மணல் ப்ளவர் பேஸ்கட்

தேதி: December 12, 2012

5
Average: 4.3 (8 votes)

 

ப்ரிண்ட் அவுட் எடுத்த ப்ளவர் பேஸ்கட் டிசைன்
மணல்
ரங்கோலி கலர் பவுடர்
பெவிக்கால்
கிலிட்டர்ஸ்

 

விருப்பமான டிசைனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். மணலையும், கலர் பவுடரையும் சரிசமமாக எடுத்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
பிரிண்ட் செய்த டிசைனின் மேல் பெவிக்கால் தடவவும். அதில் கலந்து வைத்து இருக்கும் பவுடரை ஒரே சீராக பரப்பி விடவும்.
க்ளூவுடன் மணல், கலர் பவுடர் கலவை ஒட்டிக் கொண்டதும் அதனை செங்குத்தாக வைத்து தட்டவும். க்ளூவுடன் ஒட்டாத கலர் பவுடர் கீழே கொட்டி விடும். இதுபோல் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு கலர் கொடுக்கவும். இலைகளுக்கு பச்சை நிறம் கொடுக்கவும்.
பூக்கூடைக்கும், கைப்பிடிக்கும் விருப்பமான வண்ணங்கள் கொடுத்து முடிக்கவும். கைப்பிடிக்கு கலர் கொடுக்கும்போது கோலத்திற்கு புள்ளி வைப்பது போல் வைக்கவும்.
பூக்களுக்கு கோல்டு நிற கிலிட்டரால் அவுட் லைன் கொடுக்கவும். இலைகளுக்கு பச்சை நிற கிலிட்டர் கொடுக்கவும்.
பூக்கூடைக்கு நீல நிற கிலிட்டரால் அவுட் லைன் கொடுக்கவும். அதன் உள்ளே கிலிட்டர் கொண்டே கட்டங்கள் வரைந்து முடிக்கவும்.
மணல் கொண்டு செய்த எளிமையான ஃப்ளவர் பேஸ்கட் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டீம்னா டீம்தான். நம்ம கிட்டேயிருந்து குட்டீஸைகூட செய்யவைக்கலாம். அருமை. வாழ்த்துக்கள் டீம் :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மணல் பெயிண்டிங் நல்லா இருக்கு.அப்படியே ஃப்ரேம் செய்யலாம்

எளிமை மற்றும் அருமை. விரைவாகவும் செய்யலம்

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

ரொம்ப அழகான ஓவியம்... ரொம்ப நல்லா இருக்கு. சிக்கிரம் ஃப்ரேம் பண்ணுங்க... வனிக்கு அனுப்பி விடணுமில்ல :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூக்கூடை ரொம்ப அழகா இருக்கு. நானும் இதேபோல செய்துருக்கேன்.மணலுக்கு பதில் தேங்காய் பூ காயவைத்து ஒரு குட்டி ரங்கோலி போட்டு ,ஃப்ரேம் செய்து பூஜை அறையில் மாட்டியிருக்கேன்.இதையும் இந்தியா போய் கட்டாயம் செய்து பார்க்கணும். வாழ்த்துக்கள் :)

Kalai

சூப்பரா எளிமையா அழகா செய்து காட்டியிருக்கீங்க. பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் டீம்:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப ஈசியா கிடைக்க கூடிய பொருட்களை வைத்து ஈசியா அழகா செய்து காட்டி இருக்கீங்க வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

செம கியூட் ஆ இருக்கு லாஸ்ட் பிக்சர் பாக்கவெ அழகா இருக்கு தெலிவான செய்முரையோடு மொத்ததில சூப்ப்ப்ப்ப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அழகு+அருமை+நேர்த்தி=அட்மின்குழு(:-
மனமார்ந்த வாழ்த்துக்கள் அட்மின்குழுவினருக்கு!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல ஐடியா. அழகா இருக்கு டீம்.

‍- இமா க்றிஸ்

Eventhough simple it looks very elegant and simply superb