ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

அப்போ நிச்சயம் உங்க கை தான் ஷேக் ஆகுது ;)ஹிஹிஹீ.

ஒன்னுமில்ல கவிசிவா... ஃபோட்டொ எடுக்கும் முன் நல்லா இழுத்து ஒரு டீப் ப்ரீத் எடுங்க. கையை எங்காவது ஸ்டெடியா ஒரு இடத்தில் வெச்சுட்டு எடுத்து பாருங்க. இல்லன்னா உங்க கேமராவில் ஆட்டோமேட்டிக் இருக்கா?? இருந்தா அதில் செட் பண்ணி டேபில் மேல வெச்சு பாருங்க. அப்போ நீங்க தொடாம எடுக்கும் ஃபோட்டோல ஷேக் இருக்கான்னு தெரியும். இது ஜஸ்ட் உங்க கேமராவில் ஏதும் ஃபால்ட் இருக்கா, இல்லை உங்க கை தான் ஆடுதான்னு கண்டு பிடிக்க தான். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க... ஆட்டோமேட்டிக்’ல நீங்க தொடாம எடுக்கும் போது வரலன்னா வேறு வழி பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,

ரொம்ப நல்லா இருக்கு இந்த இழை. இன்னிக்குதான் முழுசும் படிச்சேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆகா... நீங்க எல்லாம் இந்த பக்கம் வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லையே ;) நன்றி சீதா நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு ஒரு சின்ன டவுட். SLR என்றால் என்ன? (போட்டோகிராபில நான் இப்பதான் LKG அதுதான்) எனக்கும் போட்டோ எடுக்கும்போது கை கிழவி மாதிரி நடுங்குது எல்லாரும் கேலி செய்யறாங்க என்ன செய்வது?

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

என்னை குருன்னுலாம் கிண்டல் பண்ணா வனி அழுவா ;(

SLR - Single-lens reflex

இதுல DSLR - Digital SLR.

இவை சாதாரண பாய்ண்ட் அண்ட் ஷூட் டிஜிடல் கேமராவில் இருந்து மாறுபட்டவை. இவை ரொம்ப ப்ரொஃபஷனல் ஃபோட்டோஸ் எடுக்க உதவியா இருக்கும்.

இவற்றில் வரும் லென்ஸ் நாம் மாற்ற இயலும். நாம் எடுக்க நினைக்கும் படத்துக்கு ஏற்றபடி லென்ஸ் மாற்றலாம். விலை அதிகம். ஆனால் குறைந்த வெளிச்சம், சூரிய வெளிச்சம் அதிகமா இருப்பது, ரொம்ப ரொம்ப க்ளோஸப் மாக்ரோ மோட், அதிகப்படியான ஆப்டிகல் சூம் எல்லாம் இவற்றில் சாத்தியம். ஃப்ரேமிங் மற்றும் புகைப்படத்தின் செட்டிங் எல்லாமே நாம் மாற்ற இயலும். பல டிஜிடல் கேமராவில் அது சாத்தியம் இல்லை. ஒரு சில செட்டிங், ஓரளவு தான் மாற்ற இயலும். ஆனால் இவற்றில் எல்லாமே மாற்றலாம். அதனால் உங்களுக்கு தேவையான ஃபினிஷை உங்கள் புகைப்படத்துக்கு கொடுக்க இயலும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிலுக்கு நன்றி தங்கச்சி...

// இன்னொரு மோட் கண்டினுயஸா படமெடுக்க உதவும். அது உங்க கேமராவில் இருக்கான்னு பாருங்க//
Burst mode சொல்றீங்களோ??? ஸ்போர்ட்ஸ் மோடில் என் கேமெராவில் by default அது போல் கண்டினுயஸா தான் கிளிக் ஆகுது...

மேகம்னு இல்லை, இப்போ ஒரு மரம் இல்லை ஒரு பில்டிங் எடுக்கணும்னா ஆட்டோ மோடே சரியா வருமா???

அடுத்த ட்ரிப்பில் கட்டாயம் முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்...

அடுத்த கேள்வி, கண்ணாடி பின் இருக்கும் ஒரு பொருளை நம் பக்கம் இருக்கும் மற்றவர்களின் reflection இல்லாமல் கிளிக் செய்வது எப்படி???

SLR வாங்க போறீங்களா... சூப்பர் சூப்பர்... வாழ்த்துக்கள் :) எந்த brand வாங்க போறீங்க... உங்க பேவரைட் Canon தானா??? ;)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஆட்டோ மோட் சரியா வரும். ஆனா அதை கொஞ்ச நேரம் அப்படி மூவிங்’ல ஃபோகஸ் பண்ணி வைக்கணும். அப்போ சரியா வரும்.

கண்ணாடி பின்னாடி உள்ளதை எடுக்க...

சிம்பிள் லாஜிக்... ஒரு பேட் வழியா ஒரு பொருளை பார்க்கறீங்க... முன்னாடி இருக்க டிவின்னு கூட வைங்களேன். உங்க கண்ணை விட்டு தூரமா பேட்டை பிடிச்சீங்கன்னா பேட்டில் உள்ள நெட் க்ளியரா தெரியும், அதுவே உங்க கண்ணை ஒட்டி வெச்சீங்கன்னா பேட் நெட்டை விட டிவி க்ளியரா தெரியும.

அதே தான் கேமராவுக்கும். கண்ணாடியை ஒட்டி நின்னு எடுங்க, கண்ணாடிக்கு பின்னாடி இருப்பவை நல்லா வரும். உங்க பின்னால் இருக்கும் பிம்பம் விழாது. அதே போல தான் ஜன்னல் வழியா எதாவது எடுப்பது அல்லது கார் கண்ணாடி வழியா எதாவது எடுப்பது. முடிஞ்ச வரை கேமரா லென்ஸை கண்ணாடியில் ஒட்டி வைங்க.

//எந்த brand வாங்க போறீங்க... உங்க பேவரைட் Canon தானா??? ;)//- சந்தேகமே இல்லை தானே ;) அதே தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபோட்டோ ஒழுங்கா எடுத்திருப்பேன். (இல்லாட்டா கூட ஒழுங்கா எடுத்திருக்கிறதாத்தான் நினைச்சுட்டிருந்தேன்.) லாப்டாப்ல எடுத்துப் பார்க்க சில சமயங்களில் படங்கள்ல குறுக்கால ஒரு கோடு ஓடும். மேல் பாதி கீழ் பாதி (அல்லது இடம் வலமா) வேற வேற ஷேட்ஸ்ல இருக்கும். சில சமயம் பஸில் வெட்டி ஒட்டினது போல இடம் மாறிப் போய் இருக்கும். எதனால இப்படி ஆகுது!!

சில சமயம் மெய்ல் அனுப்பின பின்னால தான் கவனத்துக்கே வருது.
இப்போ விடுமுறைல எடுத்த ஃபோட்டோவைப் பார்த்தா... கர்ர் நேற்று ஒழுங்கா தெரிஞ்ச படம் கூட இப்போ காமாசோமான்னு தெரியுது. ;( சிலது... இரண்டு மூன்று ஃபோட்டோவை நறுக்கிக் கலந்து ஒட்டிருக்கு.

மெழுகுவர்த்தி க்ராப்ட்டுக்கு எடுத்த எல்லாப் படமும் இப்போ கெட்டுப் போய் தெரியுது. ;(( நல்லவேளை முன்னாலயே அனுப்பி முடிச்சேன்.

யாராவது உதவுவீர்களானால் நன்றியுடையவளாக இருப்பேன்.

‍- இமா க்றிஸ்

சப்ஜக்ட் கண்டு பயந்துடாதீங்க ;) அண்ணாவை இந்த பக்கம் கொண்டு வர தான்.

இந்த கேள்வியை அண்ணாவை கேட்டிருந்தா சரியா இருந்திருக்கும். எனி வே பார்த்தா கட்டாயம் பதில் சொல்வார். எனக்கு தெரிஞ்சது... கேமராவில் இருந்து காபி பண்ணும்போதே கரப்ட் ஆகி இருந்தா உங்க கேமராவின் மெமரி கார்ட் தான் கரப்ட் ஆகி இருக்கும்.

1. கார்டை அடிக்கடி வெவ்வேறு கேமரா அல்லது சிஸ்டமில் மாற்றிப்போடும் போது இது நடக்க வாய்ப்பிருக்கு.

2. எப்போதேனும் சிஸ்டமுக்கு ஃபோட்டோஸ் காபி செய்து கொண்டிருக்கும் போது நடுவில் கேமராவை ஆஃப் பண்ணி இருந்தால் கரப்ட் ஆக வாய்ப்பிருக்கு. (இந்த அனுபவம் எனக்கு இருக்கு)

3. ஒரு ஃபோட்டோ க்ளிக் செய்து அது மெமரியில் ரைட் ஆக எடுக்கும் அந்த சிறு இடைவெளியில் அடுத்த அடுத்த ஃபோட்டோஸ் க்ளிக் செய்ய முயற்சி செய்தால் கூட கரப்ட் ஆகலாம்.

4. கேமராவை ஆனில் வைத்துக்கொண்டு கார்டை எடுக்க முயற்சித்திருந்தாலும் நடக்கலாம்.

நிறைய காரணம் இருக்கு கேமராவின் மெமரி கார்ட் கரப்ட் ஆக. மெமரி கார்டை ஒரு முறை ஃபார்மட் செய்தால் இது சரி ஆகலாம். ஆனால் ஃபோட்டோஸ் அதில் இல்லாத போது செய்யவும். இல்லை எனில் ஃபார்மட் செய்தால் மொத்தம் போயிடும். நிறைய ரிகவர் செய்யும் சாஃப்ட்வேர்கள் கிடைக்கிறது என்கிறார்கள் ஆன்லைனில் ஃப்ரீயாக கூட. இதுவரை முயற்சித்ததில்லை. அண்ணாவை கேட்டால் சரியான பதில் கிடைக்கும்.

ஒரு வேளை காபி செய்யும் வரை நன்றாக இருந்து சிஸ்டமில் கரப்ட் ஆனா என்ன காரணம், ஏன்னு எனக்கு சொல்ல தெரியல. ஹார்டிஸ்க்ல கரப்ட் ஆன ஃபைல்ஸையும் சிலதை ரிகவர் பண்ண முடியும்... ஆனால் எந்த அளவு, எதனால் என எனக்கு சரியாக தெரியல. என்ன வனிதா கம்பியூட்டர் தெரியலன்னு கேட்டுபுடாதீங்க... இப்போ அதிகமா கையில் இருப்பது கேமரா தானே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு இரண்டு வருடம் முன் Thalika Photo Resize software பெயர் சொல்லி இருந்தா. அதன் பெயர் யாருக்காவது தெரியுமா?

மேலும் சில பதிவுகள்