ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

மிக மிக அருமையாவும் தெளிவாவும் சொல்றீங்க....க்ரேட்ப்பா
முதல்ல இந்த டிப்ஸ் எல்லாம் எடுக்கும்போது ஞாபகம் வரதேயில்ல

சீக்கிரம் எடுக்கணும்னு ஆர்வ கோளாறில சொதப்பிடும்...

சும்மா இருக்கும்போது நீங்க சொல்றாப்பல நிறைய ஆங்கிள்ல எடுத்து பார்க்கனும் போல....

மிக மிக பயனுள்ள இழை...

வெல்டன் மை டியர்..:)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புகைப்பட கருவி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் வேண்டிய கருத்துகள். வாழ்த்துக்கள்.
தொடருங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை.

ஈஸ்வரன்

வனி,
சூப்பர் இழை..
கிரேட் ஜாப் !!!
இன்னும் தொடர்ந்து சொல்லுங்க!!!

என்றும் அன்புடன்,
கவிதா

வனி
நல்ல தகவல்.கத்துகிட்டேஇருக்கேன்.காமெரா வாங்கும் போது எத்தனை மெகா பிக்செல்னு மட்டும் பார்ப்பேன்.
ஆங்கிள் ரொம்பமுக்கியம்.அது பயிற்சியினாலே வருவது.ஒரே காட்சியை வித்தியாசமான கோணங்கள்ள படமெடுக்கும் போது ரொம்ப different படம்கிடைக்கும்.
இன்னும் சொல்லுங்க.

இளவரசி... மிக்க நன்றி. ஆரம்பிக்க காரணமே உங்களை போல் சில தோழிகள் தானே ;) இனி எல்லாம் நினைவில் வைத்து எடுத்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க.

ஈஸ்வரன்... மிக்க நன்றி. எல்லாருக்கும் தகவல் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. :)

கவிதா... மிக்க நன்றி :) எனக்கு தெரிந்தவற்றை நிச்சயம் பகிர்ந்துக்கறேன்.

நிகிலா... மிக்க நன்றி :) உண்மை... ஆங்கிள் கட்டாயம் வித்தியாசம் தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு சில சந்தேகங்கள்.இங்கு பதிகிறேன்.பதில் அளிக்கும் போது கருதில் கொள்ளவும்
1. Lighting செய்வது எப்படி {குறிப்பாக வீட்டிற்குள்}
2. தொலைவில் உள்ளதை படம் எடுக்கும் (zoom) போது சிறு அசைவு கூட பாதிப்பது ஏன்?

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

இன்னும் சில மோட்கள் பற்றி இன்று சொல்கிறேன்...

3. Portrait

இது ஏறக்குறைய மாக்ரோ மோட் போல தான். அதாவது f value குறைவாக இருக்கும். அதனால் படத்தில் டெப்த் இருக்காது. அதாவது நாம் எய்ம் பண்ணும் சப்ஜக்ட் மட்டுமே தெரியும், அதன் பின்னால் உள்ள விஷயங்களில் தெளிவு இருக்காது. ஆனால் இவை இரண்டும் மற்ற விஷயங்களில் வேறுபாடு உண்டு... மாக்ரோ மோட் அளவுக்கு இது நுனுக்கமான பொருட்களை எடுக்காது. மனிதர்களை எடுக்கவே அதிகம் பயன்படுத்தப்படும் மோட் இது. ஷோல்டர் வரை மட்டுமே கவர் ஆகும் அளவுக்கு நெருக்கமாக மனிதர்களை படமெடுக்க இது உதவும். இது ஒரே சப்ஜக்ட்டை எய்ம் பண்ணும் போது சிறப்பாக பயன்படும். க்ரூப்பாக இருப்பவர்களை எடுக்க அல்ல. இதில் ஃப்ளாஷ், சூம் எல்லாமே பயன்படுத்த இயலும். இப்போது மாக்ரோ மோடுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

4. Landscape

இது மாக்ரோ / போர்ட்ரெய்ட் மோடுக்கு நேரெதிர். அதாவது f value மிக அதிகம் (அபர்சர் குறைவு). அதனால் படத்தில் டெப்த் அதிகமாக இருக்கும். உதாரணமா சொல்லணும்னா...

நீர் சூழ்ந்த ஒரு மலை பகுதியை எடுக்கறீங்கன்னு வைங்க... உங்க கிட்ட இருக்க நீர் பகுதியும், பொருட்களும், தூரத்தில் உள்ள மலையும் தெளிவாக இருக்கும். மாக்ரோ / போர்ட்ரெய்ட் போல அருகில் உள்ளது மட்டுமின்றி, தூரத்தில் உள்ள தகவலும் தெளிவாக பதிவாகும். அதனால் இதை நல்ல சீனரீஸை படமெடுக்க பயன்படுத்தலாம். இயற்கை, மலை பகுதி அல்லது ஏதும் உங்கள் கேமராவை விட்டு தூரத்தில் உள்ள விஷயங்கள், அல்லது க்ரூப்பாக நிற்கும் நபர்கள் போன்றவற்றை படமெடுக்க இந்த மோட் பயன்படுத்தலாம்.

5. Beach

பீச்சுன்னு செட் பண்றது பகல் நேரத்தில் பீச்ல எடுக்க நல்லதா இருக்கும். இரவில் அல்ல. காரணம் இந்த மோட் செட் பண்ணும் போது பீச்சில் பொதுவா இருக்க கூடிய வெய்யில், அதிகப்படியான வெளிச்சத்துக்கு ஏற்றபடி உங்க கேமரா செட்டிங்கை மாற்றிக்கொள்ளும். இந்த செட்டிங் இல்லாமல் பீச் முன் நிற்கும் ஆட்களை படமெடுத்தால் அவர்கள் உருவம் சரியா வராது. காரணம் பேக்ரவுண்டில் உள்ள அதிகப்படியான வெளிச்சம், சப்ஜக்ட்டை டார்க் ஆக்கலாம். பீச் மோடில் வைத்து எடுக்கும் போது இந்த பிரெச்சனை வராது, முன்னே நிற்பவர்கள் சரியாக படத்தில் பதிய முடியும். அது உங்கள் படத்தை லைட் ஆக்கும்.

6. Sports / Action

வேகமாக நகரும், ஓடும், அசையும் விஷயங்களை படமெடுக்க உகந்த மோட் இது. அதாவது மூவிங் ஆப்ஜக்ட் / மூவிங் சப்ஜக்ட். இதில் ஷட்டர் ஸ்பீட் மிக அதிகமாக இருப்பதால் மிக வேகமாக காட்சியை ஃப்ரீஸ் செய்து பதிவு செய்து கொள்ளும். அதனால் சப்ஜக்ட் நகர்ந்தாலும், நாம் நகர்ந்தாலும் படம் தெளிவாக இருக்கும். சில கேமராக்களில் (Canon’ல உண்டு) இந்த மோடில் இருக்கும் போது தொடர்ச்சியாக க்ளிக் செய்யவும் இயலும். அதாவது டக்கு டக்குன்னு 4, 5 ஷாட் எடுத்துட்டே இருக்கலாம். ஷட்டர் ஸ்பீட் அதிகம் என்பதால் இது சாத்தியம். இது நல்லா வர முடிஞ்ச வரை முன்பே கேமராவை ஃபோகஸ் செய்து வைப்பது நல்லது.

உதாரணமா... உங்க பிள்ளை கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தையத்தை படமெடுக்கணும்னு வைப்போம். உங்க பிள்ளை கூடவே நீங்களும் கேமராவோட நகர்வதை விட... அவர்கள் ஓடப்போகும் அந்த ட்ராக்கில் ஒரு இடத்தை பாய்ண்ட் பண்ணி ஃபோகஸ் செய்து கேமராவை தயார் நிலையில் வைங்க... உங்க பிள்ளை அந்த இடத்தை கடக்கும் போது ஷட்டர் ரிலீஸ் பண்ண பட்டனை தட்டுங்க. அப்போ இந்த மோட் தெளிவான அழகான படத்தை கொடுக்கும். விரும்பினா... இன்னைக்கு கீழ படுத்துக்கிட்டு சுற்றும் உங்க மின் விசிரியை எடுத்து பாருங்களேன் இந்த மோடில் :)

குறிப்பு:

இன்று இம்புட்டு தான்... இன்னும் மற்ற மோட்கள் பற்றி நாளை பதிவிடுகிறேன். இதுவரை பார்த்த மோட்கள் எந்த அளவு உங்கள் கேமராக்களில் வருதுன்னு முயற்சி செய்து பார்த்து அவசியம் உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் இங்கே பதியுங்கள். முடிந்தவரை உதவுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க கேமரா என்ன மாடல்னு சொல்ல முடியுமா? எந்த மோடில் வைத்து சூம் செய்தீர்கள் என்றும் சொல்லுங்கள் ப்ளீஸ். நிச்சயம் லைட்டிங் பற்றி பேசும் போது உங்கள் கேள்விகளுக்கு பதில் வந்துடும். மிக்க நன்றி லீமா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தங்கச்சி ஒரு சந்தேகம்...

//எவ்வளவு சூம் வரை படத்தோட தரம் அதாவது க்ளாரிட்டி குறையாம இருக்கு என்பதை கவனிக்கனும்//
//மோஷன் டிடக்‌ஷன் எல்லாம் கவனிக்கனும்.//
கேமெரா வாங்கும் போது இதை எப்படி கண்டுபிடிப்பது??? பொதுவாக சொல்லும் specifications வச்சு தானா? இல்லை வேற ஏதாவது வழி இருக்கா?

BTW, வழக்கம் போல் ரொம்ப சூப்பரா இருக்கு உங்க இழை :) வாழ்த்துக்கள்!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூம் :

இரண்டு வகையான சூம் உங்க கேமராவில் சொல்லி இருப்பாங்க. ஒன்னு Optical இன்னொன்னு Digital. இதில் ஆப்டிகல் மட்டுமே உங்க படத்தின் தரம் குறையாம வர கூடிய சூம். அதாவது உண்மையான சூம் லென்ஸ் கொண்டு சூம் செய்யப்படும் ஆப்ஜக்ட். டிஜிட்டல் சூம் என்பது நீங்க எடுத்த புகைப்படத்தை எடிட் செய்யும் போது சூம் செய்வது போல... இது அந்த படத்தில் உள்ள பிக்ஸல்களை பெருசாக்கி இமேஜின் தரத்தை குறைத்து மங்கலாக்கிவிடும். அதனால் சூம் பார்க்கும் போது மேக்சிமம் எவ்வளவு ஆப்டிகல் சூம் என்பதை கணக்கில் எடுத்து கொண்டு பார்த்து வாங்க வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்