குழந்தைக்கு தமிழ் மருந்து கொடுப்பது பற்றி

வணக்கம்,
நான் 7மாதம் கர்ப்பம் ஆக இருக்கிறேன்.நான் US இருக்கிறேன்.டெலிவரி இங்கு தான் பார்க போகிரேன்.என் மாமியார் இருக்க போகிறார்.என் மாமியர் குழந்தைக்கு சில தமிழ் மருந்து கொடுக்க வேண்டும் என்கிறார்.அதற்கு பல இலைகள் கொண்டு ஏதோ மருந்து தயாரிக்கிறார்.என் சந்தேகம் என்ன என்றால் இங்கு தமிழ் மருந்து கொடுக்கலாமா?இங்கு weather ku ஒத்துகொள்ளுமா ?வேறு ஏதும் பிரச்னை வருமா?எனக்கு இதில் உடன்படு இல்லை.வேண்டாம் என்றால் நாங்கள் வளர்க்வில்லையா என்கிறார்கள்.குடுக்கலாமா ஆலோசனை தாருங்கள் தோழிகளே.

உண்மையில் தேவையே இல்லை..பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் மருந்து அதான் எல்லாமே..அம்மா தான் அதுக்கு தகுந்தபடி உடம்பை பார்த்துக்கணும் சாப்பிடணும்.பச்சிளம் குழந்தையின் வயிறு ரொம்ப சென்சிடிவானது பலதையும் அரைச்சு தேய்ச்சு கொடுப்பது குழந்தையின் வயிற்றுக்கு நல்லதில்லைன்னு எனக்கு படும்..ஆனால் அவங்க அவங்க ஆசைக்கு கொண்டு வராங்கன்னா மற்ற பெரியவர்களிடமும் ஆலோசனை கேளுங்க என்ன சொல்றாங பார்ப்போம்..என் சின்ன மகனுக்கு அப்படி தான் டாக்டர் சொன்னாங்க நானும் எந்த நாட்டு மருந்தும் எடுக்கலை
வேணா பேசாம இருந்துட்டு அவங்க கைலிருந்து மருந்தை வாங்கிட்டு கொடுக்கறேன்னு சொல்லிட்டு கீழ கொட்டிடுங்க அவங்களுக்கு தெரியாம ப்ரச்சனை இல்லை

தமிழ்மருந்துகள் இந்தியாவில் குறிப்பா தமிழ்நாட்டில் பிறக்கிற இந்தக்காலத்து குழந்தைகளுக்கே ஒத்துக்கிறதில்ல. அப்படியிருக்கும்போது வெளிநாட்டில் பிறக்கப்போகின்ற அந்த பிஞ்சுக்கு ஒத்துக்குமா என்பது சந்தேகமே. எங்க பிறந்தா என்னங்க முதல் ஆறுமாதத்திற்கு தாய்ப்பாலை விட சிறந்த மருந்தாகிய உணவு குழந்தைக்கு வேறு எதுவுமில்ல. மேல தளிகா சொன்னது மாதிரி சேயின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு தாய் தன் உடல்நலம் பேணுதல் அவசியம். டாக்டர்கிட்ட விஷயத்த சொல்லி உங்க மாமியாரிடம் நாட்டுமருந்து ஏதுவும் தரக்கூடாதுன்னீ கட் அண்ட் ரைட்டா சொல்லவிடுங்க. அப்பறம் எப்படி தர்றாங்கன்னு பார்க்கலாம். ஃபர்ஸ்ட் நீங்க கவலைப்படாம ஆரோக்யமா குழந்தை பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஆலொசனை கூறிய தோழிகளுக்கு நன்றி .எனக்கும் புரிகிறது.ஆனால் என் மாமியாரை சமாளிக்கும் முறை தான் தெரியவில்லை.அவர்கள் இபொழுதே எனக்கு குழந்தை பற்றி ஒன்றும் தெரியாது என்கிறார்கள்.என்க்கு தெரியாமல் மருந்து கொடுக்க போவதாக என் அம்மாவிடம் கூறி உள்ளார்.அது தான் எனக்கு பயமாக உள்ளது.அவர் இப்பொழுதே அதிக possive அக இருக்கிறார்.அவர் தான் எல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.எனக்கு குழந்தையை என்னிடம் தருவார்களா என்றே பயம் வந்து விட்டது.எனக்கு இபொழுது டெலிவரியை விட இந்த பயம் தான் உள்ளது.இது எங்களுக்கு 2 வருடம் கழித்து கிடைத்த வரம்.

பெரிதாக யோசிக்காமல் சந்தோஷமாக இருங்கள். இப்போதைக்கு மாமியோடு இது பற்றி எதுவும் அதிகம் பேச வேண்டாம். 'முடியாது' என்றால் சிக்கல். அதற்காக "விருப்பப்படி செய்யுங்கள்' என்று மட்டும் சொல்லி வைக்க வேண்டாம். :) "எதுவானாலும் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டுக் கொடுப்போம்." என்கிறது போல பேசுங்கள். உங்களைக் கவனிக்கப் போகும் மருத்துவர், தாதிகளிடம் இதுபற்றிப் பேச இயலுமா? அவர்கள் சொன்னால் கேட்பார்களல்லவா!

பெரியவர்களானால் கூட, இரண்டு விதமான மருந்துகளைக் கலந்து எடுப்பது நல்லதல்ல. குழந்தைக்கு ஆரம்பத்திற்குத் தாய்ப்பால் போதும். அதிலேயே எல்லாம் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

இங்கு இப்படித்தான் பிறந்த ஒரு குழந்தைக்கு நம்மூர் மருந்து கொடுத்ததில் வசம்பின் தாக்கம் என்று நினைக்கிறேன்,அந்த குழந்தை எப்போதும் தூங்கிக் கொண்டும் ,அதிக துடிப்பாக(Active) இல்லாமலும் இருந்தது,இங்குள்ள குழந்தை மருத்துவரிடம் காண்பித்த பொழுது அந்த தோழி குழந்தைக்கு கொடுத்த நாட்டு மருந்துகளையும் கூடவெ எடுத்துச் சென்றார். ஆனால் அந்த மருந்துகளுக்கு ஆங்கில வார்த்தையும் தெரியாமல் டாக்டர்களால் அதன் பயன் தான் என்னவென்று கண்டரியவும் முடியவில்லை.இறுதியில் இதை என்ன காரணத்திற்க்கு பிறந்த குழந்தைக்கு கொடுக்கிறீர்கள் என்று மருத்துவர் கேட்டதற்க்கு,அவள் கூறிய பதில் எங்கள் நாட்டில் எல்லோரும் குழந்தை பிறந்தால் கொடுப்பது என்று.இத்தனைக்கும் அவள் ஒரு எஞ்சினியரிங் படித்த பெண். பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அஜீரணத்தை தடுக்கத்தான் இந்த மருந்து என்று நம்மூரில் சொல்வது வழக்கம், அப்படியென்றால் பத்திய உணவும் உண்ணாத மேற்க்கத்திய நாட்டு பெண்களின் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒருக்கிலும் அஜீரணக் கோளாறு என்று வந்ததில்லையே.

இதையெல்லாம் பெரும்பாலான நம்மூர் பெரியவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை ,அவர்களுக்கு புரிய வைப்பதற்க்குள் நமக்கு பாதி வாழ்க்கை கடந்து விடும்.

பிரசவத்திற்க்கு மருத்துவமனை செல்லும் போது இந்த மருந்துகளையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்,பிரசவம் முடிந்து வீட்டிற்க்கு வந்தவுடன் அத்தை இந்த மருந்துகளை குழந்தை மருத்துவரிடம் காண்பித்தேன்,அவர் இதை கொடுக்கவே கூடாது,இங்குள்ள வெப்ப நிலை சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த மருந்துகள் ஒத்துக் கொள்வதில்லை என்று கூறிவிட்டார்,என்று சொல்லுங்கள்.உங்கள் கணவரையும் சொல்லும்படி அறிவுறுத்துங்கள்.

ஏனென்றால் பிறக்கப் போவது உங்களிருவரின் குழந்தை.

குழந்தை மீதுள்ள Possesive எல்லாம் அவர்கள் உங்களோடு US ல் இருக்கும் வரைக்கும் தான், ஆகவே அதைப் பற்றி இப்போது கவலைப் படாதீர்கள்.

தோழிகளுக்கு நன்றி.நீங்கள் சொன்ன படி தான் செய்ய போகிறேன்.என்னுடன் மருத்துமனைக்கு அழைத்து போக போகிறேன்.அப்படியும் கேட்கவில்லை என்றால் தோழி thalika கூறியது போல் அவருக்கு தெரியாமல் கொட்டி விட வேண்டியது தான்.

அனுபவத்தில் ஒரு விஷயம் எனக்கு தெரியும்..இங்கு டாக்டர் என்னிடம் சொன்னதே நீங்களும் நாட்டு மருந்து சாப்பிடக் கூடாது குழந்தைக்கும் கொடுக்க கூடாது சத்தான ஆகரமான மட்டும் சாப்பிடுங்க என்று..அவங்க சொன்ன காரணமும் சரியோ என்று பட்டது கண்டதையும் சாப்பிடுவதால் அது தாய்ப்பால் வழி குழந்தைக்கும் சென்று சரியான வயிற்று வலி உண்டாகுமாம் அதான் குழந்தைகள் வீறிட்டு அழுது என்றார்கள்..அது உண்மையென்றே நினைக்கிறேன் என் இரு குழந்தைகளுக்கும் நானும் என் குழந்தைகளுக்கும் எதுவுமே கொடுத்ததில்லை அதனாலேயே அவர்கள் வயிற்று வலி வாயு என்று அழுததும் இல்லை.அதே சமயம் என்னோடு குழந்தை பெற்ற மற்றவர்கள் அவங்க எல்லா வகையான மருந்துகளும் சாப்பிட்டு குழந்தைகளை படுக்க வைக்க முடியாது அப்படி ஒரு வயிற்று வலியால் அழும்

குழந்தைக்கு வயிற்று வலி என்று கண்டுபிடிப்பது எப்படி

நீங்கள் இப்படிக் கேள்வியை வைப்பதை விட‌... நீங்கள் அவதானித்த‌ விடயங்களைச் சொன்னால் ஏதாவது பதில் சொல்லலாம். 'வயிற்று வலி' நேரத்திற்கு சாப்பிடமாலிருந்தாலும் வரும்; தேவைக்கு மிஞ்சி சாப்பிட்டாலும் வருமே!

எல்லாக் குழந்தைகளும் வயிற்று வலிக்கு ஒரே மாதிரி ரியாக்ட் பண்ண‌ மாட்டாங்க‌.

குழந்தை ஒழுங்காகச் சாப்பிட்டு, ஒழுங்காகத் தூங்கி, ஒழுங்காக‌ மலசலம் கழித்து சந்தோஷமா இருந்தால் போதும். எதையும் கண்டுபிடிக்கவென்று கணடுபிடித்து மருந்து கொடுக்க‌ வேண்டியது இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்