பெருநாள் பராசாப்பம்

தேதி: December 6, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

அரிசி மாவு - ஒரு படி(கொர கொரப்பானது)
தேங்காய் - பெரியது ஒன்று (முதல் தேங்காய் பால் எடுக்க)
முட்டை - 8
பொட்டுக்கடலை - கால் கப்
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று(பெரியது)
கரூர் நெய் (அ) டால்டா - 100 மில்லி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சமையல் சோடா - அரை தேக்கரண்டி


 

அரிசி மாவில் பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து சேர்த்து, பின்பு முட்டை, உப்பு, சமையல் சோடா மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு ஒன்று சேர இட்லி மாவைவிட சற்று கெட்டியாகக் கலக்கிக் கொள்ளவும். அதை 4 மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
புளித்திருக்கும் மாவில் வெங்காயத்தையும், நெய்யையும் ஊற்றி நன்கு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும், ஒரு கரண்டி நிறைய மாவு எடுத்து ஊற்றி, மூடிபோட்டு தீயை குறைத்து வைத்து வேக விடவும்
சிவந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுவையான பெருநாள் பராசாப்பம் தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படம் கடைசியில் உள்ளது கேக் போல இருக்கு... மாறி போச்சுதா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா இது பார்பதர்க்கு கேக் போல் தான் இருக்கும். சுவையும் நன்றாகவே இருக்கும் இதை வெறுமெனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனுடன் கறி, கோழி குழம்பு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். அவசியம் செய்து பாருங்க நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

salam halila..paraasappam cake madhiri azhaha iruku..taste um supera irukum pola...vazhthukkal oru pudhu dish engaluku kuduthaduku...adha apdiyae inga anupi vidunga..na saptu plate a ungaluku anupi vaikraen ok ya?

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

பராசாப்பம் சூப்பரா உப்பி கேக் போல இருக்கு. நீங்க கட் பண்ணி இருக்கிறத பார்த்து நான் கூட ஏதோ கேக் ஐட்டம்தான்னு நினைச்சேன். வாழ்த்துக்கள் ஹலிலா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

முகப்பில் பார்த்ததுமே உங்க குறிப்புதான்னு!கண்டுபிடித்துவிட்டேன்.நல்லா செய்து இருக்கீங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நான் நிஜமாவே படம் மாறிடுச்சோன்னு நினைச்சேன்... அதான் உங்களை கூப்பிட்டு கேட்க பதிவிட்டேன். சூப்பர்... முதல்ல பார்த்தப்போ தோசை போல தோணிடுச்சு. சூப்பர். அவசியம் செய்துட்டு சொல்றேன். நீங்க சொன்ன மாதிரி சிக்கன் செய்யும் அன்றே செய்துடுறேன். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேக் என்று நினைத்தேன்..சூப்பர் ஹெல்தி...
வாழ்த்துக்கள்
வனஸ்பதிக்கு பதில் எண்ணெய்/நெய் சேர்க்கலாமா?(எனக்கு ஒதுக்காது :( )

என்றும் அன்புடன்,
கவிதா

சூப்பர் ரெசிபி ரொம்ப நீட் ஆ செய்து காட்டி இருகீங்க அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்...சூப்பரா செஞ்சு இருக்கிங்க மா....
ஹலிலாவிடம் இருந்து அருமையான குறிப்புகளா வருது.....நான் கேட்டது எப்போ வரும்?
வாழ்த்துக்கள்...

ஆருமையான குறிப்பு வாழ்த்துக்கள் ஹலி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சலாம் ஷம்னாஸ் டேஸ்டும் அருமையா இருக்கும் ட்ரை பண்ணிபாருங்க. இது புது குறிப்பல்ல கலம் காலமாக எங்கள் ஊர் பகுதிகளில் செய்து வருவதுதான். ஒரு ப்ளேட் போதுமா ஷம்னாஸ்? வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

நித்யா பண்டிகைக் காலங்களில் எங்கள் ஊர் பக்கம் மற்றும் எங்கள் குடும்பங்களில் காலம் காலமாக செய்து கொண்டிருக்கும் ஒரு டிபன் வகை. சுவையும் நன்றாகவே இருக்கும் அவசியம் செய்து பாருங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முஹ்சினா உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா. அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா. எண்ணெய் சேர்த்தும் செய்யலாம் நன்றாகவே வரும்.அவசியம் செய்து பாருங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்க அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா. இன்ஷாஅல்லாஹ் நாகூர் வாடா விரைவில் வரும்

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருட்செல்வி வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹலிலா
முகப்பில் பார்த்து கேக் பேக் செய்து வேச்சிருக்கிங்கனு நினைச்சேன்..
எப்படி இப்படி வந்ததுன்னு ஆச்சர்யமா இருக்கு.. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா...பராசப்பம் பார்க்க சூப்பரா இருக்கு:)வாழ்த்துக்கள்:)
கண்டிப்பா கூடிய சீக்கிரம் செய்து பார்க்கிறான்.ஆனால் எங்கள் ஊரில் ப்ராச்சப்பம் என்று வேறு மாதிரி செய்வோம் முடிந்தால் நான் அனுப்புறேன்...

SSaifudeen:)

ரம்யா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமிஹா வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா. ஏற்கனவே ஆப்பத்துமா பராசாப்பம் குறிப்பு செய்து அனுப்பியுள்ளேன் அதையும் முடிந்தால் பாருங்கள். உங்கள் ஊர் பராசாப்ப குறிப்பும் அவசியம் செய்து அனுப்புங்கள். நீங்க எந்த ஊரு?

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா எங்கள் ஊர் பிராச்சப்பம் அனுப்புறேன்.நான் தஞ்சாவூர் பக்கம்ப்பா...

SSaifudeen:)