மீன் ரோஸ்ட்

தேதி: December 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

கானங்கெளுத்தி மீன் (Eyela Fish - ஐல மீன்) - 3
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

மீனை சுத்தம் செய்து சிறிது உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அரை பாகம் வேகும் அளவிற்கு பொரித்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகு தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தில் பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியுள்ள வெங்காயத்தில் பொரித்த மீனைப் போடவும்.
எடுத்து வைத்துள்ள மீதி வெங்காயத்தையும் மீனின் மேல் போட்டு மூடி வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை மூடி வைக்கவும். எண்ணெய் மிதந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான மீன் ரோஸ்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

உங்க குறிப்பாகத்தான் இருக்கும்னு கெஸ் பண்ணினேன், என் கெஸ்ஸிங் மிஸ் ஆகல. புது முறையா இருக்கு இந்த மீன் ரோஸ்ட் செய்முறை. அந்த லாஸ்ட் ப்ளேட் பார்சல் ப்ளீஸ்;) வாழ்த்துக்கள் ஹலிலா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சூப்..ப..ரா.. செய்து இருக்கீங்க....வாழ்த்துக்கள் ஹலிலா..

ஹசீன்

அஸ்ஸலாமு அலைக்கும்
முகப்பிலே கண்டுபுடிச்சுட்டேன் இது ஹலிலா குறிப்புன்னு...
நல்லா செஞ்சு இருக்கிங்க...எங்க ஊர் பக்கம் "பாங்கான்"ன்னு இதை சொல்வோம்....

நல்லா செஞ்சு இருக்கிங்க

ZajneeMufeetha

ஹலிலா அக்கா அழாகன் படங்கலூடன் சூப்பர் மீன் ரோஸ்ட் பார்க்கவெ யம்மியா இருக்கு அக்கா சுலபமான செய்முரை கூட அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா,சூப்பர் மீன் ரோஸ்ட்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஹலிலா இது பாங்கா தானே கானாங்கெழுத்திலதான் பாங்கா வச்சா நல்லாயிருக்கும் எங்க ஊரிலும் செய்வோம் சூப்பர்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஒரு ப்ளேட் போதுமா நித்யா? வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹசீன் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீலா எங்க ஊர் பக்கம் இதை மீன் ரோஸ்டுன்னு தான் சொல்வார்கள். பதிவுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

முஃபீதா உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனிமொழி உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் முஹ்சினா உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் நிசா உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா ....மாஷா அல்லாஹ் ரொம்ப அழகா செய்து இருக்கீங்க.மீனை எப்போதும் சும்மா பொறித்து சாப்பிட போர் அடித்து விட்டது இன்ஷா அல்லாஹ் இது போல் கட்டாயம் செய்து பார்க்கணும்...

SSaifudeen:)

super

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா. சுவையும் நன்றாகவே இருக்கும் இன்ஷாஅல்லாஹ் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

உறுப்பினரா சேர்ந்த அன்னைக்கே எனக்கு பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றிமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள் ஹலிலா(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாசம் தூக்குது... அருமை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாமு அழைக்கும் ஹலீலா...இன்னைக்கு உங்கள் மீன் ரோஸ்ட் செய்தேன் ரொம்ப டேஸ்ட்டா இருந்தது:)இப்படி ஒரு குறிப்பை எங்களுக்கு தந்ததற்கு உங்களுக்கு என் நன்றிகள்...:)நீங்க அரட்டை பக்கமெல்லாம் வரமாட்டீங்களா?

SSaifudeen:)

அருட்செல்வி உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வனிதா உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

வஅலைக்கும் முஸ்ஸலாம் ஷமீஹா. செய்து பாத்தாச்சா. பிடிச்சுதுன்னு கேட்டதில் ரொம்ப மகிழ்ச்சி செய்து பார்த்து சொன்னதற்க்கு ரொம்ப நன்றிமா. நீங்க அரட்டை பக்கமெல்லாம் வரமாட்டீங்களா? எனக்கும் ஆசைத்தான் எனக்கு வேகமாக டைப் அடிக்க வராதுமா

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

ஹளிலா,
அசத்தலா இருக்கு!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா உங்கள் அன்பான வாழ்த்திற்கும்,பதிவிற்கும், ரொம்ப நன்றிமா.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

Akka colorful recipe....naalaike try pannittu solren.Vazhthukkal!!

"Happiness is a habit, cultivate it"

உங்க மீன் ரோஸ்ட் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது