தேதி: December 8, 2012
கார்டு ஸ்டாக் பேப்பர் (விரும்பிய நிறங்களில்)
க்விலிங் டூல்
மேக்னட்ஸ் - தேவையான அளவுகளில்
கனமான அட்டை - ஒன்று
க்ளூ கன் (மேக்னட்ஸ் ஒட்டுவதற்கு)
க்ளு
கார்டு ஸ்டாக் பேப்பரை கால் அங்குல அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். இதில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களை எடுத்துள்ளேன்.

முதலில் ஸாசர் (Saucer) செய்ய 3 பச்சை நிறத் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக நீளமாக ஒட்டிக் கொள்ளவும். கடைசியில் மஞ்சள் நிறத் துண்டு ஒன்றை ஒட்டி வைக்கவும். காபி கப் செய்ய இதே போல் 5 பச்சை நிறத் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக நீளமாக ஒட்டிக்கொள்ளவும். கடைசியில் மஞ்சள் நிறத் துண்டு ஒன்றை ஒட்டி வைக்கவும்.

ஸாசர் செய்ய ஒட்டி வைத்துள்ள துண்டை க்வில்லிங் டூல் கொண்டு இறுக்கமாக க்வில் செய்து ஓட்டவும்.

படத்தில் காட்டியபடி தட்டு வடிவில் இருப்பதை நடுவில் லேசாக அழுத்திவிடவும். ஸாசர் தயார்.

கப் செய்ய ஒட்டி வைத்துள்ள துண்டை டூலில் சுற்றி ஒட்டவும். நடுவில் டூல் வைத்து லேசாக அழுத்தி, கப் வடிவில் குழியாக வரும் வரை அழுத்தி விடவும்.

ஸாசரின் மேல் கப்பை வைத்து ஒட்டி விடவும். இதே போல் 3 கப் அன்ட் ஸாசர்களை செய்து வைக்கவும்.

கனமான அட்டையை எடுத்து கால் பாகம் மடித்து, மீதமுள்ள முக்கால் பாகத்தில் செய்து வைத்துள்ள கப் அன்ட் ஸாசர்களை ஒட்டவும்.

மடித்து வைத்த கால் பாகத்தின் நடுவில் க்ளூ கன் வைத்து மேக்னட்டை ஒட்டவும். கப் அன்ட் ஸாசர் மேக்னட் தயார்.

காரட் மேகனட் செய்ய 4 ஆரஞ்சு நிற துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக நீளமாக ஒட்டி க்வில்லிங் டூலில் வைத்து இறுக்கமாகச் சுற்றி ஒட்டவும். க்விலிங் டூலால் நடுவில் அழுத்தி காரட் போல அடியில் கூர் முனை வரும் வரை அழுத்தி விடவும்.

பாதி பச்சை நிற ஸ்ட்ரிப்பை ஐந்தாக மடித்து காரட்டில் இலைகள் போல் வைத்து ஒட்டி விடவும். காரட்டின் ஒரு பக்கம் மேக்னடை ஒட்டி விடவும். காரட் மேக்னட் தயார். மஞ்சள் நிற பேப்பர் கொண்டு பனானா மேக்னட் செய்துள்ளேன்.

இதே போல் பூந்தொட்டி செய்யலாம்.

இதே போல் மீன், டெடி(Teddy) செய்யலாம். வேறு விரும்பிய வடிவங்களும் செய்து கொள்ளலாம்.

Comments
கலா
வாவ்... ரொம்ப ரொம்ப சுப்பர் :) கலக்கிட்டீங்க கலா. இன்னும் பல கற்றுத்தரணும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கலா
கலா
வாவ்.. அருமையா இருக்குங்க.. :)
தொடர்ந்து கலக்குங்க.. நானும் ஒரு 3 D ஏஞ்சல் செய்து வெச்சுருக்கேன்.டைம் இருக்கோம் பொது அனுப்புறேன்.. ;) வாழ்த்துக்கள்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
கலா
மிக அழகா பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி(:-
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
க்வில்லிங்
குட்டி குட்டியாக எல்லாமே அழகா இருக்கு கலா. தொடருங்கள். :)
- இமா க்றிஸ்
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)
Kalai
வனிதா அக்கா
மிக்க நன்றி :)
Kalai
ரம்யா
மிக்க நன்றி :) கட்டாயம் அனுப்புங்கோ,3D ஏஞ்சல் பார்க்க காத்திருக்கேன்.
Kalai
அருள்
மிக்க நன்றி :)
Kalai
நன்றி
நன்றி இமா ஆன்டி:)
Kalai
கலா,
கலா,
அழகா செய்றீங்க..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
கவி
மிக்க நன்றி கவி :)
Kalai