ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

மிக்க நன்றி.

சூம் எப்படி பார்த்து வாங்கணும்னு மேல சொல்லிருக்கேன். மோஷன் டிடக்‌ஷன் இருக்கான்னு ஸ்பெசிஃபிகேஷன்ல பார்த்து தான் வாங்கணும். ஒரு வித்தியாசம் கவனிக்கலாம்... சில கேமராவில் அந்த ஸ்பெஸிஃபிக் மோட் போனா தான் மோஷன் டெக்னாலஜி ஒர்க் ஆகும். ஆனால் சில கேமராக்களில் ஆட்டோ மோடில் கூட மோஷன் டெக்னாலஜி வேலை செய்யும். அதுவும் உங்களுக்கு ஸ்பெஷிஃபிகேஷனில் இருக்கும். ஒரு சில இடங்களில் கேமரா வெளிய ஒரு சாம்பிள் பீஸ் இருக்கும்... நீங்க பார்க்கலாம், உங்களுக்கு படங்கள் எடுத்தும் காட்டுவாங்க. அதை பார்த்து பிடிச்சிருக்கான்னு முடிவு பண்ணிட்டு நீங்க மாடல் தேர்வு செய்யலாம். இல்லையா இருக்கவே இருக்கு ஏகப்பட்ட கேமரா ரிவியூ & ஸ்பெஷிஃபிகேஷன் டீடெய்ல்ஸ் ஆன்லைனில். அந்த அந்த கேமரா வோட வெப் சைட் போனா உண்மையான தகவல் கிடைக்கும்.

// மாலேவில் உள்ள Canon showroom அந்த வசதி உள்ளது, அப்படி பார்த்து தான் கேமராவை வாங்கினோம் :) //

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுடைய கேமராவின் (Canon IXUS 120 IS) சூம் 4X (28mm). அந்த தொலைவுக்குள் சூம் செய்யும் போது உங்க க்ளாரிட்டி குறையாது. கூடவே நீங்க சின்ன பொருட்களை எடுக்க மாக்ரோ மோடை நல்ல வெளிச்சத்தில் மட்டுமே பயன்படுத்துங்க. உங்க கேமராவில் லென்சின் முன் பகுதியில் இருந்து சப்ஜக்ட் 3cm தூரம் இருக்கலாம். அது தான் closest focus. அதுக்கு மேல கிட்ட இருக்க கூடாது. அப்படி கிட்ட போனா நீங்க எய்ம் பண்ணும் சப்ஜக்ட்டுக்கு பின்னால் உள்ள பேக்ரவுண்ட் தான் தெளிவா இருக்கும், சப்ஜக்ட் மங்கலாகும். ஃப்ளாஷ் இல்லாம, முடிஞ்ச வரை சூமும் இல்லாமல் க்ளோசப் (>= 3 cm) முயற்சி செய்யுங்க. சரியா வரும். 3 செண்டிமீட்டருக்கும் கூடுதல் இடைவெளி விட்டு நின்னா கொஞ்சமா சூம் பயன்படுத்துங்க. உங்க ஸ்க்ரீனில் சூம் க்ளாரிட்டி குறையும் போது வித்தியாசம் தெரியும்... அப்போது இன்னும் க்ளோசப் தேவைப்பட்டா நீங்க சப்ஜக்ட் பக்கம் போங்க, ஆனா அதுக்கு மேல் சூம் பண்ணாதீங்க.

புரியுதா??? தெளிவா சொல்றனான்னு தெரியல. ஆனா உங்களுக்கு இந்த வித்தியாசத்தை காட்ட முக புத்தகத்தில் இரண்டு ஃபோட்டோக்களை போடுறேன். பாருங்க. நன்றி அருள். எடுத்து பார்த்து சந்தேகம் வந்தா சொல்லுங்க. தெரிஞ்சவரை நிச்சயம் சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சூப்பரா சொல்றீங்க...எல்லோருடைய கேமராவையும் கையில் எடுக்க வச்சிட்டீங்க...எங்கேனு கத்துக்றீங்களோ..வாழ்த்துக்கள்..
தொடருங்கள் உங்க பயணத்தை....
நிறைய கத்துட்டு வரோம்...

ஹசீன்

மிக்க நன்றி. பயன்பட்டா மகிழ்ச்சியே. எடுத்துட்டீங்களா கேமராவை? என்ன என்ன உங்களோடதில் இருக்குன்னு பார்த்தாச்சா?? இனி படம் எடுத்து டெஸ்ட் பண்ணிடுங்க... :) இந்த இழைக்கு பின் 2 பேர் வழக்கமான படங்களை விட நல்லா படமெடுக்க முடிஞ்சா இந்த இழையில் வெற்றியா எனக்கு மகிழ்ச்சி தரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

clarificationக்கு மிக்க நன்றி தங்கச்சி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி வனி(:-
நல்ல தெளிவா விளக்கிச்சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் தோழி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இன்று மிச்சம் உள்ள மோட்ஸ் பற்றி சொல்றேன்...

7. Night mode

இது இரவில் படங்கள் எடுக்க உகந்த மோட். இரவு வெளிச்சம் குறைவாக இருக்கும் போது சப்ஜக்ட் மேல் ஃப்ளாஷோடு படம் எடுக்க இது உதவும். இந்த மோடில் பின்னால் இருக்கும் விஷயங்களில் தெளிவு இருக்காது. இது இண்டோரில் ஏதேனும் பார்ட்டி டைம்களில் சின்ன சின்ன லைட் இருக்கும் இடங்களில் பயன்படுத்த உகந்த மோட்.

8. Underwater

இதை பயன்படுத்தினால் நீருக்கு அடியில் உள்ள விஷயங்களை தெளிவாக காட்டும். இதை செட் பண்ணாம நாம எடுக்கும் போது நீரும், அதன் கீழ் உள்ள விஷயங்களும் மங்கலாகவே தெரியும். இந்த மோட் செட் செய்யும் போது வேகமாக போகும் மீனையும் படத்தில் கொண்டு வரும் அளவுக்கு ஷட்டர் ஸ்பீட் அதிகமாகும். படத்துக்கு நல்ல டெப்த் கிடைக்கும். நீரை தாண்டி கீழே உள்ள விஷயங்களை கேப்சர் செய்ய தோதான மோட் இது.

9. Snow mode

இது ஏறக்குறைய பீச் மோட் போல தான்... வெண்மையான பணி சூழ்ந்த இடம்... வெளிச்சம் அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொண்டு படமெடுக்க பயன்படுத்துவது. ரொம்ப வெளிச்சமும், முழு வெண்மையுமாக இருக்கும் இடத்தை படமெடுக்க ஒளியை கட்டுப்படுத்தி க்ளாரடிக்காம தெளிவா படமெடுக்க இந்த மோட் உதவும்.

10. Fireworks

மத்தாப்பு, வாணவேடிக்கைகளை எடுக்க நல்ல மோட். இது ஸ்போர்ட்ஸ் மோட் போல சற்று நேரம் ஃபோகஸ் செய்து வைத்திருந்து எடுத்தால் நன்றாக இருக்கும்.

இவை தான் பொதுவாக கேமராக்களில் காணப்படும் மோடுகள். இவை தவிற சில கேமராக்களில், Foliage (கேமராவில் இலை வடிவில் இருக்கும் இதன் சிம்பல். சாச்சுரேஷனை கூட்டி படத்தில் நல்ல கலர் கொடுக்கும்), Kids and pets (ஸ்போர்ட்ஸ் போல தான்... வேகமாக அசையும் சபஜ்க்ட் என செட் ஆகும்), Indoor (வெளீச்சம் குறைவு, வீட்டின் உள்ளே உள்ள வெளிச்சம், ஆர்டிஃபிஷியல் லைட்ஸ், இதை கணக்கில் கொண்டு செட்டிங் இருக்கும்) போன்றவை காணப்படும். இவற்றை தவிற வேறு மோட்கள் இருந்தால் இங்கே பதிவுடுங்கள்... தெரிந்தால் நிச்சயம் விளக்கம் தருகிறேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இருவருக்கும் சந்தேகம் தெளிவாச்சா, சரியா சொல்லிருக்கனான்னு தான் தெரியல ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி. யு ஆர் கிரேட். எப்படி இவ்லோ விஷயம் தெரிஞ்சு வச்சுருக்கீங்க. தொடருங்கல் உங்கள் நற்பணியை. வாழ்த்துக்கள்...

மிக்க நன்றி :) இவ்ளோ இல்லங்க... இது ரொம்ப கம்மி... எனக்கு அந்த அளவுக்கு தகவல் தெரியாது. பேசிக்ஸ் தான் தெரியும், அதை தான் பகிர்ந்துக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்