மன சொர்வு

தொழிகளெ,
எனக்கு மிகவும் சொர்வாக உள்ளது. நான் என் அப்பா அம்மா வை பார்த்து 3 வருடம் ஆகிரது. இப்பொளுது கர்பமாக உள்ளஏன். தினமும் அழுது அழுது நாள் போகிரது. நீங்கள் எல்லாரும் எப்படி சம்மாளித்தீர்கள்? எனக்கு நண்பர்கள் இங்கு இல்லை. எனக்கு தயவுசெய்து உதவி செய்வீர்களா?

தோழி நலமாக இருக்கீங்களா? இது எத்தனையாவது மாதம்? நீங்க எந்த நாட்டில் வசிக்றிங்க?நீங்க மூன்று வருடமா வேக்கேசன் போலாய? என்னடா இவ கேள்வியா கேட்குறா னு நினைக்ரிங்களா :) பொதுவா கர்பமா இருக்கும்போது அம்மா பக்கத்தில் இருக்க தான் ஆசை படுவாங்க..............நீங்க மூன்று வருடமா பெற்றோரை பார்க்கதால் அதிகமா மிஸ் பண்றிங்க.........../////எனக்கு நண்பர்கள் இங்கு இல்லை. எனக்கு தயவுசெய்து உதவி செய்வீர்களா?////
நாங்க இருக்கோம் எங்களிடம் வந்து எதுவ இருந்தாலும் கேளுங்க இந்த நேரத்தில் கவலைபடாமல் உடம்பை கவனித்து கொள்ளுங்கள் ஆரோக்கியமான அழகான குழந்தை பெற்றடுக்க வாழ்த்துகள்..........மற்ற தோழிகள் வந்து உங்களுக்கு உதவுவார்கள்.............

தோழி நான் நலமாக உள்ளேன். இது எனக்கு 4 வது மாதம். நான் U.S இல் உள்ளேன். ஆமாம் தோழி ஊருக்கு போய் 3 வருடம் ஆகுது. குழநதை இல்லாமல் ஊருக்கு என்னால் செல்ல முடியாமல் இருந்தது. கடவுள் எனக்கு கிருபையை அருளிஉள்ளார்
இங்கு பேச்சு துனைக்கு யாரும் இல்லை. அது போதது என்ட்ரு, உலகில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் எனது பயத்தை அதிகரிகின்ட்ரது. எப்படி ஆருதலாக இருகனும் என்ட்ரு புரியல.

ஹாய் ஜெசி,
உங்கள் மனநிலை புரிகிறது.நானும் இப்பொழுது கர்ப்பமாக தான் உள்ளேன்...வெளிநாட்டில் வசிக்கும் நம்மை போன்றோர்க்கு தனிமையான உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான்..அது இந்த மாதிரி சமயத்தில் உறவினர்களுடன் இருப்பதையே மனம் விரும்பும்...
நீங்கள் உங்களுக்கு பிடித்த வழியில் மனதை திசை திருப்பிக் கொள்ளுங்கள்...
இனிமையான இசை,புத்தகங்கள் என்று உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.
எனக்கு மிகவும் தனிமையாக உணரும் போது எதாவது புதிதாக சமைத்து பார்ப்பேன்...இன்னும் சில மாதங்களில் குழந்தை வந்தால் தனிமை எல்லாம் போய்விடும்...அதனை நினைத்து கொண்டே சன்தோஷமாக இருங்கள்...நேரம் கிடைத்தால் இங்கு தோழிகளுடன் உரையாடுங்கள்...

தோழி நீங்கள் நல்ல படியாக குழந்தை பெற என் வாழ்த்துகள்,இந்த மாதிரி நேரத்தில் கவலை படாதீர்கள்,மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள்,உலகில் நன்மையும்,தீமையும் கலந்து தான் இருக்கும்,நீங்கள் நன்மையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் உங்கள் தனிமை என்க்கு புரிகிறது,,அதை சந்தோஷமாக மாற்றிக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துங்கள்,பாட்டு கேளுங்கள்,கம்பியூட்டர் பாருங்கள்,தெரியாதவற்றை கற்றுக்கொள்ளுங்கள் சூழ்நிலையை சந்தோஷமாக மாற்றுங்கள்,அனைத்தும் சந்தோஷமாக மாரும்

தோழி 3 வருடமா இருக்கீங்க ஆச்சிரியமா இருக்கு. நீங்க அப்படி இருந்ததுக்கு தான் பலன்(குழந்தை) கிடைத்திட்டே.இனிம என்ன கவலை......அதான் 7 மாதத்தில் ஊருக்கு போகலாம்ல உங்களுக்கு ஊருல தான delivery இப்ப உங்களோட பேச ஒரு குழந்தையும் வந்தாச்சு....இந்த ரொம்ப கவலைப்படாதீங்க.free யா இருந்தா அரட்டை பக்கம் வாங்க அங்க எல்லாரும் உங்க கூட பேசுவாங்க...தனிமையும் தெரியாது...

மிக்க நன்றி தோழி, உங்கள் வார்த்தை எனக்கு மிகவும் ஆருதலாக உள்ளது. உங்கள் கர்ப்பத்திர்க்கு என் வாழ்த்துக்கள்.

நீங்க சொல்ற்து நூத்துக்கு நூரு உண்மை தாங்க. உங்கள் ஆருதலுக்கு மிகவும் நன்றி poornimaj

இல்லங்க, எனக்கு இங்கு தான் delivery. ஊரில் இருந்து யாரும் வருவாங்கலான்னு தெரியல. தனியா நானும் என் கணவரும் தான் பாக்க போகிரோம். எப்படா குழந்தை பிறக்கும் ஊருக்கு போகலாம்னு காத்திருகிரேன்.

தோழி ஜெசி, அம்மா ப்ரமோஷன் கிடைச்ச உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) இந்த சமயத்தில் அம்மாவை எல்லா பெண்களுமே அதிகமா மிஸ் பண்ணுவாங்க. அதுக்காக சின்ன பசங்க மாதிரி அழ கூடாது. இப்ப நீங்க தனி மனுஷி இல்லை. உங்களுக்குள்ளே இன்னொர் உயிர் வளர்ந்துட்டு இருக்கு. அதுவும் உங்க அழுகையை நல்லா உணர முடியும். குழந்தை வருத்தப்பட்டா உங்களுக்கு பிடிக்காதில்லையா.. குழந்தைக்காகவாவது இனி அழுவதை விட்டு, சந்தோஷமா இருக்க பாருங்க. பிடிச்ச விஷயங்களை செய்ங்க. குழந்தை சம்மந்தப்பட்ட வீடியோஸ் நிறைய பாருங்க. வீட்டு சுவற்றில் நிறைய குழந்தை படங்களை ஒட்டி வையுங்கள். அதை பார்க்கும் போதே உங்களுக்கு அழுகை என்பதே மறந்து போகும்.

திருமணம் முடிந்து அம்மா வீட்டுக்கு பக்கத்திலயே நாம இருந்தாலும், மனசளவில் ரொம்ப தூரமா இருக்க பீலிங் தான் இருக்கும். உங்களை போன்றே பல தோழிகள் வெளிநாட்டில் இருந்தே பிரசவத்தை முடித்து குழந்தையை தனியாளாக வளர்த்தும் வருகிறார்கள். எந்த மாதிரி சூழ்நிலைகளையும் என்னால் எதிர்கொள்ள முடியும். அவற்றை சந்தித்து வெற்றிகரமாக கடந்து வருவேன் என்று மனதளவில் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் எத்தனை தான் வலிமையானவர்களாக இருந்தாலும் கண்ணீர் என்னும் ஊசி பட்டு புஸ்ஸென்று காற்று போன பலூன் ஆகி விடுவார்கள்.

எப்படியெல்லாம் அழலாம்னு நினைக்கறதை விட்டுட்டு, எப்படியெல்லாம் சந்தோஷமா இருக்க முடியும்னு யோசிங்க. அறுசுவையில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது, உங்களால் முடியும் போது இங்கே வந்து பங்கெடுத்து கொள்ளுங்கள். தனிமை என்பதே உங்களை நெருங்காது. உங்களை மகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு போகவே இப்படி சொன்னேன். தவறேதும் இருந்தால் மன்னிக்கவும். பிரசவ காலத்தை நல்லா எஞ்சாய் பண்ணுங்க. நாளை நடப்பது நல்லதாகவே இருக்கும்னு நம்புங்க. ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னது சின்னபிள்ளையாட்டம் கண்ணைக்கசக்கிட்டு. முதல்ல கண்ணைத்தொடைங்க.ஹாங்.. சமத்து ஜெஸ்ஸி!
வெளிநாட்டு வாழ்க்கை தரும் முதல் பரிசு தனிமைதான். அதுவும் ஸ்னோ பொழியும் குளிர் பிரதேஷம் என்றால் சொல்லவேவேண்டாம். நம் முன்னே நிற்கும் தனிமையை எப்ப்டி விரட்டி அடிப்பது என்பதுதான் வில்பவர்.தனிமையை விரட்டத்தெரியாமல் நீங்கள் அனுபவிக்கும் ஸ்ரெஸ் குழந்தையை பெரிதும் பாதிக்கும். எனக்கு தெரிந்த வழிகள் சொல்றேன் ஒத்துவருதா பாருங்க.
பகுதிநேர வாலண்டீர் செய்வது. வெளிமனிதர்களை சந்திப்பதும் பேசுவதும் அருமையான ஸ்ரெஸ் ரெலீஃப்.
பாட்டுகேட்பது, வாய்விட்டு பாடுவது.
ஷார்ட் டேர்ம் கோர்ஸ் பண்ணுவது.
மாலைநேர சிறிது வாக் போய் அருகில் இருக்கும் பார்க்கில் கொஞ்சநேரம் வேடிக்கை பார்ப்பது.வாக் பண்ணும்போது மனநலமும் உடல்நலமும் மேம்படும்.
அறுசுவையில் அரட்டை அடிப்பது.
வாய்க்கு ருசியா சாப்பிட வாக் போறமாதிரி போய் எதாவது வாங்கிவந்து டிவி பார்த்துட்டே சாப்பிடுவது. இன்னும் தோணும் போது வாரேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்