அரட்டையின் தொடர்ச்சி.....

தோழிகளே அந்த அரட்டை இழை 21 பக்கங்கள் வந்துவிட்டது. இனி இங்கே தொடருங்கள் அரட்டையை. ரயிலை ஓட்டலாம்னு பார்த்தா அட்மின் அண்ணா ரயில்வண்டியை பூட்டி வெச்சிட்டிருக்காரு;) அதனால இந்த இழை துவங்கியிருக்கேன் எல்லாரும் இங்க வாங்க. தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்க வேண்டும். ஷம்னாஸ் மட்டும் தமிங்கிலப்பதிவு போட அனுமதி.

இங்க வந்து கதையடிங்க வாங்க வாங்க. என்னப்பா நான் கூவிகிட்டே கெடக்குறேன் யாரும் வர்ற மாதிரி தெரியலையே?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நான் இருக்கேன் பா

நான் இருக்கேன் பா நித்யா உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

ம் பிலேட்டட் வெட்டிங்டே விஷ்ஷஸ். இன்னும் என்ன யோசனை உங்க அப்பா அம்மா அண்ட் மாமனார் மாமியாரை தாத்தா பாட்டி ஆக்குங்க சீக்கிரம். அவங்களே கேட்கும் முன்ன நீங்களே சொல்லுங்க குட்நியூஸ் ஓகே? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சுபா.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பூர்ணி நீங்க மொபைல் யூஸ் பண்றீங்களா என்ன?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹ்ம்ம் கண்டிப்பா நித்யா கூடிய சீ க்கரம் நல்ல தகவல் சொல்லறேன்

Hai nithya epdi irkeenga? Harshi enna panra? Saaptacha ena special. Inga mutton pa..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

4 நாள் முன்னாடி வரைக்கும் இருந்தது என் பையன் மொபைல தண்ணியில போட்டுடான்

ம் சூப்பர் குட். இப்ப அட்மின் அண்ணா சொன்ன மாதிரி எண்டர் பட்டன் யூஸ் பண்றீங்களா? ஒருமுறை மட்டும் வந்திருக்கே பதிவு? இனி இப்படியே போடுங்க சரியா? உங்க பையனுக்கு என்ன வயசாகுது? மொபைல் போச்சே!;) எனக்கு ஒரே மகள் ஒன்னேமுக்கால் வயசாகுது.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் ஷம். நீங்க அண்ணா அண்ட் ரஹ்மான் எப்படி இருக்கீங்க? ஃபேஸ்புக்ல மெஸேஜ் பார்த்தீங்களா? ஓ மட்டனா இன்னைக்கு? கார்த்தி சிக்கன், நீங்க மட்டன் முகப்புல சமையல் குறிப்புல ஃபிஷ்..... ஹ்ம்ம் போங்கப்பா எல்லாரும் சும்மா என்னை ஆசை காட்டி மோசம் பண்றீங்க. சரி சரி நல்லா சாப்டுங்க எனக்கும் சேர்த்து சரியா? ரஹ்மான் என்ன பண்றாரு?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்