அன்பு தோழிகளே...
பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)
மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.
இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)
ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.
சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)
ஹசீன்
உங்களுக்காகவாது இன்று எழுதி விடுகிறேன் :) நன்றி ஹசீன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா மேடம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். vacation முடிந்து வந்து விட்டோம். புட் போட்டோகிராபி பற்றி எழுதுங்கோ. படிக்க ஆவலா இருக்கோம்.
உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
வனி
வனி இன்னிக்குதான் பொறுமையா உட்கார்ந்து படிச்சேன். ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்கு. செய்த தவறுகளும் புரியுது :) .இனிமே நீங்க சொன்னதையெல்லாம் னாபகம் வச்சுட்டு கண்ணில் படுவதை எல்லாம் சுட்டுத் தள்ளப் போறேன். நல்லா வந்தா முகநூலில் ஷேர் பண்றேன் :). தேங்க்ஸ் சொல்லி பெஞ்ச் மேல நிக்கறதுக்கு நான் பேட் ஸ்டூடன்ட் இல்லையே :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஃபுட் ஃபோட்டோகிரஃபி
தாமதத்துக்காக தோழிகள் மன்னிக்கணும்.... இதோ வந்துட்டேன் ஃபுட் ஃபோட்டோகிராஃபி டிப்ஸூடன்... ;) எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.... தப்பிருந்தா சொல்லுங்க. உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்க. கத்துக்கறேன். ஏன்னா எனக்கு இதில் அனுபவம் இல்லை. ஒரு ஐடியா மட்டுமே இருக்கிறது.
ஃபுட் ஃபோட்டோகிராஃபி... உணவை படம் எடுத்து அது நல்லா வரனும்னா முதல்ல அந்த உணவை நல்ல ப்ரெசண்ட் பண்ணனும். அது தான் முதல் முக்கியமான விஷயம். :)
அதை பற்றி தான் முதலில் பார்க்க போகிறோம்...
1. உணவை எந்த பாத்திரத்தில் வைக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம். வெள்ளை பாத்திரங்கள் எல்லா வகையான உணவுக்கும் ஓரளவு நல்லாவே செட் ஆகும். ஒரு சிலதுக்கு தான் வெள்லை சரி வராது. அதனால் முடிந்தவரை கருப்பு மற்றும் வெள்ளை பாத்திரங்கள் வாங்கலாம்.
2. மிகப்பெரிய அளவிலான பாத்திரங்கள் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை சிரியவை அல்லது மீடியம் சைஸ் பாத்திரங்கள் உணவை கச்சிதமாக காட்ட உதவும்.
3. ட்ரான்ஸ்பரண்ட் கண்ணாடி பாத்திரங்கள் பானங்கள் வைக்க சரி, ஆனால் உணவு வகைகள் வைக்க சரி வராது. காரணம் கீழே உள்ள பேக்ரவுண்டை அப்படியே மேலே காட்டும்.
4. அடுத்து உணவை எடுத்த உடனே படமெடுப்பது நல்லது. அதனால் தாமதமாகாமல் இருக்க முன்பே என்ன பயன்படுத்த போறீங்க உணவை அலங்கரிக்க என முடிவெடுத்து விடுங்கள்.
5. உணவில் என்ன பயன்படுத்தி இருக்கீங்களோ அதையே முடிஞ்சவரைக்கும் அலங்கரிக்க பயன்படுத்துங்க. அதில் இல்லாத விஷயங்களை பயன்படுத்தினால் பார்க்க அத்தனை சிறப்பாக இருக்காது. உணவில் சேர்த்தவை அல்லது உணவுடன் சேர்த்து பரிமாறும் பக்க உணவு போன்றவை தான் உணவை ப்ரெசண்ட் பண்ண நல்ல சாய்ஸ்.
6. பாத்திரத்தில் வைக்கும் உணவின் அளவை எப்பவும் மிதமா பார்த்துக்கங்க. ரொம்ப குறைவா இருந்தாலோ, ரொம்ப அதிகமா இருந்தாலோ நல்லா இருக்காது.
7. உணவை அலங்கரிக்க பயன்படுத்தும் விஷயங்கள் கலர் காம்பினேஷனும் பாருங்க. உதாரணமா நல்ல வெள்லை உணவின் மேலே வெள்ளையாவோ அல்லது லேசான நிறத்தில் உள்ளவையோ நன்றாக எடுப்பாக தெரியாது.
8. உணவு வைக்கும் தட்டு முடிந்தவரை டிசைன் இல்லாதவையாக இருப்பது நல்லது. சில உணவுகளை பரிமாற சற்று பெரிய அளவிலான தட்டுகள் தான் நன்றாக இருக்கும். அவற்றுக்கு அதையே பயன்படுத்துங்க. மொத்தத்தில் உணவின் அளவு தட்டில் மிகவும் அதிகமாக இருப்பது போல் தெரியாமல் இருக்க வேண்டும். தட்டில் கொஞ்சம் ஃப்ரீ ஸ்பேஸ் இருப்பது அவசியம்.
9. உணவை சுற்றி அலங்கரிக்க எதை பயன்படுத்தினாலும் அது ஃப்ரெஷா இருக்கும்படி பார்த்துக்கங்க. உதாரணமா கொத்தமல்லி, கறிவேப்பிலை இல்ல எதாவது காய்கரி... எதுவா இருந்தாலும் ஃப்ரெஷா இருக்கணும்.
10. அசைவ உணவு படமெடுக்கும் போது ரொம்ப சமைக்கப்படவும் கூடாது, குறைவாகவும் இருக்க கூடாது. ரொம்ப ஓவர் குக் ஆன உணவு ட்ரையா தெரிய கூடும். அது போல் உணவுகளை சற்று முன்பே எடுத்து படமெடுத்த பின் மீதம் சமைப்பது நல்லது.
- இன்னும் பல குறிப்புகளோடு மீண்டும் நாளை சந்திப்போம் :) நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா மேடம்
படிக்க ஆவலாக உள்ளது. தொடரும் போட்டு விட்டீர்களே நாளைக்கு சிக்கீரம் போடுங்கோ. உங்கள் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
லீமா
மிக்க நன்றி :) நேற்று நேரம் போதவில்லை தொடர்ந்து எழுத. கூடவே ரொம்ப பெருசா போனாலும் படிக்கிறவங்களுக்கு சிரமமா இருக்குமேன்னு தான் பகுதி பகுதியா போடுறேன். கட்டாயம் இன்றும் தொடர்கிறேன். தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தும் உங்கள் அன்புக்கு நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிசிவா
மிக்க நன்றி :) நீங்க வந்த பிறகு நாங்க தூங்குவோமா??? வந்துட்டோம். உங்க படங்களை பார்க்கும் வரை உங்களை நானும் ரெஸ்ட் எடுக்க விடவே மாட்டேனாக்கும் :) நன்றி கவிசிவா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஃபுட் ஃபோட்டோகிராஃபி
வனி ஃபுட் ஃபோட்டோகிராஃபி பற்றி நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க. எனக்கு ஒரு சந்தேகம். சந்தேகம் மட்டும் வக்கணையா கேளு ஒழுங்கா படம் புடிக்க மட்டும் செய்யாதேன்னு நீங்க சொல்றது கேட்குது :)
சூடான சாப்பாடு மற்றும் சமைத்துக் கொண்டிருக்கும் போதே ஃபோட்டோ எடுக்கும் போது ஆவி பட்டு ஃபோட்டோ தெளிவில்லாம போயிடுதே. அதை தவிர்ப்பது எப்படின்னு சொல்லிக் கொடுங்கோ. நாங்களும் 'ஆவி' பயம் இல்லாம படம் புடிக்கணும்ல :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஃபுட் ஃபோட்டோகிராஃபி
1. உணவை படமெடுக்க போகும் டேபிலை சுத்தம் செய்து தயாராக வையுங்கள். முடிந்தவரி அந்த மேசை வெளி வெளிச்சம் படும் இடமாக ஏதும் ஜன்னலோரம் இருந்தால் நல்லது.
2. உணவை இயற்கையான வெளிச்சத்தில் படமெடுப்பது எப்போதுமே நல்ல ஃப்ரெஷ் லுக் கொடுக்க உதவும்.
3. வெய்யில் ஒரு பக்கமிருந்து வந்தால் அடுத்த பக்கத்தில் நிழல் விழாமல் இருக்க சின்ன முகம் பார்க்கும் கண்ணாடிகளை வைக்கலாம். அதில் வெளிச்சம் பட்டு ரிஃப்லக்ட் ஆகி மீண்டும் அடுத்த பக்கத்தில் உணவில் விழும். நிழலை தவிர்க உதவும்.
4. கேமராவின் மேக்ரோ மோட் உணவை அழகாக தெளிவாக காட்ட உதவும்.
5. உணவை சமைக்கும் போது படமெடுத்தால் ஆவி படுவது வழக்கம். அது சாதாரணம் டிஜிடல் கேமராவின் லென்ஸையும் பாதிக்கும் விஷயம். அதனால் எப்போதும் அடுப்பின் மேல் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேனை ஆனில் வையுங்கள். ஆவி வெளியேரும் திசைக்கு எதிர் திசையில் இருந்து படமெடுங்கள். போதிய வெளிச்சம் சமையலில் பட்டாலே ஆவி தெரியாது, க்ளாரிட்டி கிடைக்கும்.
6. எக்ஸாஸ்ட் ஃபேன் இப்படி இல்லை எனில் அடுப்பை விட்டு எடுத்து படமெடுத்துவிட்டு மீண்டும் வைக்க முடியுமா பாருங்கள். இது எல்லா உணவு வகையிலும் சாத்தியமில்லை.
7. கடைசியாக பரிமாறிய உணவில் ஆவி வருவது போல் கொடுக்க விரும்பினால் பின்னால் ஃபோட்டோவில் தெரியாதபடி செயற்கையாக செய்யலாம். உதாரணமாக டீ கப் பின்னால் ஒரு ஊதுபத்தி வைத்தால் அதில் இருந்து வரும் புகை முன்னால் இருந்து படமெடுக்கையில் டீயில் இருந்து வருவது போல் தெளிவாக இருக்கும். இது உணவுக்கு ஃப்ரெஷ் லுக் கிடைக்க உதவும்.
8. உணவை பல விதமாக அலங்கரிக்கலாம்... தட்டில் பரப்பி வைத்தோ, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தோ, டயகனலாக வைத்தோ... இப்படி பல வகைகளில் வைத்து முதலில் பாருங்கள். எப்படி வைத்தால் அந்த உணவு நன்றாக தெரிகிறதென கவனியுங்கள்.
9. பல படங்கள், பல ஆங்கிலில் இருந்து எடுத்து பாருங்கள். வெவ்வேரு திசையில் இருந்து படும் வெளிச்சத்தில் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு உணவுக்கு 10 - 20 படமெடுக்கலாம்... தப்பே இல்லை. கேமராவில் பார்த்ததை விட சிஸ்டமில் போட்டு பார்த்தால் நீங்கள் எதிர் பார்க்காத ஒரு ஷாட் கூட மிக அழகாக தோண்றலாம்.
10. நீங்க படமெடுக்கும் ஆங்கிலில் பல இருக்கலாம்... உணவு ஒன்றன் பின் ஒன்றாக அடுப்பட்டது, வருசையாக ஹாரிசாண்டலாக அடுக்கி வைப்பது, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவது, படத்தில் பாத்திரத்தை சற்று சாய்வாக காட்டுவது, மேலிருந்து படமெடுப்பது இப்படி நிறைய வகை இருக்கு.... ட்ரை பண்ணுங்க.
11. முடிந்தவரை உணவை மேலிருந்து கீழே உள்ள தட்டை எடுப்பதை தவிருங்கள். அது எல்லா உணவுக்கும் அழகு சேர்க்காது. ஒரு சில மட்டுமே அப்படி எடுத்தால் நன்றாக இருக்கும். முடிந்தவரை உணவை எப்போதும் தட்டின் / பாத்திரத்தின் பக்க வாட்டிலேயே எடுங்கள். அதாவது தட்டை தரையில் வைத்து எடுத்தால் தரை மட்டத்திலேயே கேமரா இருப்பது நல்ல ஃபோகஸ் கிடைக்கும். சில உணவுகளுக்கு தட்டை விட சற்று மேலே இருந்து ஃபோகஸ் செய்வது நன்றாக இருக்கும். சற்று உயரமே... மொத்தமாக அப்படியே மேலிருந்து எடுப்பதை தவிற்கவும்.
12. ஃபோட்டோவில் எப்போதுமே பாலன்ஸ் இருக்க வேண்டும். அதாவது உணவு ஒரு கப்பில் இருக்கு என வைப்போம். அந்த கப் புகைப்படத்தில் இடது பக்கமாக இருக்கு என வைப்போம். வலது பக்கம் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரே பக்கமாக உணவு இருந்தால் மற்றொரு பக்கம் படத்தை பாலன்ஸ் செய்ய ஃப்ரேமுக்குள் தெரியும் படி ஏதேனும் இருக்க வேண்டும். உதாரணமாக அது ஒரு சூப் பவுல் என்றால் பக்கத்தில் வெற்றிடத்தில் ஒரு சூப் கரணடி அல்லது நாப்கின் டவல் வைக்கலாம். அது படத்தில் பாலன்ஸ் கிடைக்க உதவும். இங்கே பாலன்ஸ் என்பது ஃப்ரேமுக்குள் வரும் பொருட்கள் பரவலாக இருப்பதை குறிக்கும்.
13. ஒரு வேளை அந்த கப் படத்தில் முன்னால் இருந்து பின்னால் வெற்றிடம் தெரிந்தாலும் அதே போல் பின்னால் ஏதும் கொண்டு வரலாம். இப்படி படத்தில் தெரியக்கூடிய வெற்றிடங்களை சரியாக ஏதேனும் கொண்டு நிரப்புவது படத்துக்கு அழகும் சேர்க்கும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Background
வனி, கலக்குறீங்க. ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம். ஒரு ப்ளேட்ல வச்சு படம் எடுக்கறப்ப, ப்ளேட்க்கு கீழ ஏதாவது background வைக்கணுமா?