ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

மிக்க நன்றி :)

தட்டின் கீழெ என்ன கலர் பேக்ரவுண்ட் என்பதை உணவு மற்றும் தட்டில் கலரை பொருத்து முடிவு செய்யுங்க. பொதுவா நான் உணவு பளிச்சுன்னு தெரிய தட்டும், பேக்ரவுண்டும் வெள்ளையாக இருப்பதை விரும்புவேன். சில நேரம் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் உணவின் மேல் கவனம் போகாது, டைவர்ட் செய்யும். அதனால் முடிந்தவரை குறைந்த வண்ணங்கள் பயன்படுத்துவது நல்லது.

உதாரணமா கேரட் அல்வா நிறத்தில் பேக்ரவுண்ட் இருந்தால் வெள்ளை தட்டில் கேரட் அல்வா வைக்கும் போது வெள்ளை மற்றும் அரஞ்சு நிறம் மட்டுமே இருக்கும். அழகாக இருக்கும். சில நேரம் உணவை பளிச்சென காட்டும் படி மற்ற எல்லாம் ஒரே நிறத்தில் இருப்பது அழகு தரும். உதாரணமா இதே கேரட் அல்வா அருகில் தட்டு, பேக்க்ரவுண்ட், நாப்கின் டவல், ஸ்பூன் என எல்லாம் ஒரே நிறமாக (ஆரஞ்சு கலர் அல்ல), ஏதேனும் காண்ட்ராஸ்டிங் கலராக வைத்து பாருங்கள்... அது வித்தியாசமான அழகு தரும். உதாரணமா எதாவது வித்தியாசமான வயலட் ஷேட்ஸ் / ப்ரவுன் ஷேட்ஸ். எல்லாமொரே நிறமாக இருக்க கூடாது, ஒரே நிறத்தில் வித்தியாசமான ஷேட்ஸாக இருக்க வேண்டும். இவை உங்கள் படங்களில் வித்தியாசம் காட்டும், அழகு சேர்க்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான இழை. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. போட்டோ எடுக்க தெரியாத நான் இப்போ போட்டோ எடுக்கிறேன் என்றால் அது உங்களால்தான். மிகப் பெரிய நன்றி.இந்த இழை முடிந்து விட்டதா?

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

தங்கச்சி,
Move ஆகும் சப்ஜெக்ட் என்றால் ஸ்போர்ட்ஸ் அல்லது கிட்ஸ் மோட் யூஸ் செய்யலாம்... ஆனால் படம் எடுப்பவரே மூவாகி கொண்டிருந்தால், எந்த மோட் பெஸ்ட்???

திட்டாதீங்க :)

இப்போ பஸ்ல, ட்ரெயின்ல போறோம்... ஏதாவது கிளிக் செய்ய வேண்டும் என்றால் எந்த மோட் யூஸ் செய்வது நல்லது?

நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள். நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனி ஃபுட் ஃபோட்டோகிராஃபி பற்றி அழகா சொல்லிட்டீங்க. நானும் அழகா எடுக்க முயற்சிக்கிறேன் :)

கை ஆடாமல் எடுத்தாலும் ஃபோட்டோ ஷேக் ஆன மாதிரி ஆயிடுதே... என்னையும் அறியாமல் கொஞ்சமா ஆடிடுதோ... ஷேக் ஆகாமல் எடுக்க டிப்ஸ் சொல்லுங்க வனி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலக்குறீங்க வனி..என்னவெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க

மிக்க நன்றி :) உங்களை போன்ற தோழிகளின் ஊக்கமே இதை எழுத காரணம். இந்த இழையில் எனக்கு தெரிந்தவற்றை சொல்லி முடித்து விட்டேன். இனி யாரும் சந்தேகம் கேட்டால் பதில் சொல்லலாம் (தெரிந்தால்) என இருந்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரண்டு சூழ்னிலையிலுமே அந்த மோட் சரி வரும். ஏன்னா அந்த மோடில் உங்களுக்கு ஷட்டர் ஸ்பீட் கூட. இன்னொரு மோட் கண்டினுயஸா படமெடுக்க உதவும். அது உங்க கேமராவில் இருக்கான்னு பாருங்க. அதுவும் மூவிங்’ல இருக்கும் போது நல்லா ஃபாஸ்ட்டா இமேஜ் கேப்சர் பண்ணும்.

ஸ்போர்ட்ஸ் மோடும் இதுக்கு ஓக்கே தான். இந்த மோடில் நாம சப்ஜக்டோட மூவ் ஆகலாம், அல்லது சப்ஜக்ட் மட்டும் மூவ் ஆகலாம். ட்ராவல்ல வரும் முதல் பிரெச்சனை சப்ஜக்ட் நமக்கு எதி திசையில் மூவ் ஆகும் என்பது தான். என்னோட கேனான் கேமராவில் ஆட்டோமேட்டிக் மோடே சரியா வரும். நான் செய்யும் முறை இது தான்... எதை எடுக்க போறனோ அதை சற்று தொலைவில் இருந்தே ஃபோகஸ் பண்ண துவங்கிடுவேன். என் கேமரா அந்த படத்துக்கு தன்னை தயார் படுத்திக்கவும், அந்த சப்ஜக்ட் என் பக்கம் வரவும் நேரம் சரியா இருக்கும். சரியான ஃபோகஸ் கிடைச்சதும் க்ளிக் பண்ணிடுவேன். இது எனக்கு நல்லாவே ஒர்க் ஆச்சு. முக்கியமானது நீங்க மேகத்தை எடுக்கணும்’னா மேகத்தை சில வினாடிகள் ஃபோகஸீல் வைங்க. அப்பவும் நீங்க மூவிங்க்ல தான் இருப்பீங்க. ஆட்டோமேட்டிக் மோடோ, ஸ்போர்ட்ஸ் மோடோ எதுவா இருந்தாலும் சப்ஜக்ட் எதுன்னு கேமரா ஃபோகஸ்க்கு தயாராகிடும். இப்படி மேகங்களை எடுக்க நீங்க ஒரே மேகத்தை தான் ஃபோகஸில் வைக்கனும்னு இல்லை... அப்படியே மூவிங்கில் வாணத்தை ஃபோகஸ் பண்ணி வைங்க... நகரும் மேகங்களுக்கு மோட் அட்ஜஸ் ஆகிடும். ட்ரை பண்ணி பர்த்து சொல்லுங்க அக்கா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க படங்களை நானும் பார்த்தேன்... ஏன் அந்த ஷேக் வருதுன்னு தெரிய நீங்க என்ன கெமரா பயன்படுத்தறீங்க, என்ன மோடில் வெச்சு படமெடுக்கறீஙக்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எனக்கு தெரிஞ்சது கொஞ்சம் தான்...ஃபோட்டோக்ராஃபியில் தெரிஞ்சுக்க நிறைய இருக்கு இன்னும். இந்த இழை துவங்கிய புண்ணியமோ என்னவோ எங்க ஆள் எனக்கு SLR வாங்கி தர சம்மதிச்சுட்டார். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் யூஸ் பண்றது hp photosmart. எல்லா மோட்லயுமே ஷேக் வருது :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்