உரப்படை

தேதி: September 18, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

உரப்படை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சிற்றுண்டி. இதனை சூடாக சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும். இந்த ருசிமிகு உரப்படையினை நமக்காக செய்து காட்டியவர் திருமதி. சசிகலா அய்யாசாமி.

 

புழுங்கல் அரிசி - கால் படி
கடலை பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 10
பூண்டு - 6
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப்
எண்ணெய் - கால் கப்
தேங்காய் பல் - கால் கப்
கல் உப்பு - 2 மேசைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுமார் 7 மணிநேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் கிரைண்டரில் அரிசி, மிளகாய், பூண்டு மூன்றையும் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு அத்துடன் கடலை பருப்பு, துவரம் பருப்பு, சோம்பு, உப்பு போட்டு 5 நிமிடம் அரைக்கவும். அடை மாவு மிகவும் நைசாக இல்லாமல் சற்று கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
சின்ன வெங்காயத்தை நைசாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காய் கீற்றினை பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.இவற்றை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும்.
மாவுடன் வெங்காயம், தேங்காய் அனைத்தையும் சேர்த்து கிளறி தயாராய் வைத்துக் கொள்ளவும். அடை மாவினை புளிக்கவிடத் தேவையில்லை. உடனேயே அடையாக ஊற்றலாம்.
இப்போது தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, மாவை எடுத்து ஊற்றி அடை போல் பரப்பி விட்டு மேலே எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.
சுமார் 2 நிமிடம் கழித்து, அடையினை திருப்பி போட்டு மறுபுறத்தை வேக விடவும். இரண்டு பக்கமும் பொனிறமாக வெந்ததும் எடுத்து விடவும்.
இப்போது ருசியான உரப்படை தயார். இதற்கு அவியல் அல்லது தேங்காய் சட்னி மிகப் பொருத்தமாய் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்