hello frds

எனக்கு ரொம்ப கஷ்டம இருக்கு பா யாராவது ஹெல்ப் பனமடேங்ல i need frds to share my feelings but no one toreply me

ஹாய் சௌமியா சொல்லுங்க என்ன ப்ராப்லம் என்னால் முடிஞ்சத தெரிஞ்சத சொல்ற

நானும் புதுசுதான் சொல்லுங்க சௌமியா என்ன ப்ரோப்ளேம் ?

ஹாய் சுபா வெல்கம் எப்படி இருக்கீங்க

வரவேற்பிற்கு நன்றி. நலம்.

hi hw r u?இங்க எனக்கு frds கிடையாது பா சமையல் முடிஞ்சிடா சோ bore. time ah rombha waste panren pa

hi da hw r u?

ஹாய் ஹலோ சொல்ல நீங்க அரட்டை இழைக்கு வரலாமே? அங்கே நிறைய தோழிகள் இருக்காங்க அங்க வாங்க. இதுக்கெல்லாமா தனியா இழை ஓபன் பண்றது? அட்மின் அண்ணா பார்த்தா அவ்ளோதான். சமர்த்தா அரட்டையின் தொடர்ச்சி இழைக்கு வாங்க பார்க்கலாம். இங்க ரிப்ளை பண்ணாதீங்க இந்த இழையை இதோட இப்படியே விடுங்க ஓகேயா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய்பா சௌம்யா சாரிபா நா இப்பதா உங்க பதிவ பாத்த ப்ரண்ட்ஸ் ஆகலாமா ப்லீஸ் சொல்லுங்க எனக்கும் யாரும் ப்ரண்ட்ஸ் இல்லபா

"அட்மின் அண்ணா பார்த்தா அவ்ளோதான்", "அட்மின் அண்ணா வந்து அடிக்கப் போறாரு..", "அட்மின் வருவாரு அப்ப விளக்கம் சொல்லுங்க..(யாரு வேணும்னா வரட்டுமேங்க..)".. இப்படி கடிச்சிடுவாரு, உறிச்சிடுவாருன்னு, அட்மினை சூலாயுதம், கதாயுதம் எல்லாம் தூக்கிக்கிட்டு சுத்தற "டெர்ரர்" (ஆ)சாமி மாதிரி ஒவ்வொருத்தரும் புதுசா வர்றவங்ககிட்டே சொல்லி பயமுறுத்துறது கொஞ்சம்கூட நல்லா இல்லைங்க.. நிஜத்துல அட்மின் புத்தரைவிட சாதுவான ஒரு அப்பிராணிங்க.. அவரை மாதிரி ஒரு அப்பாவியை இந்த உலகம் இதுக்கு முன்னே பார்த்ததும் கிடையாது. இனி பார்க்கப் போறதும் கிடையாது. அவரு போதாத காலம். அறுசுவைன்னு ஒண்ணை ஆரம்பிச்சு, அதுக்குன்னு சில விதிகளையும் வச்சு, அப்பப்ப, அங்கங்க வந்து அதை ஞாபகப்படுத்திட்டு, அவர் பாட்டுக்கு போய்கிட்டு இருக்காரு. அவரைப் போயி இப்படி பூச்சாண்டியாக்கலாமா? கொஞ்சம்கூட நல்லா இல்லைங்க..

சரி, சொல்ல வந்த விசயத்தை சொல்லிட்டு இடத்தை காலி பண்றேன். புதுசா வந்தவங்க, பழசா போனவங்க எல்லாருக்கும் சொல்லிக்கிறது என்னன்னா.. நீங்க ஆரம்பிக்க நினைக்கிற த்ரெட் சம்பந்தமா அறுசுவையில எதாவது ஏற்கனவே இருக்காங்கிறதை கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணி பார்த்துட்டு, அது இல்லைங்கிறது கன்ஃபர்மா தெரிஞ்ச பிறகு புது த்ரெட் ஆரம்பிங்க. ஏற்கனவே பேசிப் பேசி காது வலி வந்த விசயத்துக்கு எல்லாம் புது த்ரெட் ஆரம்பிக்காதீங்க. அப்படி எதுவும் த்ரெட் ஏற்கனவே இருந்தா, உங்க கேள்வியை அங்கேயே கேளுங்க..

பொதுவா பேசுற விசயம், ப்ரெண்ட்ஷிப் வேணும்ங்கிற விசயம், சாப்பிட்டாச்சான்னு கேக்குற உலக முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளையெல்லாம் தயவுசெஞ்சு அரட்டைக்குள்ள கொண்டு போயிடுங்க. அப்புறம் பதிவுக்கு தலைப்பு கொடுக்கிறப்ப, கூடுமானவரைக்கும் பதிவுக்கு சம்பந்தம் இருக்கிற மாதிரி எதாவது தலைப்பு கொடுங்க.. உதவி செய்ய யாருமே இல்லையாங்கிற கூக்குரலை கிளிக் பண்ணி, வடிவேலு மாதிரி இதோ வந்துட்டேன்னு உள்ளே நுழைஞ்சுப் பார்த்தாதான் தெரியுது, தலைப்பை பார்க்காம வந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு. இந்த வரலை.. வரலை.. த்ரெட் வாரத்துக்கு ரெண்டு வருது. இதுக்குன்னு தனியே ஒரு சைட்டே ஆரம்பிக்கலாம் போல.

அப்புறம், இங்க எல்லா விசயங்களுக்கும் பதில் கிடைக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது. சில விசயங்களை கூகுள்ல தேடினா உடனே நல்ல ஆன்ஸர் கிடைக்கும். Photoshop ல் multiple layers எப்படி செலக்ட் பண்ணனும்ங்கிறதை, சிம்பிளா Multiple layers selection Photoshop 7 ன்னு கூகுள்ல கொடுத்தா, அழகா வீடியோவோட கொடுத்திருக்கிற விளக்கம் எல்லாம் கிடைக்கும். இங்க அதுக்குன்னு தனியா ஒரு த்ரெட் ஆரம்பிச்சு, அதுக்கு பதிலே இல்லாம த்ரெட் தூங்குறதை பார்க்கையில கஷ்டமா இருக்கு.

என்னோட அன்பான, பணிவான, தாழ்மையான வேண்டுகோள் இதுதாங்க.. மன்றத்துல நல்ல விசயங்களுக்கு, உருப்படியான விசயங்களுக்கு கொஞ்சம் நிறைய இடம் கொடுங்க. இதை சாட் மாதிரி யூஸ் பண்ணாம, படிக்கிற பலருக்கும் யூஸ் ஆகுற மாதிரி எடுத்துக்கிட்டு போங்க. (இவ்வளவு பணிவா பேசுற என்னைப் போயி...!) அவ்வளவுதாங்க.

ஸாரிங்கண்ணா. நான் யாரையும் பயமுறுத்துறதுக்காக சொல்லலங்கண்ணா. புது தோழிகளுக்கு தெரியாதத சொன்னேன். நீங்க பூச்சாண்டியெல்லாம் இல்லீங்கோ. ரொம்ப நல்லவர்,வல்லவர். இனிமே இப்படி வேணா சொல்றேன். நம்ம அட்மின் அண்ணாக்கு ரெண்டு முகம் உண்டு ஒன்னு ரொம்ப நல்லவர் இன்னொன்னு பார்த்தா நாம தாங்க மாட்டோம்;) சோ பார்க்கனும்னு ஆசைப்படாதீங்கோ:) இது ஓகேவா அண்ணா?:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்