நெத்திலி மீன் திதிப்பு

தேதி: December 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

நெத்திலி மீன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 5 தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது - அரை கப்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை, லவங்கம், சோம்பு - சிறிது
எண்ணெய் - 50 மில்லி
உப்பு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி


 

நெத்திலியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு கலந்து பிரட்டி வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் தாளிக்கவும். இதில் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
இதில் மீனை சேர்த்து மூடி வேக விடவும்.
கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான நெத்திலி மீன் திதிப்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக அருமையான குறிப்பு(:- வழக்கம் போலவே புகைப்படங்கள் அருமை, நல்ல குறிப்பை கொடுத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் வனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்க்க நல்லா இருக்கு...படங்களும் அருமை...
முகப்பில் (படம்) நான் வனியோட குறிப்புனு சொல்லாம சொல்லுது..
வாழ்த்துக்கள்..

ஹசீன்

முகப்பில் பார்ததும் நீங்க தான் நு தெரிந்து கொன்டேன்.உங்க டெக்கரேஷன் தனியா தெரியுது.எனகு நெத்திலி ரொம்ப பிடிக்கும்.உங்கல் குரிப்பு சூப்பர்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

அருமையான குறிப்பு +அசத்தலான படங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப நல்லா இருக்கு..படங்களும் அழகு!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனி குறிப்பும் படமும் அசத்தலா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நெத்திலி மீன் திதிப்பு பார்க்கும் போதே நல்லா இருக்கும்ன்னு தோணுதுக்கா... கண்டிப்பா நெத்திலி மீன் கிடைத்ததும் உங்களுடைய ரெண்டு குறிப்பையும் செய்து பார்ப்பேன்... வாழ்த்துக்கள் அக்கா...

SSaifudeen:)

நெத்திலிமீன் திதிப்புன்னு பார்த்துட்டு நான்கூட ஏதோ இனிப்புக்கு வெல்லம் சேர்த்திருப்பீங்கன்னு நினைச்சேன் அக்கா. தித்திப்பு தான் திதிப்புன்னு நினைச்சுட்டேன். திதிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

vanitha akka na sinna fish avalava sapda mataen irundhalum unga presentation ena sapda thoonduthu..alaha senju irukeenga..unga kurippa inum meruhetri kaatuvadhu andha malli izhaihal than ma..
Malli izhaihala anga anga thoovi vidureenga..asathala iruku unga samayal kurippum..wonderful..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

உங்க டெகொரேஷன் உங்களைத் தனியா அடையாளம் காட்டிடுது. அருமையா செய்திருக்கீங்க! அடிக்கடி நெத்திலிமீனைக் காட்டி எங்களை ஏங்க வைக்கிறீங்க! (எங்களுக்கு நெத்திலி மீன் கிடைக்கிறதே இல்லை). வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஹலீமா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருள்... மிக்க நன்றி. :)

ஹசீன்... மிக்க நன்றி. :)

பிரியன்கா... மிக்க நன்றி :)

முசி... மிக்க நன்றி :)

ஹலீலா... மிக்க நன்றி :)

சுவர்ணா... மிக்க நன்றி :)

சமீஹா... மிக்க நன்றி :)

நித்யா... மிக்க நன்றி. திதிப்பு என்பது தித்திப்பு என்ற அர்த்தமே தான். தேங்காயின் இனிப்பு சுவை இதில் ஊறி இருப்பதால் அந்த பெயர். :)

சமனாஸ்... மிக்க நன்றி :) இப்படி செய்தா இனி சின்ன மீன் அடிக்கடி செய்வீங்க.

ஹலீமா... மிக்க நன்றி :) எனக்கு அது தானே இங்கே அதிகம் கிடைக்குது.

எல்லாரும் அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதைத்தான் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு சொல்லுவாங்களோ? நான் போட்டோகிராஃபியையும் குறிப்பையும் சொன்னேன். அருமை ரெண்டும்.:-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வனி, நெத்திலி மீன் திதிப்புங்கறதை நான் தித்திப்புன்னு புரிஞ்சுட்டு சர்க்கரை சேர்த்து செய்திருப்பீங்கன்னு நினைச்சேன் ;) எங்க அம்மாவும் ஏறக்குறைய இதே முறையில் லேசான மாற்றத்தோடு செய்வாங்க. என் ஆல்டைம் பேவரட் ரெசிப்பி இது. ரொம்ப வருஷமா மிஸ் பண்றேன் இந்த குழம்பை. ஊருக்கு போனால் இந்த முறையில் செய்து வெட்டிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன் ;) வாழ்த்துக்கள் வனி. சென்னை நெத்திலி வெள்ளையா இருக்கும். மாலேல கறுப்பு நெத்திலியா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெயந்தி... மிக்க நன்றி :) எங்கப்பா பேச கத்துக்கறீங்க.... சொல்லிக்கொடுங்க. நான் மட்டும் எப்பவும் வார்த்தைகளுக்கு தேட வேண்டி இருக்கு. ;)

கல்ப்ஸ்... மிக்க நன்றி. நம்ம ஊர் நெத்திலி பெருசா இருக்கும் கொஞ்சம். சிலர் சமைக்கும் முன்பே முல்லெடுதுடுவாங்க. இங்க குட்டியா இருக்கும். கருப்புன்னு சொல்ல முடியாது... சில்வர் கலர் தான்... சில மீன் எப்பவாது கருப்பா இருக்கும். ரொம்ப நாளைக்கு அப்பறம் இம்முறை தான் அப்படி கருப்பு மீன் சிலது இருந்தது. :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
இங்கே நெத்திலி கிடைக்காது.;(
சூப்பர்..வாழ்த்துக்கள்!!

என்றும் அன்புடன்,
கவிதா

வனி
நெத்திலி மீனின் சுவை எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது.ஆனால் குட்டி குட்டியா பார்க்க வாங்கி சமைக்கணும் போல இருக்கு. வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனி அக்கா நெத்திலி மீன் திதிப்பு அட்ட்டகாசாமன குறிப்பு சூப்பரோசூப்பர் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கவிதா... மிக்க நன்றி :) இங்க அது ஒன்னு தான் அதிகம் வாங்குறது.

ரம்யா... மிக்க நன்றி. :) சுவை அருமையாக இருக்கும். இங்கே நம்ம ஊர் வகை மீனெல்லாம் கிடைக்காது, கிடைப்பவை சப்புன்னு சுவை இல்லாம இருக்கும், இது தான் எனக்கு பிடிச்ச வகை.

கனி... மிக்க நன்றி :) கிடைச்சா செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நெத்திலி மீன் திதிப்பு அருமையா செய்துகாட்டி இருக்கீங்க செய்து பார்துட்டு சொல்லுறேன் வனி..........................உம்முஜெயின் லுலு வில் சில சமயம் நெத்திலி கிடைக்கும்...........:)

வனி திதிப்பு பார்த்ததும் அப்படி என்ன இனிப்பு குறிப்புன்னு பார்த்தேன் ...

இந்த மீன் செய்தது இல்லை செய்து பார்க்கணும் வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) அவசியம் செய்து பாருங்க, குட்டீஸ்க்கு பிடிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா