படிப்பு பற்றிய சந்தேகம்?

என்னோட பையன் இப்போ 2ன் ஸ்டேன்டர்டு (னைஜீரியால) படிக்கிரான். நாங்க 4த் சென்னைல போடலாம்ன்னு இருக்கோம். என்னோட கேள்வி என்னன்னா, இங்க வரலாறு சப்ஜக்ட் வந்து இங்க உள்ளதுதான் சொல்லிக் கொடுக்குறாங்க, நாங்க ஊர்ல வந்து போடும் போது இதனால எதாவது பிரச்சனை வருமா கொஞ்சம் சொல்லுங்கப்பா...

எனக்கு தெரிந்து எந்த பிரச்சனையும் வராது. நான் பள்ளியில் படிக்கும் போது சில மாணவர்கள் வேறு நாடுகளில் படித்து விட்டு இடையில் எங்கள் பள்ளியில் சேர்ந்ததுண்டு, நல்ல மதிப்பெண்களை மட்டுமே அநேக பள்ளிகள் எதிர் பார்க்கும்.

ரொம்ப நன்றிப்பா.. இதுக்காகவே நானும் பையனும் ஏப்ரல்ல ஊறுக்கு போரதா இருக்கோம், சரி அதுக்கு முன்னாடி யாறுகிட்டயாவது கேட்டுக்களாம்னுதான் இங்க கேட்டேன். மறுபடியும் நன்றிப்பா.. தோழீஸ் வேற யாறுக்காவது தெருஞ்சாலும் சொல்லுங்கப்பா...

நல்ல பள்ளியில் அட்மிஷனைமட்டும் பாருங்க. 4 ம் வகுப்பில் என்ன பெரிய வரலாறு இருக்கப்போகுது. சின்னப்பிள்ளைங்க சீக்கிரமா அடாப்ட் ஆகிடுவாங்க.என் பிள்ளைகள் மாறாத பள்ளியா? உங்க கவனம் அட்மிஷனுக்குத்தான்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப நன்றிப்பா, எனக்கு ஊறுக்கு போரத நினச்சு காய்ச்சலே வந்துருச்சு, இப்ப நீங்களாம் சொல்ரத கேட்டவுடனதான் என்க்கு ரிலீஃபா இருக்கு, நன்றி ஜெயந்தி...

எந்தப் பிரச்சினையும் வராது.

வனி சொன்னது சரிதான். பெரியவங்களை விட சின்னவங்க ஈஸியா அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. தேவையானால் நீங்க கொஞ்சம் உதவலாம். ஆரம்பத்திற்கு.... தேவையான தகவல்கள் சேகரித்துக் கொடுக்கலாம். பிறகு அவங்களே பிடிச்சுக் கொள்ளுவாங்க.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றிங்க, எனக்காக பதில் போட்டதுக்கு. ஆமா அந்த மாதிரிதான் பன்னனும், மறுபடியும் நன்றி இமா...

எனது மகள் யு கே ஜி சி பி எஸ்ஸி ஸிலபஸில் படிக்கிறாள்
.
நன்கு ஸ்பீடாக எழுதுவாள் முன்பு.... இடையில் இரண்டுமாதம் லீவில் இருந்து
திரும்ப ஸ்கூல் போகிறாள்.

ஆனால் ஹேண்ட்ரைட்டிங் ஸ்பீட் கம்மியாகி ரொம்ப ஸ்லோவாக எழுதுகிறாள்

.. இதை எப்படி ஸ்பீட்&நீட்டாக மாற்றுவது

ப்ளீஸ் தெரிந்த தோழிகள் எனக்கு உதவுங்கள் இதன் தொடர்பாக எதாவ்து
லின்க்ஸ் இருந்தாலும் எனக்கு தாருங்கள் ப்ளீஸ் நன்றி ....

இதுக்கு நீங்க அவங்களை மீண்டும் எழுத வெச்சாலே போதுங்க... விடுமுறையில் எழுதுவது டச் விட்டு போனதால் மாற்றம் இருக்கும்... மீண்டும் ரெகுலரா எழுத ஆரம்பிச்சா பிக்கப் பண்ணிடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனி.... டெய்லி எழுதுகிறாள்... ஆனாலும் அவள் எழுத அடம் பன்னுகிறாள்..
வேறு வழிமுறை எதாவது இருந்தாலும் சொல்லுங்க..

எழுதவேன்னா புக்ஸ் நிறைய இருக்கு, டாட்ஸ் எல்லாம் வெச்சு குழந்தைகளுக்குன்னு... அப்படி வாங்கி கொடுங்க. ஆரம்பத்தில் ஸ்கூலிலும் அப்படி கொடுத்து தான் பழகுவாங்க. அதையே இப்ப நீங்க திரும்ப வாங்கி கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்