் நன்றாக தெரிந்தது.. நன்றாக இருந்தது. இன்னொரு குழந்தைக்கு சரியாக கேட்கவில்லை. அந்த குழந்தையின் வளர்ச்சி குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். நானும் உங்களை போல மனவருத்தத்தில் தான் இருந்தேன். ஆனால் இரு குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும் போஷாக்கா சாப்பிடும்படி அறிவுறுத்தினார்கள். இன்னொரு குழந்தை நன்றாக இருக்காது.. நன்றாக பிறக்காது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ரெகுலர் செக்கப் போகும்போது கூட ஒரு குழந்தையின் ஹார்ட் பீட் நன்றாக தெரியும். இன்னொரு குழந்தைக்கு தெரியாது. பிரசவத்திற்காக ஆபரேஷன் தியேட்டர் செல்வதற்கு முன்பு எடுத்த ஸ்கேனில் கூட இப்படித்தான் இருந்தது. ஆனால் கடவுள் அருளால் இரு குழந்தைகளும் நல்லபடியாக பிறந்தன.

உங்கள் விஷயத்தில் எனக்கு நிச்சயித்து சொல்ல முடியவில்லை. கர்ப்பத்தின் தன்மை, குழந்தைகளின் வளர்ச்சி,உடல்நிலை ஆளுக்கு ஆள் மாறுபடும். அதை நன்கு அறிந்தவர் உங்களை பரிசோதிக்கும் மருத்துவர் தான். அதனால் நீங்கள் அவர் அறிவுரைப்படி மேற்படி சிகிச்சைகளை மேற்கொண்டு அவர் அறிவுரைப்படி நடப்பது தான் சிறந்தது. சுகப்பிரவமாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மிக்க நன்றி கல்பனா ஓ அப்படியா உங்களுக்கும் ட்வின்ஸ்தானா எனக்கும் கடவுள் நல்லபடியா த்ருவார் என்ற நம்பிக்கை உள்ளது. 8 வாரத்தில் ஹார்ட் பீட் தெரியலனா ஒரு குழந்தை நல்லாருக்கும்னு சொல்றாங்க அப்படினா இந்த கரு என்னவாகும் அதனால் வளர்ச்சியில் பாதிப்பு வருமா இதுதான் என் குழப்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க

உங்கள் கவலை புரிகிறது. ஆனால்... யோசித்துக் கொண்டிருப்பதால் எதையாவது மாற்ற இயலுமா? இல்லையல்லவா? யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க. நல்லதை நினையுங்கள். மீதி எல்லாம் உங்களைக் கவனிக்கும் டாக்டர் பார்த்துக் கொள்வார். அவரிடமே சந்தேகங்களைக் கேளுங்க. மனதை நன்றாக வைத்திருப்பது முக்கியம் இப்போது.

‍- இமா க்றிஸ்

குழந்தைகளின் மீதான உங்கள் திடமான நம்பிக்கையும், ஆழமான அன்பும் அவர்களை நல்ல முறையில் இந்த உலகுக்கு கொண்டுவரும். எங்களது பிரார்த்தனையும் கூடவே இருக்கும். வாழ்த்துக்கள் கௌரி

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

இரட்டை குழந்தைகளும் எந்த குறையுமின்றி முழு ஆரோக்கியத்துடன் பிறக்கும்....தோழிகள் அனைவரும் உங்களுக்காக ப்ரார்த்திப்போம்...மகிழ்ச்சியாக மனதை வைத்துக் கொள்ளுங்கள்....இறைவன் கைவிட மாட்டான்.....

நல்லபடியா 2 குழந்தையும் கையில் கிடைக்கும்... நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க..

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

2 குழந்தைகளும் நல்லபடியாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். கட்வுள் கை கொடுப்பார். நம்பிக்கையோடு சந்தோஷமாக இருங்க. நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க.

அனைவரின் வாழ்த்திற்கும் ப்ரார்த்தனைக்கும் நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்