பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

அன்பும்,பண்பும்,பாசமும் நிறைந்த அறுசுவை சகோதர!! சகோதரிகளே!! உங்கள் அனைவரையும் 80வது பட்டிக்கு இனிதே அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த 80ஆவது பட்டிக்கு நடுவராக பொறுப்பேற்று நடத்துவதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமிதமும்அடைகிறேன்.

தோழி குமாரி அவர்களின்

சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?

என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். இதில் ஒரு விளக்கம் யாதெனில் ஏன் சண்டை? எதற்கு சண்டை? சண்டையை சமாளிப்பது எப்படி?சண்டையினால் உண்டாகும் பின்விளைவுகள், சண்டையின் முடிவில் சாமாதானத்திற்கு வருவது யார்?
போன்ற விளக்கங்களை அனைவரும் விளக்கி வாதிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கணவன்,மனைவியாகிய நாங்கள் இதுவரை சண்டையே போட்டதில்லை என்பவர்களும் எங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை எனக்கூறுபவர்களும், தயவு செய்து அப்பா,அம்மா சண்டை, தாத்தா, பாட்டி சண்டை, பெரிப்பா, பெரிம்மா சண்டை, சித்தப்பா,சித்தி சண்டை, மாமா,மாமி சண்டை மற்றும்அக்கம்பக்கத்து வீடுகளில் நட்ந்த சண்டை அதனால் விளைந்த பாதிப்புகள், சமாதானங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி வாதாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழிகளே தாங்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மிக முக்கியமானைவையாக இருக்கக்கூடும், ஆதலால் தங்களுடைய பொன்னான நேரத்தில் பட்டிக்காக சிறுமணித்துளி ஒதுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!!
இந்த அருமையான தலைப்பைக் கொடுத்த தோழி குமாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இவ்விடத்தில் உரித்தாக்க கடமை பட்டிருக்கிறேன்!!

பட்டி விதிமுறைகள்:

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
ஆங்கிலத்தில கண்டிப்பாக பதிவுகள் இடக்கூடாது.
அரசியல் அறவே பேசக்கூடாது.
அரட்டை அறவே கூடாது
ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
அறுசுவை விதிகள் அனைத்தும் பட்டிக்கும் பொருந்தும்.

அனைவரும் வந்து பட்டியில் கலந்துகொண்டு இத்தலைப்பையும் பட்டியையும் சிறப்பிக்க வேண்டுமாய் மிகவும் வேண்டி விரும்பிகேட்டுக்கொள்கிறேன்.

பட்டி நடக்கும் இடம்:

அதோ தூரத்துல தெரியுது பாருங்க ஒரு மலை, அந்த மலை அடிவாரத்தில தெரியுற ஆலமரத்துக்கு அடிலதான் பட்டி நடக்கப்போகுது.
ஒத்தையடி பாதைவழியா அனைவரும் வெரசா வந்து சேருங்க.
நாட்டாமை தங்களின் வருகையை எதிர் நோக்கி வழிமேல் விழி வைத்துக்காத்திருப்பார்.

நான் எப்பவாச்சும் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ,தெரியாமலோ அறுசுவையில் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அதையெல்லாம் மனதில் கொண்டு பழிவாங்கி புடாதீங்க மக்கா!!
இந்த நடுவரு ரொம்ப நல்லவ! நல்லவ! நல்லவ!

நாங்க ஒத்தையடி பாதையில நடந்து பழக்கமில்ல, அம்புட்டு தூரத்தில பட்டிய கொண்டு போய் வெச்சா யாரு வரதுனு எவரும் முடைப்படாதீர்கள் தோழிகளே!
மெயின் ரோட்டிற்கும் ஆலமரத்திற்கும் ஷட்டில் ரெட்டமாட்டு வண்டி ரெடியா இருக்குதுங்கோ!
தயவு செய்து உருண்டு, பெரண்டாவது வந்து எந்த வேலையிருந்தாலும் கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டு பட்டிக்கு நேரம் ஒதுக்குங்கள் என இந்த அப்பாவி!! அப்பரசண்டி!! நடுவர் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார்!!!

மேலும் இளநீர்,பதநீர், தேங்காய், நுங்கு,குச்சிக்கிழங்கு,பனங்கிழங்கு வேர்க்கடலை, கருப்பட்டி,அச்சுவெல்லம் மற்றும் அனைத்து வகையான பழவகைகளும் தங்கள் வயிற்றுக்குள் செல்ல காத்திருக்கின்றன.

பட்டியின் இறுதியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதிவுக்கு தக்கபடி சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,புளி, மாங்காய் இன்னும் இந்த பட்டியலில் அடங்காத பொருட்களும் பரிசாக வழங்கப்படும் என்பதையும் இந்த வாயில்லாபூச்சி நடுவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கார்.

அன்புத்தோழிகளே அறுசுவை வரலாற்றில் ஒரு பதிவு கூட பெறாத நடுவர் என்னும் பெருமையை எனக்கு தேடித் தந்துவிடாதீர்கள் தோழிகளே!!
தயவு செய்து தங்களது மேலான கருத்துக்களை பதிவிட்டு பட்டியை இட்டு நிரப்புமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதைக்கு இதோட நிறுத்திக்கிறேன்...

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நடுவர் நாற்காலியில் அமர்ந்து நடுங்கி கொண்டிருந்தாலும் அந்த நடுக்கத்தை வெளியே காட்டாமல் சிரித்து கொண்டிருக்கும் அன்புக்கும்,பண்புக்கும்,பாசத்திற்கும் உரிய அருளுள்ளம் நிறைந்த நடுவர் அருட்செல்விக்கு என் வணக்கங்களும், வாழ்த்துக்களும் உரித்தாகுக..

உங்க தலைப்பும், நீங்களும் என்னை இந்தபக்கம் இழுத்தீர்களா என்பது எனக்கு தெரியாது.. எங்களுக்கு தர்றதா ஒரு லிஸ்ட் போட்டீங்களே அதில் குச்சிகிழங்கு,பனங்கிழங்கு, வேர்க்கடலை தான் இந்த பக்கம் வர சொல்லி கயிறு கட்டி இழுத்தன. சரி.. சட்டுபுட்டுனு மேட்டருக்கு வந்துட்டு சரக்கை எல்லாம் அள்ளிட்டு போறேன்...

சண்டையில் ஜெயிப்பது ஆணா? பெண்ணா-னு கேட்டா நிச்சயமா பெண்கள் தான்னு சொல்வேன். ஆண்கள் பாவம் அப்புராணிங்க.. பெண்கள் கண்ல கட்டி வச்சிருக்க தண்ணி டேங்க்ல 2 துளியை எடுத்து வெளியே கூட விட வேணாம்.. கண்ல டேம் கட்டி வச்சிருந்தாலே போதும். பொதுக்குன்னு விழுந்து சரண்டர் ஆய்டுவாங்க. இது நம்ம பொம்மனாட்டிங்க எல்லார்க்கும் தெரியும். பெண்கள் சண்டையில் ஜெயிக்க ஏகப்பட்ட அங்கவஸ்திரங்களை சே..சே... (வனியோட மாங்கா ஊறுகாய் சாப்ட்டு டங்கு.. சுளுக்கி கிடக்கு) அஸ்திரங்களை வச்சிருப்பாங்க. அதுல சமயத்துக்கு ஏத்த மாதிரி எடுத்து விடுவாங்க பாருங்க.. அது எப்படிதான் யோசிப்பாங்களோ.. எங்கிருந்து தான் யோசிப்பாங்களோ? இவங்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களா? ஊரை போட்டு யோசிப்பாங்களான்னே தெரியாது.

நடுவர் அவர்களே, எதிரணி தோழிகளின் வாதத்திற்கு பின்பு மீத என் வாதங்களை வைக்கிறேன். அதுவரை கொண்டு வந்த ஜாமான்களை பத்திரமா பார்த்துக்கோங்க..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே, போன பட்டியில் கதவைத்தட்டிவிட்டு எந்த வீட்டுக்குள் போவதுஎன்று தலைகால் புரியாமல் ஓடிவிட்டேன். இப்போ உங்க அழுவாச்சி கேட்டு ஓடியாந்தேன் மாமா வீட்டில் இருக்கும் போது பட்டிக்கு பதிவுபோட்டு வீட்டில் பட்டாசு வெடிக்கவா. தாங்காது சாமி. வாரேன் சீக்கிரமே.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

நானும் இதுல என் கருத்த சொல்ற ,ஆனா எனக்கும் கடைசில கண்டிப்பா அங்க வெச்சிருக்கிறத சாப்பிட கொடுக்கனும் சரியா,சரி நான் ஆரம்பிக்கிற ,கணவன்,மனைவி சண்டை ஒருத்தருக்கொருத்தர் ஈகோவா இருக்கறதனால வருது,2 பேரும் விட்டுக்கொடுக்காதனால வருது 2 பேரும் எதிர்பார்ப்புகள் நிரைய வெசிருப்பாங்க கணவன் இப்படிதான் இருக்க்னும்னு மனைவி எதிர்பார்ப்பாங்க,மனைவி இப்படிதான் இருக்க்னும்னு கணவன் எதிர்பார்ப்பாங்க,அது நடக்காததால ப்ரச்சினை வருது,கணவன் எப்படியாவது என்ன ப்ரசினை அனாலும் மனைவியை சமாதானப்படுத இரங்கி வந்துருவாங்க ஆன மனைவி கொஞ்சத்துக்கு இரங்கி வரமாட்டாங்க அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிடுவாங்க கணவன் கடைசியில சரி அட்ஜஸ் பண்னிக்கோ நான் என்னை மாத்திக்குற அப்படினுசொல்லி இரங்கி வருவாங்க ஆனா மனைவியோ நனைச்சித சாதிப்பாங்க அதனால சன்டையில ஜெயிக்கிறது மனைவிதான் என்பது என் கருத்து எல்லாரோட கருத்த கேட்டுட்டு நீங்க என் பக்கம் தீர்ப்ப சொல்லுங்க

நடுவரே... ரொம்ப பயந்து போய் இருக்கீக... பார்த்து... எறும்பு புத்துக்குள்ள நீங்க மட்டும் தான் இருக்கீங்களான்னு கவனிச்சு போய் ஒளிஞ்சுக்கங்க ;)

புது முகமானாலும் இந்த பட்டியில் சிரிப்புக்கு பஞ்சம் வைக்க மாட்டீங்கன்னு நினைச்சேன்... இப்படி திங்கலாம் பஞ்சம் வைக்காம ரெடி பண்ணுவீங்கன்னு இப்பத்தேன் தெரிஞ்சுதுங்க அம்மனி. நடத்துங்க நடத்துங்க.

இன்னும் சிலர் வந்து அணியை சொல்லட்டும், அப்பறம் நான் அணியை தேர்வு பண்ணிபுடுறேன் ;)

அதுக்கு முன்னாடி பட்டிமன்றம் - 80 : சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா? ‘னு ஒரே ஃபார்மட்டில் தலைப்பை மாத்திப்போடுங்கோ... அப்பறம் நான் இதை கணக்கில் எடுக்கலன்னு என்கிட்ட கோச்சுக்கப்புடாதாகும் ;) மற்ற தலைப்புகளோடு கலந்து மிஸ் ஆகாம பட்டிமன்றம் பளிச்சுன்னு தெரியத்தான்.

இப்போதைக்கு நடுவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :) நல்லா முடுக்கி விடுறாப்பல தலைப்பை தந்த குமாரிக்கு பாராட்டுக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நல்லதொரு தலைப்பை தந்த குமாரிக்கு நன்றிகள் பல.

சண்டைன்னு வந்தாலே எங்கேயும் எப்போதும் ஜெயிப்பது பெண்களே. ஆண்கள் பார்க்கத்தான் வீரமா இருப்பாங்க நம்ம வடிவேலு மாதிரி, உள்ள கோவைசரளாக் கிட்ட மாட்டி டர்ராவது வெளிய காட்டிக்க மாட்டாங்க!
அதனால ஜெயிக்கப்பிறந்த பெண்ணே வெற்றி பெறுகிறாள்னு, பெண்மைக்கு ஆதராவாகவே வந்துள்ளேன்.
"ஐய்யா சொல்லவந்தத கரக்டா சொல்லிட்டேன்"
சபாஷ் சரியான போட்டி மீதி வாதங்களுடன் வருகிறேன் விரைவில்.......

அச்சச்சோ முக்கியமானத மறந்துட்டேனே!!! நடுவரே எனக்கு பிடித்தமான ஐட்டங்கள் அத்தனையும் எனக்கு எடுத்து வைய்யுங்க. எல்லோரும் வீட்டுலேயே சாப்பிட்டுட்டு வந்துடுவாங்க???? வர்றவங்க எல்லாம் அவ்வளவு நல்லவுங்க.........> அதனால எல்லாமே எனக்கு மட்டும்தான்..............

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

எல்லாரும் ஆசையா பட்டி உட்டுப்போட்டு தின்பண்டத்து மேலயே கண்ணா இருக்கீக போல அதான் எனக்கு உத்விக்கு ரெண்டு பேர்த்த நியமிச்சிருக்கேன்.
அந்தப்புள்ளைக கிட்ட ஆராருக்கு என்னென்ன வேணுமோ கூச்சப்படாம வாங்கி சாப்பிடுங்கோ! எனக்கு,உனக்குனு அடிச்சக்கப்படாது ஆமா!

இதோ இவிகதான் அந்த ரெண்டு பேரும் (தத்தமது கணவரோட வந்திருக்காக)
1.திருமதி: மந்தாணி (எ) மந்தாகினி மண்ணாங்கட்டி (எ) மச்சக்காளை
2.திருமதி: குந்தாணி (எ) குந்தாகினி கல்லுமுட்டி (எ) பூச்சிக்காளை
எங்கடா போச்சுக இந்தப்புள்ளைக
ஏ......... குந்தாணியோவ்..................ஏ புள்ள மந்தாணியோவ்.........................
இங்க வாங்க.............. காங்கோல இருந்து கல்பனாக்கா வந்திருக்காக அவிங்க கேக்கறத எடுத்துக்குடுங்கடி ஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ நான் என்ற வேலைய பாக்றேன்.

///பெண்கள் கண்ல கட்டி வச்சிருக்க தண்ணி டேங்க்ல 2 துளியை எடுத்து வெளியே கூட விட வேணாம்.. கண்ல டேம் கட்டி வச்சிருந்தாலே போதும். பொதுக்குன்னு விழுந்து சரண்டர் ஆய்டுவாங்க.///
நீங்க சொல்றது சரிதான் கண்ணுல கட்டி வெச்சுருக்கிற டேங்க் தண்ணிய வெச்சுத்தான் அப்பப்ப சினிமா, துணிக்கடைனு போறதே.
மனுசன் ஆவறதவிட அழிவது பெண்ணாலதானு நம்ம கல்ப்பூ மறைமுகமா சுட்டிக்காட்டிட்டு போயிருக்காக. எதிரணில ஆராவது இருக்கீகளா?
முதல் பதிவ போட்டு இந்த நடுவர மகிழ்ச்சி அடையச்செய்துட்டீங்க கல்ப். அதுனால உங்களுக்கு பனங்கிழங்கு 2 அதிகமா கொடுக்கச்சொல்லி குந்தாணி கிட்ட ஆர்டர் போட்டிருக்கேன், எடுத்துக்கோங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அம்மாடி செயந்தி மாமன் இருக்காக மல்லிப்பூ வாங்கியாந்தாகனு பாட்டெல்லாம் பாடப்புடாது ஆமா, சீக்கிரமா பதிவோட ரெட்டமாட்டுவண்டி ஏறி ஆலமரத்துக்கு வந்து சேரணும் ஆமா!!
சின்ன வெங்காயத்தை பாத்து பல வருஷமாச்சுல்லோ மந்தாணி கிட்ட கேட்டு 10 கிலோ சி.வெங்காயம் அள்ளிப்போட்டுட்டு போலாம் வெரசா வாங்கோ!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//நானும் இதுல என் கருத்த சொல்ற ,ஆனா எனக்கும் கடைசில கண்டிப்பா அங்க வெச்சிருக்கிறத சாப்பிட கொடுக்கனும் சரியா,//
ஐயொ ஐயோ, இந்த புள்ளைங்கோ சாப்டற பொருளிலயே குறியா இருக்கிறாங்களே!!

ஆமாங்க இந்த் ஈகோனு ஒண்ணு இருக்கிறதாலதான் பிரச்சினையே, அதெப்படி நீ சொல்லி நாங்கேக்கிறதானு வரும் பாருங்க சண்டை, இத்தனைக்கும் அது ஒன்ணும் பெரிய விஷயமாவே இருக்காது, கணவ்ர் இட்லி வேணும்பார், உடனே மனைவி ஆரு இட்டலி பாத்திரம் கழுவரது தோசைதான் சுடுவேம்பார், ஏன்னா அதுதானே ஆடிக்கொருக்கா அம்மாசைக்கொருக்கா வெலக்குனா போதும்.
இந்த கருத்து நான் சொல்லீங்கோ பூர்ணி சொல்றாங்கோ!!

ஏ புள்ள குந்தாணி அலாட்டா இருக்கியா!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//நடுவரே... ரொம்ப பயந்து போய் இருக்கீக... பார்த்து... எறும்பு புத்துக்குள்ள நீங்க மட்டும் தான் இருக்கீங்களான்னு கவனிச்சு போய் ஒளிஞ்சுக்கங்க ;)//
வனி அது எறும்பு புத்து இல்லீங்கோ எறும்பு குழிங்கோ!! புத்துக்குள்ளார போயி உள்ள இருக்கிற சீவன கன்ணுல பாத்தாலே நமக்கு பயம், படையப்பா ரேஞ்சுக்கு சொல்லிபுட்டீங்கோ!!

//இப்படி திங்கலாம் பஞ்சம் வைக்காம ரெடி பண்ணுவீங்கன்னு இப்பத்தேன் தெரிஞ்சுதுங்க அம்மனி. நடத்துங்க நடத்துங்க.//
இப்பதான் தெரியுது எல்லாரும் பட்டினியாத்தேன் பட்டிக்கு வந்திருக்கீகனு!!

ஏ மந்தாணி குந்தாணி எங்க போய்ட்டா பாரு, போய் வனிதாம்மா வந்திருக்காகனு கூப்புட்டுவா!! கேக்கிறத சட்டுபுட்டுனு கொடுத்தனுப்பு அவிங்க ஆருனு தெரியுமில்லோ!!
குந்தாணியக்கோவ்வ்வ்! வனிதாம்மா வந்திருக்காங்க சீக்கிரம் வாக்கோவ்வ்!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்