தக்காளி பருப்பு

தேதி: December 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
பெரிய தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள், பெருங்காயம் -அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்
நெய், எண்ணெய்


 

துவரம் பருப்புடன் பெருங்காயம், 3 பல் பூண்டு, மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து குழைய வேக விடவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நீர் சேர்க்காமல் ஒரு விசில் வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியதும், வேக வைத்தவற்றோடு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
நெய்யில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து பருப்பில் சேர்க்கவும்.
கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

ஆந்திரா உணவகங்களில் பரிமாறப்படும் முதல் உணவு இந்த தக்காளி பருப்பு. நெய்யுடன் சுடு சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். மோர் மிளகாய், உருளைக் கறி, முட்டை வறுவல் இதற்கு சரியான ஜோடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிக எளிமையான அருமையான குறிப்பு கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் கவி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என்னை மாதிரி சமைக்க போரடிக்குற ஆட்களுக்கு நல்ல ரெசிபி :) ஈசியா செய்யலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hai kavi epdi irukeenga.?hey ipdiyae naangalum seivom..naanga paruppu thakkali endru solvom..neenga thakkali paruppundu solli irkeenga..taste arumaya irukum enna kavi..healthy dish..vazhthukkal.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

கவி எனக்கும் என்னவருக்கும் பருப்பு குழம்புனா ரொம்ப இஷ்ட்டம்.பார்க்கும் போதே தெரியுது டேஸ்ட் அருமை என்று.கண்டிப்பா செய்திட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்...வாழ்த்துக்கள்:)

SSaifudeen:)

தக்காளி பருப்பு நல்லா செய்துருக்கீங்க... நானும் செய்து பார்க்கிறேன்.

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கவிதா தக்காளிபருப்பு நல்லாஇருக்கும்மா பார்க்கும்போதே சாப்பிடனும்போல் இருக்கு.....வாழ்த்துக்கள்

கவிதா
உங்க குறிப்பு மிகவும் அருமை...
இன்னைக்கு இது தான் மதியத்துக்கு செஞ்சு இருக்கேன்...டேஸ்ட் நல்லா இருக்கு...செய்யறதுக்கும் சுலபமா இருக்கு...
வாழ்த்துக்கள்....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

அருள்,
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,

லிஸ்டில் நான் தான் முதல் ஆக்கும்!!!!
அவசியம் முயற்சித்து பாருங்க.வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சம்னாஸ்,

தெலுங்கில் உள்ள பெயரை அப்படியே translate செய்துவிட்டேன்..
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹளிலா,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சமீஹா,

அவசியம் முயற்சித்து பாருங்க.வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நிசா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷமீலா,

செய்து பார்த்து சொன்னதற்கு நன்றிங்க..

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தக்காளி பருப்பு நல்லா செய்துருக்கீங்க...
கண்டிப்பா நானும் ட்ரை செய்றேன்..
வாழ்த்துக்கள் கவி..

ஹசீன்

பத்தே நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய சூப்பரான குறிப்பு.வாழ்த்துக்கள் +நன்றி.

கவிதா தக்காளிப்பருப்பு ரொம்ப ஈஸியான குறிப்பா இருக்கு. பாசிப்பருப்பும் கொஞ்சமா சேர்க்கலாமா? வாழ்த்துக்கள்

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கவிதா ரொம்ப நல்லா சென்சிருக்கீங்க இத செஞ்சா எங்க வீட்ல இஷ்டமா சாப்பிடுவாங்க ,இத சப்பாதிக்கு தொட்டுக்கலாமா

ஹசீன்,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

விப்ஜி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நித்யா,

சேர்க்கலாம்.இதனுடைய ஒரிஜினல் version-ற்கு துவரம் பருப்பு மட்டுமே சேர்க்க வேண்டும்.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பூர்ணிமா,

தாராளமா :)
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி, தக்காளி பருப்பை எங்க வீட்ல உல்டாவா சொல்வோம். சொல்லும் போதே குழந்தைக்கு கூட பிடிச்சு போகும் ரெசிப்பி இது. நான் குழந்தையா இருந்ததில் இருந்து இப்ப வரைக்கும் நான் விரும்பி எப்போதும் உண்ண விரும்பு உணவு. :) அழகா செய்து காட்டியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் கவி..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

தக்காளி பருப்பு சூப்பரா இருக்கு எனக்கு தால் னா ரொம்ப பிடிக்கும் கட்டாயம் செய்து பார்க்குறேன் :)

கவிதா அக்கா சிம்பில் அன்ட் ஈசி டிஷ் அக்கா ரொம்ப அழகா இருக்கு அக்கா செய்முரை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரூபி,

அவசியம் முயற்சித்து பாருங்க.
வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கனி,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி தக்காளி பருப்பு ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா,

வருகைக்கும்,பதிவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா