தொடர்ந்து பேசலாம் வாங்க...

தோழிகளே தொடர்ந்து பேச எல்லாரும் இந்த இழைக்கு வாங்க.

நித்யா ஏன் இந்த சோகம் வருத்தம் வேண்டாம் நீங்க திரும்ப பழையபடி ஆகனும் சீக்கிரம் க்மான் கமான் யாருமே உங்க கருத்தை தப்பு சொல்லவே மாட்டோம் நீங்க சரியா தான் சொல்லி இருக்கீங்க இனிமே நம்ம எல்லாரும் சேர்ந்து நிச்சயமா இந்த பகுதியை பயனுள்ளதா கொண்Dஉ போவ்வோம் என்ன சரியா. எல்லாரும் வந்து ஓகே சொல்லுவாங்க பாருங்க அதுக்காக நீங்க என்னடான்னா இங்க வராமலே இருந்துடலாம்னுலாம் சொல்றீங்க தி இஸ் டூ மச் மேடம் டூ மச். அரட்டை அப்படி நலம் விசாரிப்பது நம்ம சார்ந்தவங்க நல்லா இருக்காங்களானு தெரிஞ்சுக்க தான் அவங்க சமையல் என்னான்னு கேட்கும் போது அடுத்த நம்ம வீட்டுலயும் அந்த டிஷ் செய்திடலாம்னு ஒரு ஐடியாஸ்கு தான் இனி எல்லாரும் வந்ததும் சீக்கிரம் ஒரு இண்ட்ரோ கொடுத்துட்டு நம்ம டாபிக் பேச ஆரம்பிச்சுடலாம் என்ன சரியா நித்தி கூல் டவுன் நம்ம தோழிகள் எல்லாரும் வருவாங்க பாருங்க.
அதுப்போல எனக்கு இன்னொரு யோசனை தோணி இருக்கு பழைய உள்ள போன சில த்ரெட் எடுத்து வெளியில் விடலாம் பல பயனுள்ள த்ரெட் எல்லாம் உள்ளார கிடக்கு யாருக்கும் பயன் இல்லாமலே ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தங்க அப்படி உள்ள த்ரெட் எடுத்து வெளியில் தெரியும்படி செய்யலாம்

ரொம்ப நன்றி உமா பச்சைக்கொடி காட்டினதுக்கு. இப்படியே தொடர்ந்து வந்து ஆதரவு கொடுங்க. நான் வராம இருக்கனும்னு எனக்கு துளிகூட ஆசையில்ல உமா. ஆனா யாராவது ஒருத்தருக்கு நான் வர்றது பிடிக்காம இருந்தாலும் அந்த நிமிஷமே நான் வர்றத நிறுத்திடுவேன் உமா. சைலண்ட் ரீடரா இருந்து மற்ற தோழிகள் பேசி சந்தோஷப்படுறத பார்த்து நானும் சந்தோஷப்பட்டுக்குவேன். அவ்வளவுதான். யாருக்காவது நான் வர்றது பிடிக்காட்டி ஓபனா வந்து சொல்லுங்கோ அம்மணிகளா! நான் தப்பாவே நினைக்க மாட்டேன்.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா ஒரு விஷயம் சொல்லுங்க நீங்க வரனும்னு நினைக்குற 10 பேர் இருக்கும் போது நீங்க வரவேண்டாம்னு நினைக்கிற ஒருத்தர நினைச்சு நீங்க ஏன்பா கவலைப்படனும் அப்போ அந்த 10 பேர் உங்களுக்கு முக்கியம் இல்லையா அவங்க உங்க மேல வச்சிருக்கிற அன்புக்கு நீங்க செய்யும் மரியாதை இது தானா, அப்படி யாரும் நீங்க வர வேண்டாம்னு நினைக்க மாட்டாங்க, தவறா சொல்லி இருந்தா சாரி நித்யா உரிமைல தான் சொன்னேன்பா.

நீங்க சொல்றது சரிதான் உமா. அந்த ஒருத்தரையும் ஏன் நான் கஷ்டப்படுத்தனும்னுதான் அப்படி சொன்னேன் மற்றபடி எனதருமைத்தோழிகளை ஒருநாளும் வருத்தப்பட விட மாட்டேன். சரி மற்ற தோழிகளும் வந்து உங்க ஐடியா பற்றி கருத்து சொல்லட்டும். இன்னைக்கு பேச ஏதாவது டாபிக் சொல்லுங்க உமா. உமா உங்களுக்கில்லாத உரிமையா? நீங்க மட்டுமில்ல என் தோழிகள் எல்லாருக்குமே என்கிட்ட முழுஉரிமை இருக்கு. என்னை அடிச்சாலும் வாங்கிக்குவேன். போதுமா?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கொஞ்சம் சுயநலமா தான் யோசிச்சு இருக்கேன் தப்பா நினைக்க வேண்டாம் ஆனா என்னமாதிரி உள்ள மத்தவங்களுக்கும் பயன்படுமேன்னு தான் கேட்கறேன் புட் சார்ட் அதாவது ஒரு வாரத்திற்கான ரெசிப்பி லிஸ்ட் நீங்கல்லாம் உங்க வீட்டில் உள்ளவங்களுக்கு எப்படி பேலண்ஸ்ட் புட் கொடுக்கறீங்க இப்ப உதாரணத்திற்கு வீக் புல்லா காய்கறி சாப்பாடுனா சண்டே நான்வெஜ் அப்போ அந்த வீக்ல என்ன காய்கறிகள் பருப்பு வகைகள் எல்லாம் எப்படி பிரிச்சு கொடுக்கனும் நீங்க எப்படி செய்றீங்கன்னு கொஞ்சம் ஐடியாஸ் அப்பறம் நீங்க பாலோ பண்றத ஷேர் பண்ணிக்கலாமா.

மன்னிச்சூ மன்னிச்சூ நான் வீட்ல நீங்க சொல்றமாதிரியெல்லாம் ப்ளான் போட்டுவெச்சு ஃபாலோ பண்றதே கிடையாது உமா. என் கணவர்கிட்ட என்ன செய்யட்டும்னு கேட்டு அவருக்கு பிடிச்சதா பார்த்து செஞ்சு தர்றதுதான் வழக்கம். அது மூடுக்கேத்தமாதிரி நாளுக்குநாள் மாறுபடும். சோ இந்த டாபிக்ல நான் பேச ஒன்னுமில்ல. மற்ற தோழிகள் வந்து சொல்லட்டும். நானும் கொஞ்சம் யூஸ் பண்ணி லிஸ்ட் போட்டு சமைக்க ட்ரை பண்றேன்;)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

உமா இது நல்ல டாபிக்.....எல்லாருக்கும் ரொம்ப தேவையானதும் கூட........டாபிக் சொன்ன நீங்களே start பண்ணுங்க...........

நித்தி அப்படியா சரி சரி அப்போ நம்ம தோழிகள் சொல்றது உங்களுக்கும் உதவும். லிஸ்ட்டுனு இல்ல நித்தி ஹெல்தியா சரியான உணவு அவ்வளாவு தான்பா.

சாதிகா நன்றிப்பா. எனக்கும் இதுலாம் சரியா புலப்படலப்பா எங்க வீட்டுல பெருசா அப்படி எதுவும் இல்ல அத தெரிஞ்சுக்க தான் கேட்டேன்பா. திங்கள் ஏதாவது ஒரு கீரை, செவ்வாய் வெரைட்டி ரைஸ், புதன் பிஷ், வியாழன் ஏதாவது பருப்பு வகை, வெள்ளினா ஏதாவது டிபன்(சப்பாத்தி) வித் தயிர் சாதம், சனிக்கிழமை சாம்பார், ஞாயிறு சிக்கன் மட்டன்பா இவ்வளவு தான் எனக்கு தெரிந்தது

ஹாய் உமா , நித்யா,கார்த்தி, சதீகா அனைவருக்கும் வனக்கம் என்னப்பா காலைல இருந்து சூடு பரக்க விவாதம் நடக்குது என்னல அடிக்கடி வர முடியல அப்பப்ப வருக்கிரென் பா என்ன பன்ரிங்க எல்லொரும்

நித்யா என்ன ஆச்சு காலைல இருந்து ஒரெ பிரச்சனையா இருக்கு என்னாச்சுப்பா எதாவது ப்ராளமா இவ்லோ வருத்த பட்டு சொல்லீருக்கீங்க அதுவும் நீங்க இந்த இழை பக்கமா வர மாட்டென் சொல்ர அலவுக்கு உங்கல பாத்து தான் நாங்கல வாரொம்

மேலும் சில பதிவுகள்