ஆலு ரொட்டி

தேதி: December 13, 2012

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை மாவு- 4 கப்
உருளைகிழங்கு -4
இஞ்சி பூண்டு விழுது –ட1 டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
கறிமசால் பொடி -1 டேபிள்ஸ்பூன்
தயிர் –கால்கப்
மல்லி இலை-1 கொத்து
புதினா இலை-1-கொத்து
உப்பு தேவைக்கு
என்ணை தேவைக்கு


 

ஓவனில் உருளைகிழங்கை க்யூப் சைஸ் துண்டுகளா நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,கறிமசால்பொடி,மல்லி ,புதினா இலைகள் உப்பு
சேர்த்து சிறிதளவு நீர் தெளித்து மைக்ரோஹையில் நன்றாக வேகும்வரை இடையிடையே கிளறி வைத்து எடுக்கவும்.
ஆறியதும் அதை அப்படியே தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அடிக்கவும்
அதை கோதுமை மாவில் கலந்து தேவைக்கு உப்பு சேர்த்து பிசையவும் ..
அதன்மேல் எண்ணைய் தடவி ஈரமான துணியில் அரை மணி வரை ஊறவிடவும்..பிறகு வேண்டும் வடிவில் தேய்த்து கட் செய்து தவாவில் எண்ணை தடவி சுடவும்


இதில் வேறு விருப்பமான காய் கலவை,பட்டாணி எல்லாம் சேர்த்து கொள்ளலாம்.கறிமசால் பொடிக்கு பதில் ளவுமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,கரம்மசாலா தலா 1டீஸ்பூன் அளவுக்கு சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பரூ.......... அப்படியே அந்த படத்தையும் இங்குட்டு அனுப்பிட்டீங்கன்னா வனி வில் பீ வெரி ஹேப்பி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப சுவையான குறிப்பா இருக்கு இளவரசி...
கண்டிப்பா ஒரு நாள் முயற்சி செய்றேன்...

படம் போட்டாச்சு வனி:)

நன்றி :)
ஷமீலா நிச்சயம் ட்ரைபண்ணிட்டு சொல்லுங்க நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வாவ்... இது சூப்பரு :) இப்ப பாருங்க, வனி சீக்கிரம் செய்த்துட்டு வரா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா