ஆட்டுக்கால் பாயா கிரேவி

தேதி: December 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (12 votes)

ஆட்டுக்கால் - 10
வெங்காயம் - 4
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3 + அரைக்க 2
தேங்காய் பால் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
முந்திரி - 10
கசகசா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை, லவங்கம், ஏலக்காய் - 4
எண்ணெய்

தேங்காய் துருவல், முந்திரி, கசகசா, 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும். இரண்டு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். ஆட்டுக்காலை சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்.
தாளித்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதங்கிய பின்பு வேக வைத்துள்ள ஆட்டுக்கால் கலவை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
நன்றாக கொதிக்கும் போது தேவையான அளவு தனி மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் தேங்காய் பால் சேர்க்கவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.
சுவையான ஆட்டுக்கால் பாயா கிரேவி தயார்.
சூடான சப்பாத்தி (அ) நாண் (அ) பரோட்டாவுடன் பரிமாறவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

வாவ்... ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க குறிப்பை பார்ப்பது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. :) சூப்பர் குறிப்பு. அம்மா செய்ததா? நீங்க செய்ததா கனி?? வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின்க்கு மிக்க நன்றி

( ஸ்பெஷல் தான்க்ஸ் டூ பத்மா மேடம். நீங சொன்ன மாதிரி போடுவீங்கனு தெரியும் ஆன இவ்லோ சீக்ரமா போடுவீங்கனு தெரியாது இப்பொவெ சொல்லிடுரேன் மேடம் :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனிதா அக்கா: மிக்க நன்றி நான் தான் அக்கா பன்னேன் அக்கா அம்மாகு லாஸ்ட் மந்தான் யூஸ்ட்ரஸ் சர்ஜெரி பன்னாங சோ அம்மா இப்பொலாம் சமைக்ரது இல்ல நானே தான் சமைக்ரேன் அக்கா, அம்மா நல்லா இருக்கு போது நானும் அம்மாவும் மாத்தி மாத்தி சமைபோம் இப்பொலாம் நான் மட்டும் தான் அக்கா சமைக்ரேன் .வாழ்த்துக்களூக்கு மிக்க நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி ஆட்டுக்கால் பாயா சூப்பரா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்.....

மிக்க நன்றி சாதிக்கா அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

kani mozhi epdi irukeengama? Aatu kaal paaya supera irukuma..naangalum idae madiri tan seivom but naanga coconut araithu viduvom..ungaludayadha kandippa try panraen pa..

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

ஷம்னாஷ் அக்கா உங்கலின் பதிவிர்க்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாவ்...கனி ஆட்டுக்கால் பாயா சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.........
ரொம்ப நல்லா பண்ணி இருக்க...
வாழ்த்துக்கள்........

ஷமீலா அக்கா மிக்க நன்றி உங்கலின் பாராட்டிற்க்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க. சுவையான குறிப்பு.படங்கள் அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!

பசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.
ஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)

கனி கலக்க்லாயிருக்குமா பாயா எனக்கு கொடுக்காம சாப்பிட்டு இருக்கே வயித்தவ்லிச்சா என் கன்னுதான் சுத்திபோடும்போது என் பேரசொல்லுமா வாழ்த்துக்கள்

நிஷாம்மா உங்கலுக்கு இல்லாமலா அடுத்த டைம் செய்யும் பொது கனிப்பா பார்சல் உண்டு ஹ்ம்ம் ஆ ஆ லைட் ஆஹ் வயித்த வலிகுர மாரி இருக்கே நிஷா அக்கா உங்க பேர் சொன்னதும் வலி போய்டுச்சே

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹலிலா அக்கா பதிவிற்க்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி,ஆட்டுக்கால் பாயா ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க;படங்கள் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அக்கா பதிவுகளுக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி ஆட்டுக்கால் பாயா ரொம்ப அழகா செய்திருக்கேமா வாழ்த்துக்கள்...:)பார்த்ததும் சாப்பிடனும் போல் உள்ளது.

SSaifudeen:)

ஷமீஹா அக்கா வாழ்த்துக்கு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி,
சூப்பரான குறிப்பு..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நல்ல குறிப்பு.இந்தியா வந்தா கட்டாயம் செய்து பார்க்கணும்.வாழ்த்துக்கள்.

Kalai

கவிதா அக்கா உங்கலின் வாழ்திர்க்கும் வருகைக்கும் நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலா அக்கா ஹ்ம்ம் இந்தியா வந்து சென்சு பார்த்துடு கட்டாயம் சொல்லனும் எப்டி இருந்துச்சு நு வருகைக்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹேய் சூப்பர் ரெசிபி நல்லா செய்திருக்கிறடா. இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்டா கனி:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்து அக்கா இந்த ரெசிப்பிய பார்தாங்கலா இல்லயானு யோசிச்சுட்டே இருந்தேன் பதிவு போட்டுடீங்க அக்கா வாழ்துக்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு,
,நல்ல குறிப்பு,
வாழ்த்துக்கள் கனி(:-

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி அருட்செல்வி அக்கா வருக்கைக்கும் வாழ்துக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

HI,
ENNAKU 11 MONTHS BABY IRRUKKU IDHU POLA SEITHU KODUKALAMA

NE ENNA NINAIKKINRAYO ADHUVAGAVE AAGIRAI

ஹாய் அவந்திக்கா அக்கா எனக்கு பாப்பாக்கு இந்த டிஷ் குடுக்கலாமானு தெரிலா ஆனா காரம் இல்லாம குடுக்கலாம் நு நினைக்ரேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி, ஆட்டுக்கால் பாயா அயிட்டங்களின் எண்ணிக்கை கண்னை கட்டினாலும்,, டேஸ்ட் வாயடைச்சுடும் போல இருக்கு. பொறுமையா பண்ணியிருப்பீங்க போல இருக்கு. செய்முறையும், விளக்கங்களும் அருமை. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா அக்கா வாழ்த்துக்கலுக்கு மிக்க நன்றி நா இபோதான் உங்கலோட ரச்குல்லா ரெசிபி பார்த்துட்டு இருந்தேன் அக்கா செமய இருந்துச்சு அக்கா உங்கலின் அன்பான பதிவுக்கு நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பர்வ். அழகா, அருமையா, விளக்கமான படங்களுடன் தெளிவான குறிப்பு. நிச்சயம் அம்மாவை செய்து தர சொல்லி சாப்பிட போறேன். வாழ்த்துக்கள் :)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

சுதா அக்கா மிக்க நன்றி உங்கலின் பதிவுக்கும் வாழ்த்துக்கும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Super tasty