உதவி

ஹாய் தோழிஸ் , எனக்கு திருமணமாகி 1 வருடம் முடிவடைகிறது . போனமாதம் குழந்தைக்காக முயற்சித்தோம் , எனக்கு 28 நாள் சுழற்சி , இந்தமாதம் எஎனக்கு 39 நாட்கள் ஆகின்றன . இதனை நாட்கள் எனக்கு சிறிதாக வெள்ளை படுத்தல் இருந்தது... இன்று வெள்ளை படுத்தல் இளம் சிவப்பு நிறத்தில் உள்ளது . இதனால் எதாவது பதிப்பா ?

நீங்கள் கர்ப்பமா என்பதை உறுதி செய்தீர்களா?

இல்லை தோழி, இன்னும் 5 நாள் கழித்து டெஸ்ட் பண்ணலாம் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகிறது.

கர்ப்பம் இல்லையென்றால் இது ஒன்றும் பிரச்சனை இல்லை முதலில் கர்ப்பமா என்பதை உறுதி செய்யுங்கள்,

கண்டிப்பாக உறுதி செய்து விடுகிறேன் தோழி, நன்றி.

சுபா நீங்க வீட்டலயே ப்ரக்னன்சி டெஸ்ட் பன்னி பாருங்க

இன்று ஹோம் டெஸ்ட் நெகடிவ் நு வந்தது. ஆனா எனக்கு நார்மல் ப்லீடிங்கோ பெயின் ஒ இல்லை . என்ன நடக்குதுனே தெரில.

சுபசக்தி,

சில நேரங்களில் காரணமே இல்லாமல் பீரியட்ஸ் தாமதமாகும். மேலும் சில சமயம் குறிப்பாக கருக்குழாயில் (ectopic pregnancy) கரு தங்கியிருந்தாலும் சரியாக Home test ல் தெரிவதில்லை. கர்ப்பம் தானா இல்லையா என்று ரத்த பரிசோதனை செய்து பாருங்கள்.மருத்துவமனை சென்றும் செய்யலாம் ,அல்லது அருகில் உள்ள லேப் சென்றும் பரிசோதனை மேற் கொள்ளலாம்.

சுபா ஒரு சில நேரங்கள் 45 நாள் ஆனா தான் தெரியும்,ஒரு சிலர்க்கு 40 நாள் கூட தெரியாது.வைட் பன்னி பாருங்க

ஆம் தோழிகளே நீங்கள் சொல்வதும் சரிதான் . கொஞ்சநாள் வெயிட் பண்ணி பார்க்கிறேன் . அப்பொழுது தான் என்னை நானே உணரமுடியும்.. இபொழுது மிகவும் குழப்பத்துடன் இருக்குறேன்..மிக்க நன்றி

தோழிகளே வணக்கம். என் குழப்பத்தை தீர்த்து வெய்யுங்கள். எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகின்றது.
என்னக்கு திருமணதிற்கு முன் 28 நாட்களில் மாதவிடாய் சுழற்சி வந்துவிடும். திருமணதிற்கு பின் நாங்கள் குழந்தைக்கு முயற்சிக்கும் பொது எல்லாம் 10 நாட்கள் தள்ளி மாதவிடாய் வந்து விடுகிறது . இன்று டாக்டர் பரிசோதனையில் எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளதாகவும். அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் விளக்கி 2 மாதத்திற்கு மாத்திரை கொடுத்துள்ளார்.
இந்த தைரைடு பிரச்சனை எதனால்?.. இதற்கும் குழந்தை பிறப்பிற்கும் என்ன சம்பந்தம்?.. இது மிகவும் கடுமையான பிரச்சனையா?.. தயவு செய்து உதவுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்