ரெடி... ஸ்டெடி... க்ளிக் !!!

அன்பு தோழிகளே...

பலரும் முக புத்தகத்தில் போட்டோகிராஃபி பற்றி கேட்டிருந்தாங்க... நிச்சயமா சொல்லி தரும் அளவு எனக்கு தெரியாது. ஆனாலும் இப்படி ஒரு இழை வந்தா இங்க இருக்க பல எக்ஸ்பர்ட்ஸ் இதில் பதிவிடுவீங்க, நானும் கத்துக்கலாம் என்ற ஆசையில் இந்த இழையை துவங்கி இருக்கேன். எந்த பிரிவு... இந்த தலைப்பு ஏற்ற மாதிரி ஏதும் தென்படாத காரணத்தால் வழக்கம் போல வனி “பொது பிரிவு”க்கு போயாச்சு. ;)

மிக பிரபலமான ஃபோட்டோக்ராஃபர் ஒரு நண்பர்... சில காலம் முன் வெளிநாட்டில் இருந்து மாலத்தீவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவரிடம் எனக்கு ஒரு SLR வாங்கி தர சொல்லுங்கள் என என் கணவரிடம் ரெகமண்ட் பண்ண சொன்னேன்... அவரோ நேர் எதிராக சொல்லிட்டார்... “There is nothing in the camera... Its just who is behind it"னு. அவர் விலை மிக குறைவான கேமராக்களில் பட்டையை கிளப்பும் படமெல்லாம் எடுத்து பல ஆங்கில மேகசின்களில் பாராட்டப்பட்டவர் என தெரிந்து கொண்டேன். அதான் நாமும் முயற்சிப்போம்னு சொந்த முயற்சியில் கத்துக்க பார்க்கிறேன்.

இந்த மாதிரி இழையெல்லாம் ஆரம்பிக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளான்னு யாரும் கேட்டுபுடாதீங்க... நான் அழுதுடுவேன். நிஜமாவே கத்துக்க தான் துவங்கி இருக்கேன். கூடவே எனக்கு தெரிஞ்ச சிலதையும் இங்க நானும் பகிர்ந்துக்கறேன். தப்பிருந்தா சொல்லி கொடுங்க... தெரிஞ்சுக்கறோம். :)

ரூல் நம்பர் 1: நலம் விசாரிப்பு / அரட்டை கூடாது.
ரூல் நம்பர் 2: ஆங்கில பதிவுகள் கூடவே கூடாது.

சரி தானே... ஸ்மைல் ப்ளீஸ்.... க்ளிக் :)

ஹாய்வனி. அருமையான இழை இது.இப்ப எல்லாருக்குமே போட்டோஎடுக்கும் ஆர்வம் கூடிப்போச்சு. எனக்கும்;) . உங்க போட்டோஸ்க்கு நான் ரசிகை. அதுவும் ஃபுட் போட்டோஸ்க ரொம்ப பிடிக்கும்...என்னோட கேமரா டிஜிட்டல்தான். இதுவே இனும் புரியல. அப்பறம் தானே அடுத்தது பத்தி யோசிக்கமுடியும்.

என்னோட கேமரா 'NIKON coolpix' இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க. செட்டிங்ஸ்ல நீங்க சொன்னது எங்க இருக்கு. whitebalance. இது எப்படி அட்ஜஸ் பண்ணறது. நீங்க. சொன்னிங்க ஷெட்டர்ஸ்பீட் இது இல்லயே. எனக்கும் இன்னும் கொஞ்சம். விளக்கம் தேவை .

Be simple be sample

வனி இன்னும் ஒரு டவுட். இப்ப ஒரு பார்க் போறோம் அப்படின்னு வைங்க. ஒரு போட்டோக்கும் அடுத்த போட்டோக்கும் எடுக்கும் நேரம் அதிக இடைவெளி விடுறோம். அப்ப கேமரா தொடர்ந்து ஆன்லயே இருக்கலாமா, இல்ல ஆஃப் பண்ணி போடலாமா. அப்படி உடனே உடனே ஆஃப் ,ஆன் பண்ணறது கேமராக்கு நல்லதா.

Be simple be sample

வனி கேமரால மின்னல் போல ஒரு சிம்பள் இருக்கு. அதில் auto, auto with red-eye reduction, off, fill flash, slow sync இதெல்லாம் என்ன. இது பிளாஷ் தொடர்பானது நினைக்கிறேன். கரெக்டா.

1. image mode= VGA வச்சிருக்கேன். 16m 4608*3456 வரைக்கும் இருக்கு. 16m*, 16m, 8m, 4m, 2m, VGA, 18.912m. இதுல எதுனா வெச்சா பெட்டரா இருக்கும். இப்ப நிறைய பேர் நிக்கிற குருப் போட்டோக்கு, அவங்களும் கவர் ஆகி, பேக் ரவுண்டும் கவர் ஆகணும் (உதாரணம் கோவில்) அப்படின்னா எது போல வெச்சா கரெக்டா இருக்கும்.

2.white balance =auto வச்சிருக்கேன். preset manual அப்படின்னா என்ன.
daylight, incandescent, fluorescent, cloudy, flash. இதெல்லாம் இருக்கு. லைட்டா தெரியும். இருந்தாலும் கொஞசம் விளக்கம் தேவை.

3.continuous = single, continuous, BSS, multi shot. இது புரியல எனக்கு.

4.ISO sensitivity இது சொல்லிருக்கிங்க. auto. வச்சாலே போதுமா.

5.colour option. இது எப்பவும். standard தான் வைக்கறது.

6.AF area mode. இது பத்தி சொல்லுங்க. நான் face priority வச்சிருக்கேன்.

7.autofocus mode=af-s single af, af-f fulltime af. இது சுத்தமா புரியல. விளக்கம் ப்ளிஸ்.

இபோதைக்கு இதை விளக்கவும். மேல டவுட்னா விடமாட்டேன். அப்பாலிக்கா வருவேன்.

நீங்க சொன்ன மாதிரி மேல சுத்தற ஃபேன் எடுத்தேன். அது ஆஃப்ல இருக்கற மாதிரிதான் விழுந்தது. ஏன் அப்படி ;)

Be simple be sample

Kelvi muzusaa ketu vainga.. unga camera settings konjam paarthuttu badhiloda varaen.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்