இறால் குழம்பு

தேதி: December 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

இறால் - 250 கிராம்
வெங்காயம் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
முருங்கைக்காய் -ஒன்று
வாழைக்காய் - ஒன்று
எண்ணெய்
உப்பு
கொத்தமல்லித் தழை
குழம்பு மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
அரைக்க:
தேங்காய் - கால் மூடி
தக்காளி - ஒன்று
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
சோம்பு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி


 

இறாலை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைக்கவும். காய்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், காய்கள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும.
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து வதக்கவும் (இறாலை வதக்கி சேர்ப்பதால், குழம்பு சுவையாக இருக்கும்).
வதக்கிய இறாலை குழம்பில் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான இறால் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் குறிப்பு. கடைசி படம்... சான்ஸே இல்ல... சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இரண்டாவது குறிப்பும் அசத்தலா இருக்கு. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப அருமையான குறிப்பு

அன்புடன்,
ஹலீமா

ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

thanks,yanaku eral giraivi than thyreum.indru than eral vangi firigel vaithyn.veramathri butusa yathaudhu tri bannalamnu yosithutu iruthyn.arusuvai open panna udaney unga eral curepu parthyn roomba happy agetteyn.thanks yanaku intha one mattum sollunga pls kai podama seylama illa vera kaigal podalama?

hairunfathah

என் குறிப்பை வெளியிட்ட அட்மினுக்குநன்றி
கருத்து தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி

நன்றி .காய்கள் சேர்க்காமலும் செய்யலாம் .

அவரைக்காய் ,கத்தரிக்காய் கூட சேர்க்கலாம்

ரூபிணி ,

அருமை ( * _ * )
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம் ப ந ல் லா இ ரு க்கு

அருமையான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இறால் குழம்பு பார்க்கவே எடுத்து சாதத்துக்கு ஊற்றி சாப்பிடனும் போல் உள்ளது.வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

ரொம்ப நல்லா இருக்கு ...